குடியிருப்போர் அல்லாத இந்தியர்களுக்கு (NRIs)#உள்ள
வைப்புத் திட்டங்களின் அம்சங்கள்
(ஏப்ரல் 21, 2011 தேதிய நிலவரப்படி)
விவரங்கள் |
அந்நிய நாணய (குடியிருப்போரல்லாதவர்) கணக்கு (வங்கிகள்) திட்டம் FCNR(B) கணக்கு |
குடியிருப்போரல்லாதவர் (வெளிநாடு) ரூபாய்க் கணக்குத் திட்டம் (NRE கணக்கு) |
குடியிருப்போரல்லாதவர் பொதுமுறை ரூபாய்க் கணக்குத் திட்டம்
(NRO கணக்கு) |
யார் கணக்கு தொடங்கலாம் |
குடியிருப்போரல்லாத இந்தியர் / பங்களாதேசம், பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த தனிநபர்கள் நிறுவன உரிமையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை |
குடியிருப்போரல்லாத இந்தியர் / பங்களாதேசம், பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த தனிநபர்கள் நிறுவன உரிமையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை |
இந்தியாவுக்கு வெளியே வாழ்பவர்கள் (நேபாளம், பூட்டான் நாட்டவர் நீங்கலாக) பங்களாதேசம் சார்ந்தோர்/ பாகிஸ்தான் நாட்டினத்தவர்/ நிறுவனங்கள் ஆகியோருக்கு இதர வர்த்தகக் கடன் பிரிவுகளுக்கு## இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை) |
இணைந்த கணக்கு |
இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்போரல்லாத தனிநபர்களின் பெயர்களில் இருக்கும். இதில் எல்லா நபர்களும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினராக இருக்கவேண்டும் |
இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்போரல்லாத தனிநபர்களின் பெயர்களில் இருக்கும். இதில் எல்லா நபர்களும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினராக இருக்கவேண்டும் |
இந்தியாவில் வாழும் நபர்களுடன் சேர்ந்து கணக்கு வைத்துக் கொள்ளலாம் |
நியமன வசதி |
அனுமதி உண்டு |
அனுமதி உண்டு |
அனுமதி உண்டு |
கணக்கு வைத்துக் கொள்ளும் நாணயம் |
பவுண்டு, ஸ்டேர்லிங், அமெரிக்க டாலர், ஜப்பான் யென், யூரோ, கனடா டாலர் மற்றும் ஆஸ்திரேலியா டாலர் |
இந்திய ரூபாய் |
இந்திய ரூபாய் |
வாழும் நாட்டுக்கு மாற்றக்கூடியது |
வாழும் நாட்டுக்கு மாற்றக்கூடியது |
வாழும் நாட்டுக்கு மாற்றக்கூடியது |
மாற்றுவதற்கு இயலாது. கணக்கில் 1).நடப்பு வருமானம் 2). இந்தியாவில் வாரிசு அடிப்படையிலோ பேச்சு வார்த்தையின் அடிப்படையிலோ பெறப்பட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட சொத்தினை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தினைக் கொண்ட குடியிருப்போரல்லாதவரின் பொதுமுறை கணக்கில் இருந்து ஒரு நிதி ஆண்டுக்கு 1 மில்லியன் டாலர்கள் வரை விதிமுறைக்கு உட்பட்ட நேர்மையான நோக்கத்திற்காக செலவிடலாம் |
கணக்குகளின் வகைப்பாடு |
குறித்த கால வைப்புக் கணக்கு மட்டும் |
சேமிப்பு, நடப்பு, தொடர் வைப்பு, நிலைவைப்பு ஆகிய கணக்குகள் |
சேமிப்பு, நடப்பு, தொடர் வைப்பு, நிலைவைப்பு ஆகிய கணக்குகள் |
நிலைவைப்புக் கணக்குகளின் காலம் |
ஓர் ஆண்டுக்கு குறையாமல் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் |
வங்கியின் தனியுரிமை முடிவுப்படி |
இந்தியாவில் வாழ்வோர் கணக்குகளுக்கு ஏற்புடையவாறு |
வட்டிவீதம் |
இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கிகள் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத் துறை விதிக்கும் விகிதத்திற்கு ஏற்ப CAP க்கு உட்பட்டு, அந்தந்த முதிர்வு காலத்திற்கு ஏற்ப, அந்தந்த அந்நியச் செலாவணிக்கு ஏற்ப, LIBOR/SWAP வீதத்திலிருந்து 100 அடிப்படை புள்ளிகள் அதிகமாக உள்ள வரம்பிற்குள் வட்டிவிகிதம் நிர்ணயிக்கப்படும். இது நவம்பர் 15, 2008 வேலை
நேர முடிவிலிருந்து அமலாக்கம் செய்யப் படுகிறது.
