Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - Departments
 

துறைகள்

வாடிக்கையாளர் சேவைத் துறை

நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் மேலாண்மைத் துறை

வங்கி மேம்பாடு மற்றும் செயல் துறை

வங்கி மேற்பார்வைத்துறை

தகவல் பரிமாற்றத் துறை

பண நிர்வாகத்துறை

பொருளாதாரம்   மற்றும் கொள்கை ஆய்வுத் துறை

செலவு மற்றும் பட்ஜெட் கட்டுப்பாட்டுத் துறை

அந்நியச் முதலீடு மற்றும் செயல்பாட்டுத் துறை

அரசு வங்கிக் கணக்குத் துறை

தகவல் தொழில் நுட்பத்துறை

வங்கி சாரா நிதிநிறுவன மேற்பார்வைத் துறை

கொடுப்பு மற்றும் தீர்வு முறைத் துறை

புள்ளிவிவரம் மற்றும் தகவல் மேலாண்மைத்துறை

நிதிச் சந்தைகள் துறை

அந்நியச் செலாவணித்துறை

மனித வள மேம்பாட்டுத் துறை

ஆய்வுத் துறை  (வங்கிக்குள்)

உள்நாட்டு கடன் மேலாண்மைத்துறை

சட்டத்துறை

பணக் கொள்கைத் துறை

சொத்து நிர்வாகத் துறை

ஊரகத் திட்டம் மற்றும் கடன் துறை

செயலாளர் துறை

நகர்ப்புற வங்கிகள் துறை


கவர்னர்

தொலைபேசி எண்

நகலனுப்பி எண்

டாக்டர். டி. சுப்பாராவ்
கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம், 18வது தளம்
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001

22660868

22661784


துணை கவர்னர்கள்

தொலைபேசி எண்

நகலனுப்பி எண்

திருமதி எஸ் . கோபிநாத்   
துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம் 19வது தளம்
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001

22614228

22657604

டாக்டர் கே.சி. சக்கரபர்த்தி
துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம், 19வது தளம்
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001

22611097

22675277

டாக்டர் சுபிர் கோகர்ன்
துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம், 19வது தளம்
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001

(022) 22610990

(022) 22675831

திரு. ஆனந்த் சின்ஹா
துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம், 19வது தளம்
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22611089

 


நிர்வாக இயக்குநர்கள்

தொலைபேசி எண்

நகலனுப்பி எண்

திரு. வி.கே. சர்மா
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
17வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22630699

22659610

திரு. வி.எஸ்.தாஸ்
நிர்வாக இயக்குநர்
(தலைமை பொது தகவல் அதிகாரி மற்றும்
தலைமை ஊழல் ஒழிப்பு அதிகாரி)
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
17வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22621382

22658934

திரு ஜி. கோபாலகிருஷ்ணா
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
17வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22624090

22660797

திரு.ஹெச். ஆர். கான்
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
17வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22632591

22664402

திரு. டி.கே. மொஹந்தி
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
17வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22633146

22633145

 திரு. எஸ். கருப்பசாமி
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
17வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22611083

22632052

திரு. ஆர். காந்தி
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
17வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22611080

22675094


துறைகள்

தொலைபேசி எண்

நகலனுப்பி எண்

திரு சந்தீப் கோஸ்
தலைமை பொது மேலாளர்(பொறுப்பு)
முதன்மை தலைமை பொது மேலாளர்
நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் மேலாண்மைத்துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
21வது மாடி
மும்பை 400 001.

22611954

22658934

 

திரு. பி. மஹாபாத்ரா
தலைமை பொது மேலாளர்(பொறுப்பு)
வங்கி மேம்பாடு மற்றும் செயல் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
12வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001

22705688

22705691

திரு. ஜி. மஹாலிங்கம்
தலைமை பொது மேலாளர்
 நிதிச் சந்தைகள் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
23வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001

22610642

22634824

திரு ஜி. பத்மநாபன்
தலைமை பொது மேலாளர்
கொடுப்பு மற்றும் தீர்வுமுறைத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
14வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

022-22644995 

22659566

திரு ஜி.ஜகன்மோகன் ராவ்
தலைமை பொது மேலாளர் (பொறுப்பு)
வங்கி மேற்பார்வை துறை
இந்திய ரிசர்வ் வங்கி
சென்டர் 1, வெர்ல்டு ட்ரேடு சென்டர்  
கஃபே பரேடு
மும்பை-400 005.

22182528

22180157
22187932

டாக்டர் என். கிருஷ்ண மோகன்
தலைமை பொது மேலாளர்
பண நிர்வாகத்துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
4வது மாடி
அமர் கட்டிடம்
சர் பி.எம். ரோடு, கோட்டை
மும்பை 400 001.

22610900

22662442

திருமதி கிரேஸ் இ. கோஷி
தலைமை பொது மேலாளர் மற்றும் செயலாளர்
செயலாளர் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
16வது மாடி
மும்பை 400 001.

22610074

22701034

திரு சந்தீப் கோஸ்
தலைமை பொது மேலாளர்(பொறுப்பு)
மனிதவள மேம்பாட்டுத்துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
20வது மாடி
மும்பை 400 001.

22610301

22702524

திரு கே.கே.வோரா
தலைமை பொது மேலாளர்
உள்நாட்டு கடன் மேலாண்மைத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
23வது மாடி
மும்பை 400 001.

22610671

22644158

திருமதி தீபா ஸ்ரீவத்சவா
தலைமை பொது மேலாளர்
செலவு மற்றும் பட்ஜெட் கட்டுப்பாட்டுத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
முக்கிய அலுவலகம்
மும்பை-400 001.

22610468

22610535

டாக்டர் ஜனக் ராஜ்
பொறுப்பு ஆலோசகர்
பணக் கொள்கைத் துரை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
24வது மாடி
ஷாஹீத் பகத் சிங் ரோடு
மும்பை 400 001.

22610405

22651685

திரு ஜே.ஆர் .பி.ரத்னராவ்
தலைமை பொது மேலாளர் (பொறுப்பு)
அரசு வங்கி கணக்குத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில்
மும்பை- 400 008.

23016214

23008764

திரு ஏ.உத்கடா
தலைமை பொது மேலாளர்(பொறுப்பு)
நகர்ப்புற வங்கிகள் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
கார்மென்ட் ஹவுஸ்
டாக்டர் அன்னி பெசன்ட் ரோட், வர்லி
மும்பை-400 018.

24973050

24974030

திருமதி உமா சுப்ரமணியம்
தலைமை பொது மேலாளர் (பொறுப்பு)
வங்கிசாரா மேற்பார்வைத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
சென்டர் 1, வெர்ல்டு ட்ரேடு சென்டர்  
கஃபே பரேடு
மும்பை-400 005.

22184868

22150540
22162768

திருமதி தீபாலி பந்த் ஜோஷி
தலைமை பொது மேலாளர் (பொறுப்பு)
ஊரகத் திட்டம் மற்றும் கடன் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
13வது மாடி
மும்பை 400 001..

22610586

22610948

டாக்டர் ஏ.பி.சக்ரபர்த்தி
அதிகாரி-பொறுப்பு
புள்ளிவிவரம் மற்றும் தகவல் மேலாண்மைத்துறை
இந்திய ரிசர்வ் வங்கி
சி-8/9, பாந்த்ரா-குர்லா காம்ப்லெக்ஸ்
அஞ்சல் பெட்டி எண.8128, பாந்ரா (கிழக்கு)
மும்பை-400 051.

26571253

26542319

திரு. பி.எம்.மிஸ்ரா
 அதிகாரி-பொறுப்பு
பொருளாதாரம் மற்றும் கொள்கை
ஆய்வுத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
7வது மாடி
மும்பை 400 001.

22610761

22630061

தலைமை பொது மேலாளர் (பொறுப்பு)
ஆய்வுத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
சி-7, பாந்த்ரா-குர்லா காம்ப்லெக்ஸ்
பாந்த்ரா (கிழக்கு)
மும்பை-400 051.

26572308

26542029

தலைமை பொது மேலாளர்
அந்நியச்முதலீடு மற்றும் செயல்பாட்டுத்துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
22வது மாடி
மும்பை 400 001.

22631045

22664667

டாக்டர் ஏ.எஸ்.ராமசாஸ்திரி
தலைமை பொது மேலாளர்
தகவல் தொழில்நுட்பத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
14வது மாடி
மும்பை 400 001.

22624856

22691557

திருமதி எம். ஹேமசந்திரா
தலைமை பொது மேலாளர்
அந்நியச்ச் செலாவணித் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
10வது மாடி
மும்பை 400 001.

22610628

22615330

திரு எஸ் . வெங்கடாசலம்
தலைமை பொது மேலாளர்(தொழில்நுட்ப)
சொத்து நிர்வாகத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
5வது மாடி
மும்பை 400 001..

22610950

22660807

திரு காஸா சுதாகர்
தலைமை பொது மேலாளர்
வாடிக்கையாளர் சேவைத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
1வது மாடி, அமர் கட்டிடம,
சர். பி.எம். ரோடு, கோட்டை
மும்பை 400 001

22630483

22631744

திரு ஜி.எஸ்.ஹெக்டே
முதன்மை சட்ட ஆலோசகர்
சட்டத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
23வது மாடி
மும்பை 400 001.

22153954

 22153372

டாக்டர் ரபி என்.மிஸ்ரா
தலைமை பொது மேலாளர் (பொறுப்பு)
நிதிநிலை ஸ்திரத்தன்மை பிரிவு
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம், 24வது தளம்  
மும்பை- 400 001

 

 

ஆட்சி மொழித் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
கார்மெண்ட் ஹவுஸ்
டாக்டர் அன்னிபெசன்ட் ரோடு, வர்லி
மும்பை 400018

24948263

24982077

திருமதி அல்பனா கில்லாவாலா
தலைமை பொது தகவல் அதிகாரி
தகவல் பரிமாற்றத் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
மும்பை 400 001.

22660502

22660358
22658269

வாடிக்கையாளர் சேவைத் துறை

வாடிக்கையாளர் சேவைத் துறை துவக்கப்பட்டதன் நோக்கம் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர் சேவை சார்ந்த செயல்களுக்கு சரியான முக்கியத்துவம் அளிப்பதாகும்.  இத்துறை 2006 ஜூலை 1 முதல் செயல்பாட்டை துவக்கியது.