மாறுபடும் வட்டிவிகித வைப்புகளைப் பொறுத்த வரை, SWAP விகிதத்திற்கு 100 அடிப்படை புள்ளிகள் அதிகமாக அந்தந்த அந்நியச் செலாவணி/ முதிர்வு காலம் இவற்றிற்கு ஏற்ப இந்த வரம்பிற்குள் நிர்ணயிக்கப்படும்.
மாறுபடும் வட்டிவிகிதத்தில் வட்டிவிகித மாற்றுக்காலம் 6 மாதங்களாகும். |
இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கிகள் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத் துறை விதிக்கும் விகிதத்திற்கு ஏற்ப CAP க்கு உட்பட்டு.
நிலைவைப்புக் கணக்கு: முதிர்வு காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முந்தைய கடைசி வேலநாளில் அமெரிக்க டாலருக்கு உரிய LIBOR/SWAP வீதத்தோடு 175 அடிப்படைப் புள்ளிகளைக் கூட்டி உச்சவரம்பு கணக்கிடப்படும். இந்த வரம்பிற்குள், ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்வுடைய NRE வைப்புகள் மீது வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு அளிக்கப்படும். இது நவம்பர் 15, 2008 வேலை
நேர முடிவிலிருந்து அமலாக்கம் செய்யப் படுகிறது. மூன்றாண்டுக்கு அதிகமான முதிர்வுக்காலம் உடைய வைப்புகளுக்கு மூன்றாண்டுக்கு முதிர்வுக்குரிய வட்டி விகிதமே அளிக்கப்படும்.
சேமிப்பு வங்கிக் கணக்கு:
உள்நாட்டுச் சேமிப்புக் கணக்கில் கொடுக்கப்படும் வட்டி விகிதத்தின் படியே இதற்கும் அளிக்கப்படும். தற்சமயம் 3.5% ஆகும். |
குறித்த வைப்புக் கணக்குகளுக்கான வட்டி வீதத்தை முடிவு செய்ய வங்கிக்கு உரிமை உண்டு |
ஆள் செயலுரிமைப் பத்திரம் (குடியிருப்போர் அல்லாத நபர் குடியிருப்பவருக்கு அளிப்பது) |
ஆள் செயலுரிமைப் பத்திரத்தின் செயல்பாடு உள்நாட்டுத் தொடர்பான குறிப்பிட்ட பணம் வழங்கல், பணம் எடுத்தல் அல்லது கணக்குடையோர் பெயரில் பணம் செலுத்துதல் போன்ற வரையறுக்கப்பட்ட வங்கிச் செயல் முறைகள் |
ஆள் செயலுரிமைப் பத்திரத்தின் செயல்பாடு உள்நாட்டுத் தொடர்பான குறிப்பிட்ட பணம் வழங்கல் பணம் எடுத்தல் அல்லது கணக்குடையோர் பெயரில் பணம் செலுத்துதல் போன்ற வரையறுக்கப்பட்ட வங்கிச் செயல் முறைகள் |
ஆள் செயலுரிமைப் பத்திரத்தின் செயல்பாடு உள்நாட்டுத் தொடர்பான குறிப்பிட்ட பணம் வழங்கல் பணம் எடுத்தல் அல்லது கணக்குடையோர் பெயரில் பணம் செலுத்துதல் போன்ற வரையறுக்கப்பட்ட வங்கிச் செயல் முறைகள்
இது ஒரு நிதியாண்டிற்கு 1 மில்லியன் அமெரிக்கடாலர் என்ற உச்சவரம்பிற்குட்பட்டது |
கடன்கள்
அ. இந்தியாவில்:
1.கணக்கு உடையோருக்கு
2. மூன்றாம் நபர்களுக்கு
ஆ. வெளிநாட்டில் :
1.கணக்கு உடையோருக்கு
2.மூன்றாம் நபர்களுக்கு |
ரூபாய் 100 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது
ரூபாய் 100 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது.