  • வாடிக்கையாளர் சேவை பற்றிய தகவல்/அறிவுரைகளைப் பலர் அறியச் செய்தல், வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி குறை தீர்த்தல்
  • ரிசர்வ் வங்கி அலுவலகங்கள்/துறைகள் மூலம் அளிக்கப்பட்ட சேவைகளில் குறைதீர்க்கும் முறைகளை மேற்பார்வை செய்தல்
  • வங்கிகள் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் வங்கிக் குறை தீர்ப்பாணையத்தை (Banking Ombudsman) நிர்வகித்தல்
  •  இந்திய வங்கி விதிகள் மற்றும் தரக்குழுவிற்காக (Banking Codes and Standards Board of India) (BCSBI) ஒன்றிணைக்கும் துறையாக செயல்படுதல்
  • வங்கிகள் அளிக்கும் வாடிக்கையாளர் சேவையில் எழும் புகார்களை இந்திய ரிசர்வ் வங்கி நேரில் பெற்று குறைதீர்த்தலை உறுதிசெய்தல்
  • வங்கிகள், இந்திய வங்கிகள் சங்கம் (IBA), இந்திய வங்கி விதிகள் மற்றும் தரக்குழு (BCSBI), வங்கிகள் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் அலுவலகங்கள் (BO) மற்றும் இந்திய ரிசர்வ வங்கியின் ஒழுங்குபடுத்தும் துறைகள் (வாடிக்கையாளர் சேவை மற்றும் குறைதீர்த்தல் சம்பந்தமாக) இவற்றையெல்லாம் இணைக்கும் அலுவலகமாக செயல்படுதல்.

பண நிர்வாகத்துறை

முக்கியப் பணிகள்

இத்துறை சட்டபூர்வ பணியாகிய, ரூபாய் நோட்டுகள், நாணயம் வழங்கல், மற்றும் பண நிர்வாகம் இவற்றை கவனித்துக்கொள்கிறது.  அதோடு புதிய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இவற்றின் தேவைகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு, நான்கு அச்சகங்களுக்கும் (Press) நாணயகூடங்களுக்கும், தேவைகளை வழங்குமாறு விண்ணப்பம் செய்கிறது.  அந்த விண்ணப்பங்களின் பேரில் பெறப்படும் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இவற்றை 18 பணம் வழங்கல் அலுவலகங்கள், 1 துணை அலுவலகம், 1 பணக்கருவூலம் மற்றும் விரிவான  முறையில் இணைக்கப்பட்ட  பணக்கருவூலங்கள் (2005 – ஜூன் 30 வரை 4435), சிறிய கருவூலங்கள் (repositories) மற்றும் சிறு நாணய கிடங்குகள் (Small Coin depots) (2005 ஜூன் 30 வரை 4060) ஆகியவற்றிற்கு வினியோகம் செய்கிறது.  மேலும் இத்துறை புழக்கத்தில் உள்ள் ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மற்றும் கருவூலங்களின் இருப்பில் உள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றின்  கணக்கையும் பராமரிக்கிறது.

ஒரு பணக்கருவூலம் என்பது, பணம் வழங்கல் துறையின் நீட்டிக்கப்பட்ட கிளையாக இருக்கிறது.  இதை வணிக வங்கிகளோடு சேர்ந்து நிர்வகிக்கிறது, இதில் புதிய மற்றும் திரும்ப புழங்கும் நிலையில் உள்ள ரூபாய் நோட்டுகளை சேமித்து வைக்கிறது.  இதிலிருந்து வணிக வங்கிகள் தங்கள் தேவைக்கேற்ப பணத்தை திரும்ப எடுக்கவோ, மற்றும் அதிகப்படியான்  பணத்தை முதலீடு வைக்கவோ, பணம் வழங்கல் துறை அனுமதிக்கிறது.

ஒரு சிறிய கருவூலம் (repository) என்பது, பணக்கருவூலத்தின் (Currency Chest) நீட்டிக்கப்பட்ட கிளையாக இருக்கிறது.  ஒன்று அல்லது பல உள்ளூர் கிளைகளில்  பணக்கருவூலத்திலுள்ள பணத்தின்  ஒரு பங்கை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.  ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள அழுக்கு ரூபாய் நோட்டுகளும் பணக்கருவூலத்தின் சேமித்து வைக்கப்படுகிறது.

இத்துறை இந்திய ரிசர்வ்  வங்கியின் ரூபாய் நோட்டுகளை திரும்ப வழங்கும் விதிமுறைகளை (Note Refund Rules) நிர்வகிக்கிறது.  இந்த விதிகளுக்குட்பட்டு கிழிந்த மற்றும் பழுதடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.  புழக்கத்தில் விடுவதற்கு தகுதியில்லாத பழுதடைந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

ரூபாய் நோட்டுகளில் கூட்டிணைவுக்காக (incorporation) இத்துறை அவ்வப்போது ரூபாய் நோட்டுகளின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை மறுபரிசீலனை செய்கிறது.

இத்துறை, ரூபாய் நோட்டுகளில்  மெய்த்தன்மையை பலப்படுத்துவதற்கு தேவைப்படும் வழிவகைகளை தீர்மானிக்க, கண்டுபிடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் அம்சங்களை ஆராய்ந்து, பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்துகிறது.

இத்துறை பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்டின்  (BRBNMPL) ஒன்றிணைக்கும் துறையாகவும் செயல்படுகிறது.

நடப்பு விஷயங்கள்

இத்துறை போதுமான  அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் தன் நோக்கத்தை தீவிரமாக பின் பற்றுகிறது. இத்துறை ரூபாய் நோட்டுகள் பரிசீலனை மற்றும் அழித்தலில் வட்டார அலுவலகங்களின்  திறனை மேம்படுத்த ரூபாய் நோட்டுகள் சரிபார்த்தல் மற்றும் வகைபடுத்தல் (CVPS)  எந்திரங்களை, தேவைக்கேற்ப நிறுவுகிறது.  ரூபாய் நோட்டுகளின் அச்சுச்செலவை குறைக்கும்/கட்டுப்படுத்தும் நோக்கில், புழக்கத்தில் விடும் ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலத்தை அதிகரிக்கும் வழிமுறைகளையும் கவனிக்கிறது.

அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாகவும், பழுதடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்று மதிப்பை வழங்குவதிலும், வாடிக்கையாளர் சேவையை மேம்படச்செய்கிறது.

பணம் வழங்கல் அலுவகங்களின்  பட்டியல்

அஹமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர் (நேவி மும்பை), போபால், புவனேஷவர், சண்டிகர், சென்னை, குவகாத்தி, ஹைதராபத், ஜெய்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, மும்பை, நாக்பூர், புதுதில்லி,

பாட்னா, மற்றும் திருவனந்தபுரம்.

துணை அலுவலகம் மற்றும் பணக்கருவூலம், முறையே லக்னோ மற்றும் கொச்சியில் அமைந்துள்ளது.

நகர்ப்புற வங்கிகள் துறை

ஆரம்பக் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பணியினை நகர்ப்புற வங்கிகள் துறை கவனிக்கிறது.  கூட்டு ஊரக நிதிக்கடன் அமைப்பிற்கு வெளியேயுள்ள இந்த வங்கிகளை தேசிய வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD) மேற்பார்வை செய்கிறது.

இத்துறையின்  செயல்பாடுகள் விரிவான நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.  அவை – ஒழுங்குபடுத்துதல், மேற்பார்வை செய்தல், செயல்படுத்துதல், மற்றும் வளர்ச்சியடைய செய்தல் “ நகர்புற கூட்டுறவு வங்கிகள்” என்று எல்லோராலும் அறியப்பட்டிருக்கிற ஆரம்ப கூட்டுறவு வங்கிகளை முறைபடுத்தும் மற்றும் மேற்பார்வை செய்யும் பணிகளை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் மற்றும் மாநில அரசுகள் ஒத்துழைப்புடன், நகர்புற வங்கிகள் துறை நிறைவேற்றுகிறது.

சேமிப்புக்கணக்குகளுக்கு வட்டி வீத அளவையும் கடன்களுக்கு குறைந்தபட்ச வட்டி வீத அளவையும் மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கி முறைப்படுத்துகிறது.

நிகரத் தேவை மற்றும் காலப்பொறுப்புகளில் (Net Demand and Time Liabilities) விகிதாச்சார அளவாக, குறைந்தபட்ச பண ஒதுக்கீடு விகிதத்தையும் (minimum cash reserve) ஆரம்ப மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்ற சொத்துகளில முதலீடு செய்வதற்கான் விதிமுறைகளையும் இந்திய ரிசர்வ் வங்கி வகுத்திருக்கிறது.

தொழிற்சாலை பணிகளுக்கு ஊக்க நிதியளிக்கும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட குடிசை மற்றும் மிகச்சிறிய தொழில்களின்  22 விரிவான  குழுக்களுக்கு நிதியளிப்பதற்காக, ரிசர்வ் வங்கியால் நகர கூட்டுறவு வங்கிகளின் சார்பாக மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு அளிக்கப்படும் மறுநிதியளிப்பு வசதிகளை இந்தத்துறை ஒருங்கிணைக்கிறது.

முன்னேற்ற செயலின்  ஒருபகுதியாக, நகர கூட்டுறவு வங்கிகளின்  மூத்த அதிகாரிகளுக்கு, சிறப்பு வகுப்புகளை, ரிசர்வ் வங்கி தன்னுடைய வேளாண் வங்கிக்கல்லூரியில் நடத்துகிறது.

ரிசர்வ் வங்கியின்  மத்தியகுழு உறுப்பினர் திரு.K.மாதவராவ் அவர்களைத் தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை பின்பற்றும்வகையில் புதிய வங்கிகளை துவக்க உரிமம் பெறும் விதிமுறைகளையும், கூட்டுறவு வங்கிகள் புதிய கிளைகளைத் துவக்க உரிமம் பெறும் விதிமுறைகளையும், ரிசர்வ் வங்கி சமீபத்தில் மறுபரிசீலனை செய்திருக்கிறது.

பல மாநிலங்களில் “நலிவுற்றவை” என்று அடையாளம் காணப்பட்ட கூட்டுறவு வங்கிகளின்  செயல்பாடுகளை, மாநில கூட்டுறவு துறைகள், மற்றும் தலைமை கூட்டுறவு வங்கிகள் இவற்றின் ஒத்துழைப்புடன், ரிசர்வ் வங்கி மிகக் கவனமாய் கண்காணிப்பு செய்கிறது.

ஊரகத் திட்டம் மற்றும் கடன் துறை

விவசாயம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு தேவையான கடன்நிதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஊரகக் கடன் திட்டக கொள்கைகளை ஊரகத் திட்டம் மற்றும் கடன் துறை வகுக்கிறது.  முன்னுரிமைப் பிரிவுக்கான கொள்கைகளையும் இத்துறை வடிவமைக்கிறது.  விவசாயம், சிறுத்தொழில், மிகச் சிறிய மற்றும் கிராமப்புறத் தொழில்கள், கைவினைஞர், சில்லறை வியாபாரிகள், சுயதொழில் முனைவோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின்ருக்கான அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு கடன் மானியம் அளிக்கும் ஸ்வர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கார் யோஜனா (SGSY), பிரதமரின் ரோஜ்கார் யோஜனா  (PMRY) ஆகியவையும் இதர வகைத் திட்டஂக்களும் முன்னுரிமைப் பிரிவில் அடங்கும.  நாட்டிலுள்ள கிராமப்புறங்கள் எல்லாவகையிலும் ஒட்டுமொத்த முன்னேற்றம் பெற்றிட ஒருங்கிணைந்த வங்கிக்கடன் வசதிக்கு வழிவகுக்கும் முன்னோடி வங்கித் திட்டத்தை இத்துறை அமல்படுத்துகிறது.  மேற்பார்வையிடுகிறது. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டத்தை அமல்படுத்துவதையும் இது மேற்பார்வையிடுகிறது.

a. இத்துறையின் பரந்த பணியெல்லைகள்

  • கிராமப்புற விவசாய மற்றும் சிறுதொழில் பிரிவுகளுக்கு கடன் கிடைக்க வசதி செய்து தருவதும் அதை மேற்பார்வையிடுவதும்
  • முன்னுரிமைப் பிரிவுக்கான கடன்கள் குறித்த கொள்கை வடிவமைத்தல்
  • பட்டியலிடப்பட்ட வணிகவங்கிகளுக்கிடையே கிராமப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIBF)க்கான நிதி ஒதுக்கீடுகளை செய்தல்
  • கிராமப்புறங்கள் ஒட்டுமொத்த முன்னேற்றம் கண்டிட ஒருங்கிணைந்த வங்கிக்கடன் வசதியை நோக்கமாகக் கொண்ட முன்னோடி வங்கித் திட்டத்தை அமல்படுத்தி மேற்பார்வையிடல்
  • நபார்டு (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி) வங்கிக்கு நிதி மற்றும் கொள்கையளவில் ஆதரவு அளித்தல்
  • பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகளின் நெறிமுறையாளராக  செயல்படுதல்
  • வறுமை ஒழிப்பிற்கான அரசு மானியத்துடன் கூடிய திட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடல்
  • வங்கிக்குறை தீர்ப்பாளர் திட்டத்தை அமலாக்கம் செய்தல். வங்கிகளுக்கு எதிரான பொதுமக்களின் புகார்களை சுலபமாக செலவின்றி தீர்த்தித அமைக்கப்பட்ட ஒரு திட்டமே வங்கிக்குறை தீர்ப்பாளர் திட்டமாகும்

b. மிக முக்கிய பகுதிகள்

  • கடன் அளிப்பில் புதிய உத்திகள்
    • குறுநிதி குறித்த முனைப்பான முயற்சிகள்
    • விவசாயக் கடன் அட்டைகள்
  • கூட்டுறவு சங்கங்களை மறுவடிவமைத்தல்
  • நலிவுற்ற சிறுதொழில் நிறுவனங்களை மீட்டிடும் முயற்சிகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கிடல்

வணிக வங்கிகள் அளிக்கும் முன்னுரிமைப் பிரிவுக் கடன்கள் குறித்த முக்கிய அம்சங்கள்

1). இலக்குகள்/உப இலக்குகள்

இந்தியாவிலுள்ள உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கான முன்னுரிமைப் பிரிவுக் கடன்களுக்காக விதிக்கப்பட்ட இலக்குகள், உப இலக்குகள் பின்வருமாறு:

கடன்களின் வகை

உள்நாட்டு வங்கிகள்

இந்தியாவிலுள்ள அயல் நாட்டு வங்கிகள்

1. முன்னுரிமைப் பிரிவுக்கான மொத்தக் கடன்

வங்கியின் நிகர கடனில் 40% 

வங்கியின் நிகர கடனில் 32 %

2. விவசாயத்திற்கான கடன்

வங்கியின் நிகர கடனில் 18% 

இலக்கு ஏதுமில்லை

3. நலிவுற்ற பிரிவினருக்கான கடன்

வங்கியின் நிகர கடனில் 10% 

இலக்கு ஏதுமில்லை

4. சிறுதொழிலுக்கான கடன்

இலக்கு ஏதுமில்லை

வங்கியின் நிகர கடனில் 10%

5. ஏற்றுமதிக் கடன்

உள்நாட்டு வங்கிகளைப் பொறுத்தவரை ஏற்றுமதிக் கடன் முன்னுரிமைப் பிரிவில் ஒரு பகுதியாகாது

வங்கியின் நிகர கடனில் 12%

ii.செயல்பாடுகள்:

வங்கிகள் நிதியளிக்கும் முன்னுரிமைப் பிரிவைச்சார்ந்த செயல்பாடுகள் நோக்கங்கள் பரவலாக பின்வரும் வகையில் அமைந்திடும்

a. விவசாயம்

b. சிறுதொழில்

c. சிறுசாலை மற்றும் நீர்போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள்

d. சில்லறை வியாபாரிகள் மற்றும் சிறு வாணிபம் செய்வோர்

e. வாழ்க்கைத் தொழிலர, சுயதொழில் முனைவோர்

f. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு சார்ந்த நிறுவனங்கள்

g. உள்நாட்டில் கல்விக்காக 0.75 மில்லியன் ரூபாய் வரையும், அயல்நாட்டில் 1.5 மில்லியன் ரூபாய் வரையும் வழங்கப்படும் கல்விக் கடன்கள்

h. தனிநபருக்கு எந்தவொரு இடத்திலும் 1.5 மில்லியன் ரூபாய் வரை வழங்கப்படும் வீட்டுவசதிக்கடன்... கிராமப்புறம்

  பகுதியளவு கிராமப்புறத்தில் 0.1 மில்லியன் ரூபாய் வரையிலும்  வழங்கப்படும் வீட்டுவசதிக் கடன்கள் நகர்ப்புறம், மாநகரப்பகுதிகளில் இருக்கும் இடங்களை மராமத்து செய்ய 0.1 மில்லியன் ரூபாய் வரையிலும் கடன் வசதி

i. நலிவுற்ற பிரிவினருக்கு வழங்கப்படும் நுகர்வோர் கடன்கள்

j. அரசுசாரா தொண்டு நிறுவனங்கள்/சுய உதவிக்குழுக்கள்

k. கணினி மென்பொருள் தொழில் ( வங்கிகளிடமிருந்து ரூ.10 மில்லியன் வரை கடன் உதவி பெற்றவை)

l. விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பதப்படுத்தும் தொழில்கள்

iii.நலிவுற்ற பிரிவினர்

நலிவுற்ற பிரிவினரின் கீழ்வரும் கடனாளிகள் பின்வருமாறு:

i. 5 ஏக்கர் மற்றும் அதற்கும் குறைவான நிலமுடைய சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமில்லாத விவசாயக் கூலிகள், குத்தகை விவசாயம் செய்வோர் , பங்குப்பயிர் வளர்ப்போர்

ii. கைவினைஞர் , கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் இதில் கடன் தேவை ரூ.50000/-க்கு அதிகமில்லாமல் இருக்கவேண்டும்

iii. ஸ்வர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கார் யோஜனா (SGSY), ஸ்வர்ண ஜயந்தி சாஹகாரி ஸ்வரோஜ்கார் யோஜனா (SJSRY), துப்புறத் தொழிலாளர் மீட்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள்(SLRS) ஆகிய திட்டப்பயனாளிகள்

iv. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

v. மாறுபட்ட வட்டிவிகிதத் திட்டப்பயனாளிகள்

vi. சுயஉதவிக்குழுக்கள்

iv. வங்கிகளின் செயல்பாடுகள்

உள்நாட்டு வங்கிகள்

(ஆண்டின் அறிக்கை சமர்ப்பிக்கும் கடைசி வெள்ளியன்று)

 

மார்ச் 2003

மார்ச் 2004

மார்ச் 2005

 

பொதுத் துறை வங்கிகள்

தனியார் வங்கிகள்

பொதுத் துறை வங்கிகள்

தனியார் வங்கிகள்

பொதுத் துறை வங்கிகள்

தனியார் வங்கிகள்

வங்கியின் நிகர கடனில் (NBC)
முன்னுரிமை கடன்களின் விகிதம்

41.2

44.1

43.6

47.3

43.2

43.3

வங்கியின் நிகர கடனில் (NBC)
விவசாயக் கடன்களின் விகிதம்

14.5

12.2

15.1

14.2

15.7

12.1

வங்கியின் நிகர கடனில் (NBC)
நலிவுற்ற பிரிவினருக்கான கடன் விகிதம்

6.7

1.7

6.9

1.5

8.8

1.2

வெளிநாட்டு வங்கிகள்

(ஆண்டின் அறிக்கை சமர்ப்பிக்கும் கடைசி வெள்ளியன்று)

 

மார்ச் 2003

மார்ச் 2004

மார்ச் 2005

வங்கியின் நிகர கடனில் (NBC)
முன்னுரிமைப்பிரிவு கடன்களின் விகிதம்

33.1

34.1

35.4

வங்கியின் நிகர கடனில் (NBC)
ஏற்றுமதி வணிகக்கடன் விகிதம்

18.8

18.5

17.7

வங்கியின் நிகர கடனில் (NBC)
சிறுதொழில் கடன் விகிதம்

9.1

10.1

10.3

அந்நியச் செலாவணித்துறை

2000 ஜுன் 1 முதல் அறிமுகப் படுத்தப்பட்ட அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (FEMA) ன் விளைவாக அந்நியச்செலாவணித் துறையின் நோக்கமாகிய அந்நியச் செலாவணியை பாதுகாத்து வைத்தல் என்ற நிலையிலிருந்து, “வெளிநாட்டு வாணிக்த்தை முன்னேற்றச்செய்தல், பணவழங்கல் மற்றும் இந்தியாவில் அந்நியச் செலாவணிச்சந்தையை முறையாக மேம்படுத்துதல், மற்றும் நிர்வகித்தல் என்ற நிலைக்கு மாற்றிக்கொண்டது.