(எந்த நிதியும் இந்தியாவிற்கு அனுப்பப் படாமல் வெளிநாட்டில் மட்டுமே உபயோகிக்கப் படும்பட்சத்தில்)
அனுமதிக்கப்படுகிறது. (எந்த நிதியும் இந்தியாவிற்கு அனுப்பப் படாமல் வெளிநாட்டில் மட்டுமே உபயோகிக்கப் படும்பட்சத்தில்) |
ரூபாய் 100 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது
ரூபாய் 100 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது
அனுமதிக்கப்படுகிறது.
(எந்த நிதியும் இந்தியாவிற்கு அனுப்பப் படாமல் வெளி நாட்டில் மட்டுமே உபயோகிக்கப் படும்பட்சத்தில்)
அனுமதிக்கப்படுகிறது.
(எந்த நிதியும் இந்தியாவிற்கு அனுப்பப் படாமல் வெளிநாட்டில் மட்டுமே உபயோகிக்கப் படும்பட்சத்தில்)
|
நடைமுறைகளிலுள்ள விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது@
நடைமுறைகளிலுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது@@
அனுமதி இல்லை
அனுமதி இல்லை |
இ. இந்தியாவில் வெளிநாட்டு நாணயக்கடன்கள்
1.கணக்கு உடையோருக்கு
2.மூன்றாம் நபர்களுக்கு |
ரூபாய் 100 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது
அனுமதி இல்லை |
அனுமதி இல்லை
அனுமதி இல்லை |
அனுமதி இல்லை
அனுமதி இல்லை |
கடன் நோக்கம்
இ. இந்தியாவில் :
1.கணக்கு உடையோருக்கு
|
1)தனிப்பட்ட நோக்கத்துக்காக அல்லது வணிக நடவடிக்கைகளை மேற் – கொள்வதற்காக*
2)மாற்றுவதற்கு இயலாத அடிப்படையில் இந்தியக் குழுமங்களில்/ நிறுவனங்களில் நேரடியாக மூலதனத்தில் முதலீடு செய்வதற்காக
3) அடுக்கு மாடிக் குடியிருப்பு/ வீடு (இந்தியாவில்) தன் சொந்த பயன்பாட்டுக்கு வாங்குவது (தயவுசெய்து FEMA- 9ஆம்பத்தி 2-5 பிரிவு களைப் பார்க்க |
1)தனிப்பட்ட நோக்கத்துக்காக அல்லது வணிக நடவடிக்கைகளை மேற் – கொள்வதற்காக*
2)மாற்றுவதற்கு இயலாத அடிப்படையில் இந்தியக் குழுமங்களில்/ நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்வதற்காக
3)அடுக்கு மாடிக் குடியிருப்பு /வீடு (இந்தியாவில்) தன் சொந்த பயன்பாட்டுக்கு வாங்குவது (தயவுசெய்து FEMA- 6(a)1-5ம் பத்தி பிரிவுகளைப் பார்க்க |
தனிப்பட்ட நோக்கத்துக்காக அல்லது வணிக நோக்கதுக்காக*
|
2.மூன்றாம் நபர்களுக்கு |
தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நடவடிக்கைகளுக்காக* நிதி ஆதாரமுள்ள அல்லது நிதிஆதாரமில்லா அடிப்படையில் வசதிகளைப் பெறுவது (தயவுசெய்து FEMA- 9ஆம்பத்தி 2-5 பிரிவு களைப் பார்க்க) |
தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நடவடிக்கைகளுக்காக* நிதி ஆதாரமுள்ள அல்லது நிதி ஆதாரமில்லா அடிப்படையில் வசதிகளைப் பெறுவது (தயவுசெய்து FEMA- 6(b) பத்தி 1-5 பிரிவு களைப் பார்க்க) |
தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நோக்கதுக்காக* |
வெளிநாட்டில்
கணக்கு உடையோருக்கு
மற்றும் மூன்றாம் நபர்/ நபர்களுக்கு |
நேர்மையான நோக்கத்திற்காக நிதி ஆதாரமுள்ள, நிதி ஆதாரமில்லா அடிப்படையில் வசதிகள் |
நேர்மையான நோக்கத்திற்காக நிதி ஆதாரமுள்ள, நிதி ஆதாரமில்லா, அடிப்படையில் வசதிகள் |
அனுமதிக்கப்படாது |
* இக்கடன்களை மறுகடன் வழங்குவது, வேளாண் நடவடிக்கைகள், தோட்டப்பயிர் நடவடிக்கைகள் மனையிட வணிகம் ஆகிய நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.