அந்நியச்ச்செலாவணி கட்டுப்பாட்டு நிர்வாகத்தின்  அமைப்பை மாற்றுவதற்காக இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.  பல்வேறு விதமான பரிவர்த்தனை முறைகளை நிருவகிக்க விதிமுறைகள் உருவாக்கப்பட்டது.  ஒவ்வொரு நிகழ்வுக்குமான அனுமதி என்ற விதி மாறி, ஒளிவுமறையு  இல்லா தெள்ளத் தெளிவான ஒழுங்குமுறைகளாக இது விளங்குகிறது.

எல்லா நடப்பு கணக்கு பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது (கீழ்க்கண்டவைகள் நீங்கலாக).

  • இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட 8 பரிவர்த்தனைகள்
  • இந்திய அரசின் முன் அனுமதி தேவைப்படும் 11 பரிவர்த்தனைகள் மற்றும்
  • இந்திய அரசால் அளவு குறிக்கப்பட்ட மற்றும் அந்த அளவுக்கும் மேல் அந்நியச் செலாவணியை விடுவிக்க ரிசர்வ் வங்கியின்  அனுமதி தேவைப்படும் 16 பரிவர்த்தனைகள்.  எல்லா வட்டார அலுவலகங்களின் துறைகளும் (FED) இந்த பரிவர்த்தனைக்கு தேவைப்படும் அந்நியச் செலாவணியை வழங்க அதிகாரமளிக்கப் பட்டுள்ளது.
  • மூலதன கணக்கு பரிவர்த்தனைகளுக்கு, ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறைகள் மூலம் பொது அனுமதிகளும்/வெளிநாடுவாழ் இந்தியரால் செய்யப்படும் முதலீடுகளுக்கு தானியங்கு வழிகளும் வழங்கப்படுகிறது.
  • இந்த சட்டத்தை கருத்திற்கொண்டு, பல்வேறு வாணிக நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி அமைப்புகள் அளிக்கும் ஆலோசனைகள் ஏற்ப ஏற்றுமதி வருவாய்கள் குறித்த நேரத்திற்கு வந்துசேர்வதை (பொருள் அனுப்புதல், பணம் வாங்குதல்) உறுதிசெய்கிறது.  தொடர் அடிப்படையில் மறுபார்வையும் செய்கிறது.
  • இந்தத்துறை அந்நியச் செலாவணி விலை நிர்ணய மேலாண்மைக்காக (exchange rate management)  அனுமதிக்கப்பட்ட வாணிகர்களிடமிருந்து தினந்தோறும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனை சம்பந்தமான புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது. மேலும் ஏற்றுமதி-இறக்குமதி நிலுவையை (Balance of Payment) மாதாந்திர விரைவு தோராய மதிப்பீடு செய்யவும், காலாண்டு ஏற்றுமதி இறக்குமதி நிலுவை தொகுப்புக்காகவும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது.
  • வங்கிகளின் அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில்  ஏற்படும் இடர்வரவு (Risk) நிர்வாகத்திற்காக இந்தத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கிறது.
  • இந்தத்துறை அந்நியச் செலாவணியை நிருவகிக்க உரிமம் பெற்ற வங்கிகள் வெளிநாட்டு பணம் மாற்றல் செய்வோர் இவர்களின்  பொறுப்புகளையும் உறுதிசெய்கிறது.  மேலும் ஆய்வும் செய்கிறது.
  • பல்வேறு வாணிக அமைப்புகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வாணிகர்கள் இவர்களை அங்கத்தினர்களாக கொண்ட “அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு, நிரந்தர ஆலோசனை குழு” என்ற ஒனறு செயல்படுகிறது.  இது ஆண்டுக்கு இரண்டு முறை கூடி நெறிமுறைகள் அமைக்கப் பரிந்துரை செய்கிறது.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்தவும் கடினமான விதிகளை அகற்றவும், நடைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களை எளிமையாக்கவும் மற்றும் மறுபரிசீலனை  செய்யும் செயலிலும் இந்தத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 ஆய்வுத் துறை (வங்கிக்குள்)

பார்வை

ஆய்வுத்துறை, உயர் நிர்வாகத்தின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுகிறது.  வங்கிப் பணிகளுக்கான உயரிய பண்புகளோடு சுதந்திரமாக தன் கடமைகளை நிறைவேற்றி வருகிறது.  வங்கி செயல்பாட்டின் நோக்கக் கருத்துக்களின் பேரில் வங்கியின் செயல்பாடுகள் சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த உயர் நிர்வாகம் அதிகாரமளித்துள்ளது.

குறிக்கோள்

  • ஆய்வுத்துறை தன் அறிவு, திறமை மற்றும் தகுதியான தொழிற்பண்புகள் இவற்றை பயன்படுத்தி நடப்பிலுள்ள நடைமுறைகளின் நிறைவுகள், மற்றும் நம்பகத்தன்மைகளை கூர்ந்து ஆராயவும் மதிப்பீடு மற்றும் அறிக்கை செய்யவும், பின் தொடர் பணிகளை உறுதிபடுத்தப் படவேண்டும்.
  • சட்டங்கள், ஒழுங்குகள், உள்முக கொள்கைகள், நடைமுறைகள் மிக உன்னிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
  • சொத்துக்கள் சரியாக பராமரிக்க / பயன்படுத்த / பாதுகாக்கப்பட வேண்டும்.
  • நிதி நெருக்கடிகள் தவிர்க்கப்படவேண்டும்; செயல்முறைகள் மற்றும் நற்பெயர் இவற்றிற்கு ஏற்படும் இடர்வரவுகள், வராமல் தடுக்கப்பட வேண்டும்.
  • வங்கிகளின் அமைப்பு / செயல்பாடு / தொலைத்தொடர்பு பாதுகாப்பு இவற்றில் போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  •  தரமான வாடிக்கையாளர் சேவை காலத்தே அளிக்கப்படவேண்டும்.

நோக்கங்கள்

ஆய்வுத்துறையும், ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டபோதே 1935ல் அமைக்கப்பட்டது.  இதன் நோக்கங்கள் பின்வருமாறு

  • கிடைக்கக் கூடிய ஆதாரங்களுடன் அலுவலகங்கள் / கிளைகள் மற்றும் மத்திய அலுவலக துறைகள் இவைகளால், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேறக் கூடிய செயல்களை தெளிவான முறையில் வரையறை செய்தல்
  •  செயல்திறனை மேலும் தீவிரப்படுத்த, பொருத்தமான முன்னேற்றம் பற்றி ஆலோசனை வழங்குதல்
  • தணிக்கை, செயல்பாடுகள் மற்றும் இதன் பல்வேறு முறைமைகளை மேற்பார்வை செய்தல்
  • அலுவலகங்கள் மற்றும் மத்திய அலுவலக துறைகளின் செயல்பாடுகள் குறித்து உயர் நிர்வாகத்துக்கு, கருத்துகளை அளித்தல்

ஆய்வுத் துறையின் அமைப்பு

வங்கி ஆய்வுத் துறையின் செயல்பாடுகள், முதன்மை பொதுமேலாளரின் நேரடி மேற்பார்வையில் செயல்படுகிறது.  இவர் செயலாட்சி இயக்குநர் (ED)  ஒருவருக்கு விவரம் அளிக்க வேண்டும் துறையின் செயல்பாடுகளுக்காக, கீழ்கண்ட உட்பிரிவுகள் உள்ளன.

  • திட்டமிடும் பிரிவு
  • தொடர்செயல் பிரிவு
  • கணக்குப் பரிசோசனை கண்காணிப்பு பிரிவு
  • தகவல் ஒழுங்குமுறை தணிக்கை பிரிவு
  • ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு (IASC) பிரிவு
  • நிர்வாக பிரிவு
  • ஆய்வுக் குழுக்கள்

திட்டமிடும் பிரிவு

திட்டமிடும் பிரிவு, ஆண்டுக்கான ஆய்வுத்திட்டத்தை வரைந்து அதை அமல்படுத்தும் பொறுப்பை ஏற்கிறது.  தற்போதைய வழக்கத்தின்படி வட்டார அலுவலகங்களில் 15-18 மாதங்களுக்கு ஒரு முறையும் மத்திய அலுவல துறைகளில் 24-30 மாதங்களுக்கு ஒரு முறையும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.  தற்சமயம் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 24 ஆய்வுகள் நடத்தப்படுகிறது.  பொதுவாக மூன்று குழுக்கள் ஒவ்வொன்றும், பொது மேலாளர் ஒருவரை தலைமையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.  இந்தப்பரிவின் செயல்பாடுகள்  கீழ் காணுபவைகளை உள்ளடக்கியது.

1.    ஆய்வுத் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் இவற்றிற்கான ஆண்டு நாட்காட்டியை தயார் செய்தல் – இவற்றிலிருந்து

(i)செயலாக்க இயக்குநர்களுக்கு செயலாக்க திட்டங்களை விவரமாக தெரிவித்தல் மற்றும் மேலாண்மை தணிக்கை அறிக்கை (MAR) செயலாக்க இயக்குநர், துனை ஆளுநர் இவர்களுக்கு அளித்தல்

(ii)    தேவைப்படின் மேலாண்மை தணிக்கை அறிக்கையில், செயலாக்க இயக்குனர் / துனை ஆளுநர் செய்யும் பரிந்துரைகளின் பேரில் தொடர்நடவடிக்கை எடுத்தல்

2.    ஆய்வுத் திட்டங்களின் அரையாண்டு மறுபார்வை

3.    மாதத்திற்கு இரண்டுமுறை கிளை நிர்வாகக் குழு BLMC கூட்டங்கள்

4.    துறையின் காலாண்டு நடவடிக்கை அறிக்கையை தயார் செய்தல்

5.    ஆய்வுக் குழுக்களால் அளிக்கப்பட்ட சிறப்பு / இரகசிய குறிப்புகளின் பேரில் தொடர் நடவடிக்கை எடுத்தல்

6.    ஆய்வு வழிகாட்டு முறைகளை காலத்திக்கேற்றவாறு புதிப்பித்தல்

7.    வங்கியின் ஆண்டு அறிக்கைக்கு தேவையான உபகரணங்கள்/ தகவல்களை வழங்குதல்.

8.    அணிவரிசையில் அமைக்கப்பட்ட பதிவேடுகளை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்

9.    மத்திய அலுவலக துறைகள் மற்றும் ஆய்வுக்குழுக்களுக்கும் இணைப்பாக செயல்படுதல்

10.   மற்றப் பிரிவுகளுக்கு சம்பந்தமில்லாத இதர நடவடிக்கைகளை கவனித்தல்

தொடர் செயல் பிரிவு

பல்வேறு ஆய்வு அறிக்கைகளின் உடன்பாட்டு நிலையை கவனிக்கும் செயலுக்குத் தொடர்செயல் பிரிவு பொறுப்பேற்கிறது.