குறிப்பு:
1. இந்தியாவில் வாழும் ஒரு நபர் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு வேலை தேடியோ, வணிகத்தில் ஈடுபடவோ, விடுமுறையைக் கழிக்கவோ அல்லது வேறு எந்த நோக்கத்துடனோ சென்று அங்கு எவ்வளவு காலம் தங்குவார் என்பது உறுதியாகத் தெரியாத சூழ்நிலையில் அவரது கணக்கு இந்தியாவில் வாழ்வோர் கணக்காகவே தொடரும் அத்தகைய கணக்கினை குடியிருப்போரல்லாத இந்தியர் (சாதாரண) ரூபாய்க் கணக்கு பிரிவில் காட்டலாகாது.
2. குடியிருப்போரல்லாத இந்தியர் (வெளிநாடு) NRE வெளிநாட்டில் வாழ்வோரின் அந்நியச் செலாவணி கணக்கு FCNR(B) ஆகிய கணக்குகளைத் தொடங்க தடையில்லா அந்நியச் செலாவணி பயன்படுத்தப்பட்டு, இக்கணக்குகளுக்குச் சேர வேண்டிய வட்டி இந்தியப் பணத்திலேயே நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் வாழும் அல்லது குடியிருப்போரல்லாத இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் நிலையில், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் வாழ்வோர் இந்தியக்குடிமக்களாகவோ அல்லது இந்திய வம்சவளியினராகவோ இருப்பின், அவர்கள் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் (ADs) வங்கி கணக்குகளைப் பராமரிக்கலாம்.
3. 2000 மே 3இல் வெளியிடப்பட்ட விவர அறிக்கை எண் FEMA 5/2000 RB விதிமுறை 4(4)இன்படி நேபாளம், பூடான் வாழும் நபரின் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் (ADs) வங்கிக் கணக்கைத் தொடங்கி ரூபாய் கணக்காக வைத்துக் கொள்ளலாம்.
4. குடியிருப்போரல்லாத இந்தியர்களுக்கென்று (NRI) இருக்கும் பல்வேறு வகை முதலீடு திட்டங்களில் அவர்கள் பங்கு பெறலாம் என்பது குறித்த விதிமுறைகள் எண் FEMA 5, மே 3 ஆம் தேதி 2000ல் வெளியான விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வப்போது இதில் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம். இது தொடர்பான விபர அறிவிக்கையும் AP (DIR தொடர்) சுற்றறிக்கைகளும் நமது இணையதளத்தில் www.rbi.org.in (www.rbi.org.in à இணையதள வரைபடம் àதொகுப்புச்சுற்றறிக்கை) ஆகியவற்றைக் காணலாம். வங்கிகள் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு வெளியிடப்பட்டது. “உள்நாட்டு பொதுமுறை ரூபாய் (NRO) கணக்கு, குடியிருப்போரல்லாதவர்(வெளிநாடு) NR(External) குடியிருப்போரல்லாதோருக்கு கணக்கு(NRE) ஆகியவற்றில் வைத்திருக்கப்படும். ரூபாயிலான வைப்புத்தொகைகளின் மீதான வட்டிவிகிதம் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை” மற்றும் அந்நிய நாணய (குடியிருப்போரல்லாதவர்) கணக்கு (வங்கிகள்) (FCNR(B) வைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அடங்கிய தொகுப்புச் சுற்றறிக்கை” ஆகிய இரண்டும் எங்களின் இணையதளத்தில் உள்ளன. அவற்றை www.rbi.org.in àSitemapàMaster Circular என்றவாறு இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
5. வங்கிகளும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளும் கேட்புவரைவோலையின் மற்றும் அந்நிய பணத்தை ரூபாய்களாக மாற்றியதன்பேரில் வெளியிடப் பட்ட வங்கி காசோலைகளின் வரவுகள் என்.ஆர்.இ.(NRE) கணக்குகளில் (இதற்கான சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட வங்கி வகைI/வகை II அளிக்கும்பட்சத்தில்) வரவு வைக்கப்படும்.
6. வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் இந்தியாவிற்கு வெளியில் உள்ள மூன்றாம் நபர்களுக்கு முதிர்வடைந்த எஃப்.சி.என்.ஆர்.-பி (FCNR-B) வைப்புகளின் வரவை அனுப்பி வைக்க அனுமதிக்கலாம். பரிமாற்றம் உண்மையானதாகவும் நியாயமானதாகவும் கணக்குதாரரால் அங்கீகரிக்கப்பட்டும், பரிமாற்றத்தின் உண்மைத்தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட வங்கி திருப்தி அடையும்பட்சத்தில், இதை அங்கீகரிக்கப்பட்ட வங்கி அனுமதிக்கலாம்.
# : இந்திய நாட்டவர் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபரைக் குறிக்கும் சொல் NRI ( குடியிருப்போரல்லாத இந்தியர்). (FEMA 5/2000 –RB மே 3, 2000 தேதியிட்ட அந்நியச் செலாவணி மேலாண்மை (வைப்புகள்) விதிகள் 2000ல் அறிவிக்கையில் பிரிவு (vi)
## : குடியிருப்போரல்லாத இந்தியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 60%ற்கும் குறையாமல் பங்களிப்பு (அக்கறை, உரிமை) கொண்டுள்ள குழுமம், கூட்டாண்மை வர்த்தக நிறுவனம், சங்கம், வர்த்தக நிறுவனம் ஆகியவை பன்னாட்டு வர்த்தக நிறுவனம் (OBC) என்று அழைக்கப்படும். இதில் பன்னாட்டு அறக்கட்டளை நிறுவனங்களும் அடங்கும். அதிலும் குடியிருப்போரல்லாத இந்தியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 60% மீட்க முடியாத பங்களிப்பை (அக்கறை, உரிமை) கொண்டிருத்தல் வேண்டும். அந்த அறக்கட்டளை நிறுவனம் செப்டம்பர் 16, 2003 அன்று செயல்பாட்டில் உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் அந்நியச் செலாவணி மேலாண்மை விதிகளின்படி பொது அனுமதி அளிக்கப்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்தாகவும் அது இருக்கவேண்டும்.
@: உள்ளூர்வாசிகளின் கணக்குகளுக்கு உரிய விதிகளின்படியே தனிப்பட்ட நோக்கத்திற்கோ அல்லது வர்த்தகத்திற்கோ (மறுபடி கடன் தரவோ, ரியல் எஸ்டேட் முதலீடு செய்வது, விவசாயம் மற்றும் தோட்டவேலைத் துறைகளில் ஈடுபடுவது தவிர)
@@: பின்வரும் நிபந்தனைகளுகுட்பட்டு (1) கடனாளியின் சொந்த உபயோகம் அல்லது வர்த்தகத்திற்கு மட்டுமே கடன் பயன்படுத்தப்படவேண்டும். (மீண்டும்கடன் தரவோ, ரியல் எஸ்டேட் முதலீடு செய்வது, விவசாயம் மற்றும் தோட்டவேலை ஆகியவை தவிர) (2) இந்திய ரிசர்வ் வங்கி அப்போது விதிக்கும் மார்ஜின் மற்றும் தள்ளுபடி சார்ந்த விதிமுறைகள் அனுசரிக்கப்பட்டனவா என்பதையும் அறிதல் (3) இத்தகு வர்த்தகம், தொழில் சார்ந்த கடன்கள் நிதி உதவிகளைப் பொறுத்தவரை பின்பற்றப்படும் கட்டளைகளும், நிபந்தனைகளும் இவற்றிற்குப் பொருந்தும்.
|