நடப்பு முறைகளின்படி, ஆய்வு நடந்து முடிந்த 45 நாட்களுக்குள் தணிக்கை துறைகள் மற்றும் அலுவலகங்கள் தங்களது முதல் உடன்பாட்டை அனுப்பவேண்டும்.  பின் தொடர்ந்து வரும் உடன்பாடுகளை ஒவ்வொரு மாதமும் ஆய்வுத்துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.  நிறைவான மற்றும் இறுதியான உடன்பாடுகள் மூன்று மாதங்களுக்கு மிகாமல் செய்துமுடிக்கப்பட வேண்டும்.  நடப்பிலுள்ள நடைமுறைகளின்படி, முக்கியம் என்று அடையாளமிடப்பட்ட பத்திகளின் பேரில் பத்திவாரியான உடன்பாடுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  பிற நடவடிக்கை என்று அடையாளமிடப்பட்ட பத்திகளின் உடன்பாடுகள் துறை தலைவர்/மண்டல இயக்குனருக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும்.  எல்லவற்றையும் உள்ளிட்ட உடன்பாடுகள் ஆய்வுத்துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.  வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்.  இந்தப் பத்திகளின் (பாரா)  உடன்பாடுகள், தணிக்கையிடப்பட்ட அலுவலகம் / துறை இவற்றின் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்டதாயிருக்க வேண்டும்.  உடன்பாடுகள் பெறப்பட்டவுடன் தொடர் செயல் பிரிவு அதை மதிப்பீடு செய்து தலைமைப் பொது மேலாளரின் இறுதி ஒப்புதலுக்கு வைக்கிறது.  உடன்பாடுகள் ஆராயப்பட்ட பின்பு உடன்பாடுகள்,  பின்பற்றப்பட்டதுபின்பற்றப்பட தேவையில்லை அல்லது நிலுவையில் இருப்பவை  என்று தரம் பிரிக்கப்படுகிறது.

பின்பற்றப்பட தேவையில்லை என்று பிரிக்கப்பட்ட பத்திகள், பின்பற்றப்பட்டது என்று தரம் பிரிக்கப்பட்டவைகளுடன் சேர்த்து வழக்கமாக அடுத்துவரும் ஆய்வின்போது பரிசீலிக்கப்படும்.  தேவைப்படும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட குறைந்த காலத்திற்குள் செய்து முடிக்க முடியாதவையாக இருந்தால், அவைகளும் இதனுடந் சேர்க்கப்பட்டு தகுந்த ஆயலின்போது பரிசீலிக்கப்படும்.  உடன்பாடுகளை ஆராய்வதற்காக மேலாளர் நேரடியாக பொதுமேலாளரின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.  இந்தப் பிரிவின் உள்ளடங்கிய மற்ற நடவடிக்கைகள்.

  • மேலாண்மை தணிக்கை மற்றும் நடைமுறை ஆய்வு அறிக்கைகளின் உடன்பாடுகள் காலத்தே பெறப்படுவதையும், ஆராயப்படுவதையும் கவனித்தல்
  • செயல் இயக்குநர் குழுவால் நெருக்கடியானவை என்று அடையாளம் காணப்பட்ட பத்திகள் மற்றும் அதற்குரிய உடன்பாடுகளை ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழுவின் (IASC) முன் சமர்ப்பித்தலை கவனிக்கிறது.
  •  உடன்பாடுகள் அறிக்கையின் காலாண்டு மறுபார்வையை செயல்படுத்துகிறது
  • எல்லா சுற்றறிக்கைகளின், காப்பு கோப்புகளை பராமரித்தல்
  • ஆய்வு அறிக்கைகளின் பேரில் உருவான ஒன்றிணைக்கப்பட்ட கருத்துகளின் கருத்துப் பதிவேட்டை பராமரித்தல்

தணிக்கை கண்காணிப்பு பிரிவு

உயர் மேலாண்மையின் தீர்மானத்திற்து ஏற்ப, ஆய்வுத்துறையில், ஒரு தணிக்கை கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது.  4 விரைவான தணிக்கையுடன் கூடிய கண்காணிப்பு குழுக்கள் (SNAM) அமைப்பதற்கு, கொள்கை அளவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறது.  மேற்கண்ட அமைப்பின்படி மத்திய அலுவலக ஆய்வுத்துறை, உள்முக தணிக்கை நடவடிக்கைகளின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்கிறது.  எல்லா வங்கி அலுவலகங்களின் இணக்கமான செயல்பாட்டை உறுதிசெய்வதற்காக, ஒருங்கிணைந்த தணிக்கை மற்றும் கட்டுப்பாடு சுய மதிப்பீடு தணிக்கை (CSAA) Control Self Assessment Audit இவைகளின் எல்லா நடவடிக்கைகளையும், ஒன்றாக்கவும் மற்றும் ஒத்த தரமுடையதாகவும் செய்வதற்காகவே இந்த மேற்பார்வை பணியை செய்கிறது.  இந்த இலக்கை அடைவதற்கு இந்தத்துறை எங்கெல்லாம் அவசியப்படுகிறதோ அங்கெல்லாம் நேரடி ஆய்வுகளையும் மறைமுக கண்காணிப்புகளையும் செயல்படுத்துகிறது.  அலுவலகங்களிலிருந்து நியமித்த கால இடையிவெளியில் பெறப்படும் விவர அறிக்கைகளின் மூலம் மறைமுக கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது.  இவைகளை ஆராய்ந்து தகுதியானவையென்று கருதப்படும் விவர அறிக்கைகளின் பேரில் தொடர் செயல் மேற்கொள்ளப்படும்.

 வங்கிகளில் ஒருங்கிணைந்த தணிக்கை மற்றும் கட்டுப்பாடு சுயமதிப்பீடு தணிக்கை  இவைகளின் நடைமுறை ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய, நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகிறது.  எப்பொழுதெல்லாம் அவசியம் என்று கருதுகிறதோ அப்பொழுது விரைவான தணிக்கையுடன் கூடிய கண்காணிப்பு குழுக்கள் (SNAM) நியமித்த கால இடைவெளியில் அலுவலகங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளும்.

தகவல் ஒழுங்குமுறை தணிக்கை பிரிவு

வங்கியில் முக்கிய தகவல் வசதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து திட்டமிடுதல் மற்றும் செயலாக்கம் செய்வதே.  தகவல் ஒழுங்குமுறை தணிக்கைப் பிரிவின் முக்கிய பணியாகும்.  நேரடி ஆய்வுகள் தவிர, வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்தல், தணிக்கைக்கான உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னேற்றப் பணிகளையும் செய்வது அவசியமகிறது.

ஆய்வு, தணிக்கை உபகுழு (IASC) பிரிவு

ஆய்வு, தணிக்கை உபகுழு மற்றும் செயலாக்க இயக்குநர் குழு இவற்றின் நியமித்த கால கூட்டங்களை, ஒன்றிணைத்தல் மற்றும் ஏற்பாடு செய்தல் இந்தப்பிரிவின் பொறுப்பாகும்.  தற்சமயம் இந்தக் கூட்டங்கள் தோராயமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.  இந்தப் பிரிவு, செயலாக்க இயக்குநர் குழு மற்றும் ஆய்வு தணிக்கை உபகுழு இவற்றை கூட்டுவதற்கான செயலாண்மைத் துறை சார்ந்த எல்லாப் பணிகளையும் செயல்படுத்துகிறது.  மேற்கண்ட கூட்டங்களுக்கான நினைவுக் குறிப்பேடு தயாரித்தல், கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்தல் மற்றும் பதிவு செய்தவைகளில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்களை இப்பிரிவு செயல்படுத்துகிறது.

நிர்வாகப் பிரிவு

வருகை, விடுமுறை, பணிப்பதிவேடு, நியமனம், மாற்றல், பயிற்சி, ஒழுங்குமுறை, அனுப்புதல், கணக்குப் புத்தகங்களை பராமரித்தல், CSAA.   உள்ளூர் போக்குவரத்துப்படி, விடுமுறை பயணப்படி சலுகை கோரல்கள் (LFC Claims), செய்தித்தாள், புத்தக மானியம், தொலைபேசி போன்ற நிர்வாக விஷயங்களை கவனித்துக்கொள்கிறது.  அலுவலக மொழிக் கொள்கையை இந்தத் துறையில் அமல்படுத்துவதை ஆட்சிமொழிப் பிரிவு கவனிக்கிறது.

ஆய்வுக் குழுக்கள்

ஒவ்வொன்றும் பொதுமேலாளர் ஒருவரை தலைமையாகக் கொண்ட, மூன்று ஆய்வுக் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொள்ளுகிறது.  தணிக்கையின் தன்மைக்கேற்ப குழுவின் அமைப்பு தீர்மானிக்கப்படும்.  ஒவ்வொரு குழுவும் பொதுவாக 2 உதவிப் பொது மேலாளர்களையும் 3 முதல் 5 மேலாளர்களையும் கொண்டதாக இருக்கும்.  குழுவின் அங்கத்தினர்கள், பணிக்கு வருவதை பொருத்தும் குழுவின் தகுதியை பொருத்தும் குழுக்களுக்கிடையே மாற்றம் செய்யப்படுவர்.

ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு

ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு இவற்றின் உடன்பாடுகளை, குறித்த கால இடைவெளியில் மறுபார்வை செய்வதற்காக, மத்தியக் குழுவின், சிறுகுழு, 1992 ஜூன் 24ல் நடந்த இதன் கூட்டத்தில், ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு ஒன்றை அமைக்க பரிந்துரை செய்தது.  மேலும் உள்முக தணிக்கை மற்றும் ஆய்வுப் பயிற்சிகளின் திறனை மேம்படுத்தவும், செயல்பாட்டை சிறப்பானதாக்கவும், முக்கியத்துவம் அளிக்கும் நோக்கிலும் இக்குழு செயல்படுகிறது.

ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழுவில், கவர்னரால் நியமிக்கப்பட்ட மத்தியக் குழுவின் நான்கு இயக்குநர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.   துணை ஆளுநர், ஆய்வுப் பொறுப்பை கவனிக்கும்  செயல் இயக்குநர், நிர்வாகப் பொறுப்பை கவனிக்கும் செயல் இயக்குநர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாவர்.  ஆய்வுத்துறையின் முதன்மை பொது மேலாளர் இந்த உபகுழுவின் உறுப்புச் செயலாளராக செயல்படுகிறார்.  மற்ற துணை ஆளுநர்களும் / செயல் இயக்குனர்களும் ஆய்வு தணிக்கை உபகுழுவின் கூட்டங்களுக்கு அழைக்கப் படுவர்.  இந்த உபகுழு வருடத்திற்கு 5 முதல் 6 முறை கூடும்.

ஆய்வறிக்கையில் தீர்வு காணப்பெறாதவை என்ற பத்திகளும் (பாராக்கள்) செயல் இயக்குநர் குழுவால் நெருக்கடியான பகுதி என்று அடையாளம் காணப்பட்டவைகளும், கலந்தாய்வு மற்றும் வழிகாட்டலுக்காக ஆய்வு தணிக்கை உபகுழுவின் முன் வைக்கப்படும்.  மேலும் மத்திய அலுவலக கட்டுப்பாட்டுத் துறையார் (அதாவது அரசு மற்றும் வங்கிக் கணக்குத் துறை)  அபிப்பிராயம் கூறப்பட்டதும் வங்கியின் ஆண்டுக் கணக்கின் பேரில், சட்டப்பூர்வ தணிக்கையாளரால் அளிக்கப் பட்டதுமான அறிக்கையை ஆய்வு தணிக்கை உபகுழு (IASC)  ஆராயும்.  மேலும் வெளிநாடுகளில் முதலீடு மற்றும் செயலாக்கத்துறை (DEIO) யின் வாணிக பரிவர்த்தனை அறை செயல்பாடுகளின் பேரில் வெளிமுக தணிக்கையாளரால் அளிக்கப்படும் அறிக்கையும் ஆராயும்.

ஆய்வு மற்றும் தணிக்கையை உபகுழு எல்லா நோக்கிலும் பரிசீலனை செய்கிறது.  இந்த அமைப்பை முன்னேற்றமடையச் செய்ய தேவையான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

செயலாக்க இயக்குநர்களின் குழு

எல்லா ஆய்வு அறிக்கைகளும் முதலில் செயலாக்க இயக்குநர்களின் குழுவால் பரிசீலனை செய்யப்படும்.  ஆய்வு அறிக்கைகளின் உடன்பாட்டு நிலையை, ஆய்வு கணக்குப் பரிசோதன உபகுழுவிடம் ஆராய்வதற்காக வைக்குமுன், செயலாக்க இயக்குநர்களின் குழு தொடர்புடைய மண்டல இயக்குநர்/துறைத் தலைகளின் முன்னிலையில் பரிசீலனை / கலந்து ஆலோசனை செய்யும்.

 இதன்பின், வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தும் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் முக்கிய ஒழுங்கீனங்கள், மீறப்பட்ட விதிமுறைகள், தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைபடுத்தாமை மற்ற நெருக்கடியான பகுதிகள் என்று செயலாக்க இயக்குநர்களின் குழுவால் அடையாளம் காணப்பட்டவைகள் ஆய்வுக் தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

வங்கியில் ஆய்வின் வகைகள்

  உள்முக ஆய்வின் செயல்களை மிக்கப் பயனுள்ளதாக உயர்த்தும் நோக்கில், குறிப்பிட்ட நோக்கங்களுடன் பல்வேறு வகையான ஆய்வுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  தற்சமயம் கீழ்காணும் வகைகளில், ஆய்வுத் துறை மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள / ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

  •  மேலாண்மை தணிக்கை மற்றும் ஒழுங்குமுறை ஆய்வு (MASI) 
  • தகவல் ஒழுங்குமுறை தணிக்கை (ISA)
  •  உடனுக்குடனான தணிக்கை  (Concurrent Audit)
  • கட்டுப்பாடு சுயமதிப்பீடு தணிக்கை (Control and Self Assessment Audit)

 மேலாண்மை தணிக்கை  மற்றும் ஒழுங்குமுறை ஆய்வு

இந்த ஆய்வு முறையில் ஆய்வுக்குழுக்கள், ஏற்கனவே உள்ள ஒழுங்குமுறைகளின் நம்பகத்தன்மை, தகுதி இவைகளை கூர்ந்து ஆராய்ந்து, மதிப்பீடு செய்து விவரிக்கிறது, சட்டங்கள், ஒழுங்குமுறைகள், உள்முக கொள்கைகள், வழிமுறைகள், உன்னிப்பாக பின் பற்றப்படுவதை தொடர் செயலாக உறுதிசெய்கிறது.  மற்றும் தீர்மானிக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் மத்திய அலுவலக நெறிமுறைகளின்படி இப்பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. ஒழுங்கு முறை ஆய்வு நடத்துவதோடு அல்லாமல் ஆய்வுக்குழு மேலாண்மை தணிக்கை ஆய்வுகளையும் நடத்துகிறது இதன்மூலம் வங்கியின் இலக்குகள் மிகப் பயனுள்ளதாகவும், அதிகாரப் பகிர்வு, துறைகள் / அலுவலகங்களில் வாடிக்கையாளர் சேவை, மேலாண்மைத் திறன் போன்றவற்றை சீர்தூக்கிப் பார்க்கிறது.

தகவல் ஒழுங்குமுறை தணிக்கை

கீழ்க் காணுபவற்றை சரிபார்ப்பதே தகவல் ஒழுங்குமுறை தணிக்கையின் நோக்கம்.

  • அதிக முக்கியத்துதம் வாய்ந்த, தகவல் ஒழுங்குமுறை ஆதாரங்கள் எல்லா அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துக்குள்ளாகும் நிலையிலிருந்து முறையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறதா;
  • எந்திரமயமாக்கல் / கணிணிமயமாக்கலின் நடவடிக்கைகள், நம்பகத் தண்மையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் கிடைக்கும் ஆதாரங்கள் அதன் செயல்முறைகளை உறுதிபடுத்துவதாகவும் உள்ளதா;
  • ஒழுங்குமுறைகள் மிக்கப் பயனுள்ள வழிகளிலும் சிறப்பாகவும் பயன்படுத்தப்படுகிறதா;
  • ஏற்படுத்தப்பட்டிருக்கிற செயல்முறை கொள்கைகள் மற்றும் செயல் முறைகள் அதிகாரிகளால் கடைப்பிடிக்கப்படுகிறதா;
  • நடப்பிலுள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகள், ஆதாரத் தகவல்கள் (Back up) பிற நடைமுறைகள், போன்ற தகவல்களுக்கு பேரழிவுகள் மூலம் இழப்பு வராமலும் அல்லது தவறாக தகவல்களை மாற்றுவதிலுமிருந்து தடுப்பதற்கு போதுமானதாக உள்ளதா.

தகவல் ஒழுங்குமுறை தணிக்கையின் நோக்கங்கள் பின்வருமாறு

  •  கணிணிமய சூழலில் வங்கியின் மத்திய அலுவலக துறைகளும் வட்டார அலுவலகங்களும், தகவல்களை செயல்முறைபடுத்துவதை எல்லா நோக்கத்திலும் தகவல் ஒழுங்குமுறை தணிக்கை மறுபார்வை செய்கிறது.
  •  மத்திய அலுவலகம் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் சுற்றறிக்கையாக வெளியிடப்பட்ட பொதுவான கொள்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன், பயன்படுத்தும் துறைகள் / மண்டல அலுவலகங்கள் இவற்றின் உடன்பாட்டு மதிப்பீடுகளும் இவற்றில் அடங்கும்.  மேலும் விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட கணிணி சார்ந்த உதிரிபாகம் / மென்பொருள் சேவைகளை மறுபரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துகிறது.
  • விற்பனையாளர் வழங்கும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறையின் நம்பகத்தன்மையை மதிப்பிடுகிறது, தினந்தோறும் நடக்கும் பணி ஒழுங்குகளின் நம்பகத்தன்மை மற்றும் தரம் ஆகிய இவ்விரண்டையும் தீர்மானிக்கிறது.
  •  தடுமாற்றமான நேரங்களில், பிரச்சினைகளை சமாளிக்கும் அளவு, நெருக்கடி மேலாண்மையின் ஒட்டு மொத்த தயார்நிலை, போதுமானதாக இருக்கிறதா என்பதையும் மதிப்பீடு செய்கிறது.
  •  தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறையை செயல்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் அலுவல்களின், போதிய தகுதிகளை மதிப்பீடு செய்கிறது.
  • தணிக்கை குழுக்களால், ஒழுங்குமுறைகள் மற்றும் நடைமுறைகளின் கையேடுகள் பயன்படுத்தப்பட்டதின் நிலையை சரி பார்க்கிறது
  • வங்கியின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப ஆதாரங்களின் விலை ஆதாய பகுப்பாய்வின் (cost benefit analysis) செயல்பாடுகளும் இதனுள் அடங்கும்
  • சொத்துக்களை பாதுகாக்கவும் தகவல் ஒருங்கிணைப்பை பராமரிக்கவும், நம்பகத்தன்மையையும் மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய தன்மையையும் பயனுள்ள முறையில் வங்கியின் இலக்கை அடைவதற்கும் மற்றும் ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் தகவல் ஒழுங்குமுறைகளின் பயன்பாடு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க சான்றுகளை சேகரித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவை தகவல் ஒழுங்குமுறை தணிக்கையின் நோக்கங்களில் உள்ளடங்கும்.
  • தகவல் ஒழுங்குமுறை சூழலில், ஏற்கனவே இருக்கின்ற பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அடையாளம் காணவும், போதிய அளவில் இருக்கிறதா என்பதை மதிப்பிடவும் இவை தேவைப்படும் இடங்களில் பரிந்துரைகள் வழங்குதலும், தகவல் ஒழுங்குமுறை செயல்பாட்டில் உள்ளடங்கும்.

உடனுக்குடனான தணிக்கை

பணிகளை மறு ஒழுங்குபடுத்துதல் / பணிகளை ஒன்றாக்குதல் – அமல்படுத்த பரிந்துரை செய்யும் குழு, இவற்றிற்கிடையில் மண்டல / மத்திய தணிக்கை பிரிவுகள் (RACs/CACs) மூடப்பட்டு, இவற்றின் பணிகள் ஆய்வு / கட்டுப்பாடு சுய மதிப்பு தணிக்கை / ஒருங்கிணைந்த தணிக்கை பிரிவுகளால் கவனிக்கப்படுகிறது.  அதன் விளைவாக மண்டல தணிக்கை பிரிவு / மத்திய தணிக்கைப் பிரிவு ஆகியன 2004 ஜூலை 1 முதல் மூடப்பட்டு இவற்றின் பணிகள், மூன்றாகப் பிரிக்கப்பட்டது, அவையாவன

ஒருங்கிணைந்த தணிக்கை
கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கை
மற்றும் மேலாண்மை தணிக்கை மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுகள்.

கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கை(CSAA)

‘சர்மா செயற்குழு’ பரிந்துரையின் விளைவாக 1999 ஜூலை முதல் வங்கிகளில் கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கை (CSAA) அறிமுகப் படுத்தப்பட்டது.  பல்வேறு துறைகள் ஒழுங்கான தற்பரிசோதனை மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்வதற்கு அதிகாரமளிப்பதே இதன் (CSAA) நோக்கமாகும்.  அதனால் சரியான நேரத்தில் மறுபரிசீலனை செய்யவும், திருத்தமான நடவடிக்கைகள் எடுக்கவும் / அறிமுகப் படுத்தப்பட்டது.  ஆரம்பத்தில் இதன் நோக்கமானது, குறுகிய கால இடைவெளிகளில் உள்முக கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்வதை எளிதாக்கவும் ஒழுங்கான ஆய்வின் முயற்சிகளையும் மற்றும் தணிக்கையின் அமைப்பையும் மேலும் வலுவூட்டுவதாகும்.  மண்டல / மத்திய தணிக்கை பிரிவுகள் (RACs/CACs) 2004 ஜூலை 1 முதல் மூடப்பட்ட பிறகு, கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கையின் நோக்கமும், பொறுப்புகளும், விசாலமாகப் பெரிதாக்கப்பட்டது.

சர்வதேச தர அமைப்பு 9001-2000 மற்றும் பிரிட்டீஷ் தரம் -7799 நற்சான்றுகள்

வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிப்பிரிவுகள் / துறைகளுக்கு சர்வதேச தர அமைப்பின் 9001-2000 நற்சான்றுகளை பெற வங்கி தீர்மானித்திருக்கிறது.  அதாவது பண நிர்வாகம், பொதுக்கடன் அலுவலகம், பொதுக் கணக்குத் துறை, வைப்புக் கணக்குத் துறை மற்றும் நிர்வாகம் மற்றும் ஊழியர் மேலாண்மை துறை, மனிதவள மேம்பாட்டு துறை ஆகியன.  சர்வதேச தர அமைப்பு திட்டப் பணிகளை இணைக்கும் செயல் ஆய்வுத் துறையிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.  இது சம்பந்தமான பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைந்த குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  பின்னர் பிரிட்டீஷ் தர நற்சான்று BS-7799 (தகவல் பாதுகாப்பு சார்ந்த) பெறவும் தீர்மானிக்கப்பட்டது.  ஆகையால் நற்சான்று சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளும் அந்த தரத்தின் கீழ் தொடங்கப்பட்டது.  ஆரம்பமாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் மண்டல அலுவலகங்களிலும் பணம் வழங்கல் மற்றும் வங்கியியல் துறைகளிலும் மத்திய அலுவலக துறைகளான பணநிர்வாகத்துறை (DM) மற்றும் அரசு வங்கிக் கணக்குத் துறைக்கும் (DGBA), சர்வதேச தரசான்று 9001-2000 ஐ பெறவும், வெளிநாட்டு முதலீடு இயக்கத்துறை (DEIO) மற்றும் உள்முக கடன் நிர்வாகத்துறை  (IDMD) இவற்றிற்கு பிரிட்டீஷ் தரச்சான்று 7799 பெறவும் தீர்மானிக்கப்பட்டது.

வங்கி மேற்பார்வை  துறை

வங்கியியல்  ஓழுங்குமுறை  சட்டம்  1949  மற்றும்  இந்திய  ரிசர்வ் வங்கி  சட்டம் 1934ல் வழங்கப்பட்டுள்ள பல் வேறு வழிவகைகளை  பயன்படுத்தி  இந்திய வங்கிகளின் ஒழுங்குமுறையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு இந்திய ரிசர்வ வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  வணிக வங்கிகள் மற்றும்  நிதிநிறுவனங்களை மேற்பார்வை செய்யும் இந்தப் பொறுப்புகள் வங்கியில் மேற்பார்வை துறையின் மூலம்  நிறைவேற்றப்படுகிறது.  இத்துறை இதனுடைய 16 மண்டல அலுவலகங்களின் மூலம் 92 வணிக வங்கிகளையும் 9 குறிப்பிடட நிதி நிறுவனங்களையும்  மேற்பார்வை செய்கிறது.

முக்கிய செயல்பாடுகள்

வங்கியில் மேற்பார்வை துறை, தற்சமயம், வணிக வங்கிகள்  மற்றும் குறிப்பிட்ட நிதிநிறுவனங்களை மேற்பார்வை செய்யும் பணிகளை கீழ்க்காணும் வகையில் செயல்படுத்துகிறது.

1. வங்கிகளில் பட்டியலிடப்பட்ட மற்றும் சிறப்பு நேரடி ஆய்வுகளை மறைமுக கடும்கண்காணிப்பு, ஆய்வுக்குப்பின் உடன்பாடுகளை தொடர் செயலாக செய்தல் போன்றவற்றிற்கு உத்தரவாதம் கொடுக்கிறது.

2.   நிதியியல் மேற்பார்வை மன்றக்குழுவின் [ BFS ]  செயலகமாக  செயல்படுதல்.

3. சட்டப்பூர்வ கணக்குப் பரிசோதகர்கள் மற்றும் சிறப்புக்கணக்குப் பரிசோதகர்களை நியமிப்பதற்கான அடிப்படை தகுதிகளை தீர்மானித்தல், மேலும் தணிக்கை செயலாக்கத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் தெரிவிக்க வேண்டிய தரம் இவற்றை தீர்மானித்தல்.

4.    நிதியியல் துறையின் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளையும், பொதுமக்கள், வங்கிகள், அரசு, இவர்களிடமிருந்து வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் பேரில் பெறப்படும் புகார்களையும் கவனிக்கிறது.

5.ஒழுங்குமுறைகளை அமல்படுத்தும்  போது, மேற்பார்வைக்குரிய தலையீடுகளை கீழ்க்காணும் பணிகளில்  கையாளுதல் – அவையானவை – நிர்வாக மற்றும்  பிற நபர்களை நீக்குவதற்கு பரிந்துறை செய்தல், வாணிகத்தை தற்காலிகமாக நிறுத்துதல், இணைத்தல், பெரிய நிறுவனத்துடன் இணைத்தல் / மூடிவிடுதல், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குதல் மற்றும்  அபராதங்களை அமல்படுத்துதல்.

அங்கீகரிக்கப்பட்ட வாணிகர்களை  பற்றிய  ஆய்வு, அந்நியச்ச்  செலவாணி துறையில் நடத்தப்பட்டது. இந்தப்பணி 2004 முதல்  வங்கியில்  மேற்பார்வை துறைக்கு மாற்றப்பட்டது.

மேற்பார்வை நடைமுறைகள்

நிதியியல்  மேற்பார்வைக்காக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரை தலைவராகவும், ஒரு துணை ஆளுநரை உபதலைவராகவும், மற்ற துணை ஆளுநர்கள் மற்றும்  ரிசர்வ் வங்கி மத்திய குழுவின் நான்கு இயக்குனர்களை அங்கத்தினர்களாகவும் கொண்ட உயர் அதிகார மன்றக்குழு ஒன்று 1994 நவம்பரில்  ஏற்படுத்தப்பட்டது.  வங்கிக் குழுமங்கள், (Companies) நிதிநிறுவனங்கள், வங்கியல்லாத நிதி குழுமங்கள் இவற்றை மேற்பார்வை ஆய்வும் செய்வதற்கான அதிகாரத்தை பயன்படுத்தும்  உரிமை இதற்கு அளிக்கப்பட்டது.

தற்சமயம், நிதியியல் மேற்பார்வை மன்றக்குழு [BFS] வங்கிகளை மேற்பார்வை செய்வதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட, முன்னேற்ற நிதிநிறுவனங்கள் [DFIs], வங்கியல்லாத நிதிகுழுமங்கள் [NBFCs], முதன்மை வணிகர்கள் [PDs] மற்றும் நகர்ப்புற  கூட்டுறவு வங்கிகள் [UCBs]  ஆகியவற்றையும்  மேற்பார்வை செய்கிறது.

மேற்பார்வையின்  திறன்

வங்கியியல் மேற்பார்வைத் துறை, மேற்பார்வைக்குரிய திறனை வடிவமைத்து, அதோடுகூட நேரடி ஆய்வின்  முக்கியத்துவத்தை தக்கவைத்துக் கொள்கிறது. அது வங்கியியல் மேற்பார்வையின்  முக்கிய கொள்கைத்திட்டமாக இருக்கிறது. மேலும் மற்ற மூன்று பகுதிகளையும்  முக்கியப்படுத்துகிறது.

  • விவரத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தியதின்  மூலம் மறைமுக கண்காணிப்பு செய்தல்.
  • உள்முக கட்டுப்பாடு ஒழுங்குமுறைகளை வங்கிகளில் பலப் படுத்துதல்.
  • மற்றும் வங்கியியல் மேற்பார்வையில் வெளிமுக கணக்குப்  பரிசோதகர்களின்  பயன்பாட்டை உயர்த்துதல்.

நடப்பு முக்கியத்துவம்

1.   சட்டப்பூர்வ கட்டளைகளான, கடன் தீர்க்கும் திறன், பணத்தை தயாராக  வைத்தல் மற்றும் வங்கிகளின் செயல்பாட்டை நலமுடன்  காத்தல்  ஆகிய  இவைகளை   ஆண்டு  நிதியில்  நேரடி  ஆய்வு  ஒழுங்குமுறை  முக்கியப்படுத்துகிறது.  இவைகள்  சர்வதேச  அளவில்  ஏற்றுக் கொள்ளப்பட்ட மாதிரி [ Camel Model ] [ போதிய  மூலதனம்,  சொத்துக்களின்  தரம்,  மேலாண்மை, வருவாய்கள், பணமாக வைத்தல் ], ஆகியன CAMELS ஆக [ஒழுங்குமுறைகள்  மற்றும் கட்டுப்பாடு ]  என  இந்திய வங்கி அமைப்புகளின் தேவைகளுக்கு பொருந்துமாறு  மாற்றப்பட்டது.

2.    CAMELS [ அயல்நாட்டு  வங்கிகளுக்கு CALCS ] இன்  அடிப்படையில்  மேற்பார்வை  மதிப்பீடுகள்,  தரம் சார்ந்த மற்றும் அளவு சார்ந்த கூறுகளை இணைத்து, வங்கிகளின்  தனிப்பட்ட  செயல்பாடுகளை மொத்தமாக  தொகுக்கவும்,  மேலும்  வங்கி அமைப்புகளின்  ஒட்டு மொத்த  பலத்தையும்,  நிறைநலத்தன்மையையும்  மதிப்பிடுவதுமாகும்.

3.    1995ல்  மறைமுக  மற்றும்  கடும்கண்காணிப்பு [OSMOS]  அமைப்பு  அமைக்கப்பட்டது. இரண்டு  நேரடி  ஆய்வுகளுக்கிடையே,  வங்கிகளின் நிதிநிலையை  பகுப்பாய்வு  செய்வதே  இதன் முதன்மை நோக்கமாகும். வங்கிகளால்  பெறப்படும்  விபர அறிக்கைகள் விரிவான தகவல்  பகுதிகளை கொண்டதாகும்.  அதாவது சொத்துக்கள்,  பொறுப்புகள் மற்றும் இருப்பு நிலை ஏட்டின் இடம் பெறாத திறந்த நிலை எளிதில்  பிரச்சனைக்குள்ளாகும் பகுதிகளின் திறந்த நிலை, வட்டி வீதம் மற்றும் பணத்தை தயாராக வைக்க முடியாத இடர்கள் [ உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு நாணயங்கள் ], சார்பு  வங்கிகளின் செயல்படுத்துதல் போன்றவை. இவை ஒழுங்குமுறைகள் மற்றும் பணவியல் செயல்முறை கொள்கைகளின் ஒழுங்குகளை நேர்த்தியானதாக  செய்ய  செயல்முறை திட்டம் வகுப்போர்க்கு உதவுகிறது.  மேலும் இதன் மூலம்  வளர்ச்சி மற்றும்  நிதியியல் திடநிலை இவை இரண்டிற்கும் இடையில்  தரமான சமநிலை இலக்கை அடையவும் உதவுகிறது.

4.    பேரளவு  விவேக சுட்டிக்காட்டுதல்கள் [ MPIS ] மார்ச் 2000 முதல் தொகுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் நிதியியல் ஸ்திரத்தன்மையை மேற்பார்வையிடும் பணியில் சிறப்பான சர்வதேச நடைமுறைகளை ஏற்று அமல்படுத்திடும் இந்திய ரிசர்வ் வங்கியின் முனைப்பான முயற்சியின் அம்சமாக இந்த சுட்டிக்காட்டுதல்கள் தொகுக்கப்பட்டன. தனிப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் நலன் சார்ந்த  மொத்தமான நுண்ணிய விவேக சுட்டிக்காட்டுதல்கள் [AMPIS] மற்றும் நிதியில் ஒழுங்குமுறையின் பழுதற்றநிலை சம்பந்தமான பேரளவு பொருளாதார சுட்டிக்காட்டுதல்கள் [MEIS] இவை இரண்டும் உள்ளடங்கியதே பேரளவு விவேக சுட்டிக்காட்டுதல்கள் [ MPIS ].

5.    ஆய்வில் இடர்வரவை அடிப்படையில் கொண்ட மேற்பார்வை அணுகுமுறை, மேற்பார்வை ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யவும் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் இடர்வரவின் தோற்றத்தின்படி, மேற்பார்வைக்குரிய கவனத்தை முக்கியப்படுத்துவதின் மூலம் வங்கிகளை கண்காணிக்க மேற்கண்ட அணுகுமுறை உதவுகிறது.  இந்த நடைமுறையில், இடர் வரவு மேலாண்மை ஒழுங்குமுறைகளின் பொருத்தம் அதாவது தொடர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவை சம்பந்தப்பட்டிருக்கிறது. மேலும் மேற்பார்வை செய்த நிறுவனத்தின் சூழலை கட்டுப்படுத்துதல், அதாவது அதன் வியாபாரத்திறன் மற்றும் படு நிலை இவற்றை அதன் அபாயமிக்க தன்மையை மதிப்பிடும் நோக்கில் செய்ய வேண்டும்.

6.    காலந்தவறாது திருத்தும் நடவடிக்கை ஒழுங்குமுறை [ PLA ] முன் தீர்மானிக்கப்பட்ட விதி அடிப்படையிலான, சரியான நேரத்தில் தலையிடும் விதத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு - ஏற்கனவே இருக்கும் மேற்பார்வைக்குரிய கட்டமைப்பு இவற்றை சரியான இடத்தில் தீவிரமாக்குதல்.  காலந்தவறாது திருத்தும் நடவடிக்கையின் கீழ், நிச்சயமான அமைப்பு நடவடிக்கை இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் துவங்கப்பட்டது.  வங்கிகளைக் குறித்து, அவைகள் நிச்சயமாக குறித்த மூன்று தனித்தன்மையின் வரையறைகளை விரைவில்  தாக்கும்.   அவையாவன. இடர்வரவு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள் விகிதத்துக்கு மூலதனநிதி [CRAR], நிகர செயல்படா சொத்துக்கள் [ NPAS ] மற்றும் சொத்துக்களில் மீள்வரவு [ ROA ].

7.    வங்கித்துறையின் மோசடிகளை தடுப்பதற்காகவும், மோசடிக்கு சாதகமான மிகமுக்கிய பகுதிகள் மற்றும் மோசடிகளை தடுக்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் வங்கிகள் அவ்வப்போது அறிவுறுத்தப்படுகின்றன.  2004 ஜுன் மாதத்தில் மோசடி எச்சரிக்கை பிரிவு இத்துறையில் கீழ்க்கண்ட பணிகளுக்காக துவங்கப்பட்டது. [i] வங்கித் துறையில் ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்தல் [ii] வெளிப்படும் மோசடிகளின் போக்கினை தெளிவாக கண்டுணர்ந்து அவைகளை மிண்ணணு ஊடகங்கள்  மூலம் சுற்றறிக்கையாக வங்கிகளுக்கு தெரியப்படுத்துதல் [iii] நமது தேவைக்கேற்ப, நமது நடைமுறைகளை சர்வ தேச சிறந்த நடைமுறைகளோடு ஒத்திருக்க செய்தல்  [iv] மோசடிகள் தடுப்பு மற்றும் புலன்விசாரணை தொடர்புடைய, மத்திய விழிப்புணர்வு ஆணையம் [CVC] மத்திய புலனாய்வுத்துறை போன்ற பல்வேறு வெளிமுக முகமைகள் இவற்றுடன் இணைந்து செயல்பட இணைப்பு முகமையாக செயல்படுதல் [v] நிதித்துறையில் நடக்கும் மோசடிக்குறித்த மத்திய செய்தி களஞ்சியமாக செயல்படுதல் மற்றும் மோசடிகளை தடுக்கும் சிந்தனைக் களமாகவும் செயல்படுதல்.

8.    இடர்வரவு மற்றும் விவேக ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுதலை தொகுப்பு முறையில் மதிப்பிட ஒன்றுபட்ட கணக்குகள் மற்றும் மேற்பார்வை  பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் 2003 மார்ச் 31ம் முடிந்த வருடத்திலிருந்து பின்பற்றப்பட வெளியிடப்பட்டது.  இது குறித்த ஒன்றுபட்ட விவேக அறிக்கைகளை [ CPR ] தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டுமென வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன.  இந்த அறிக்கைகள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ரிசர்வ் வங்கியினால் பரிசீலனை செய்யப்படுகிறது.

9.    இந்திய ரிசர்வ் வங்கி [RBI ] இந்திய பத்திரப் பங்கு பரிவர்த்தனை குழு [SEBI], இந்திய காப்பீடுகள் ஒழுங்கீடு மற்றும்  வளர்ச்சிக்கான ஆணையம் [IRDA] போன்ற நிதியியல் ஒழுங்கு படுத்தும் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒருவரை அங்கித்தினராக கொண்ட பணிக்குழு மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் பற்றி ஆராய அமைக்கப்பட்டது.  மிகப்பெரிய நிதி நிறுவனங்களை அடையாளம் காண சில தகுதிகளையும், நிதிநிறுவன தொகுப்புக்குட்பட்ட பரிவர்த்தனை மற்றும் அந்த நிறுவனங்களுக்கிடையேயான கொடுக்கல் வாங்கல் ஆகிய விவரங்களை சேகரிக்கும் கண்காணிப்பு அமைப்பு, மற்றும் நிறுவனங்களைப் பற்றி தகவல்களை பரிமாறிக் கொள்ளும் அமைப்பு இவைகளைப் பற்றி இக்குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.

10.   பேசல் II [ BASEL II ]ன் கீழ் அழுத்தமாய் கூறப்பட்ட சந்தை ஒழுங்குகளின் முக்கியம் மற்றும் ஒளிவு மறைவில்லா நிலையை உயர்த்த வங்கிகள், ரிசர்வ் வங்கியினால் சுமத்தப்பட்ட அபராதங்கள் குறிப்பிட்ட விவரங்கள் மீது கூறப்பட்ட கண்டனங்கள் / அறிவுரைகள், ஆய்வின்  மூலம் வெளிவருவன உட்பட்டவற்றை பகிரங்கமாக வைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவறுத்தப்பட்டன.

11.இத்துறையின் மேற்பார்வை திறம் கீழ்கண்டவைகளையும் உட்கொண்டுள்ளது.

  • ஜிலானி கமிட்டி பரிந்துரைகள்படி வங்கிகளின் உள்முக கட்டுப்பாடுகளை பலமுறச் செய்தல் மற்றும், இடர்வரவு சார்ந்த உள்முக ஆய்வை [RBIA] அமல்படுத்துதல்
  • சட்டப்படி தேவையான நிதியைப் பணமாக வைத்திருத்தல், வருவாயை தெளிவாய் அறிந்து கொள்ள உதவும் விவேக சுட்டிக்காட்டுதல்கள, சொத்துக்களை வகைப்படுத்துதல் மற்றும் ஒதுக்கீடு செய்தல், வங்கியின் மதிப்பிடப்பட்ட போதுமான முதலீட்டு விகிதம் [CAR], வருடக்கணக்குகளின் விளக்ககுறிப்பில் தெரிவிக்கப்படவேண்டிய ஏனைய விகிதங்களை உறுதிப்படுத்துதல், நீள்படிவ தணிக்கை அறிக்கையில் கூறப்படும் செயல்பாடுகள் குறித்த விளக்கவுரைகள் போன்றவைகளை வங்கிகள் பின்பற்றுவதை சரிபார்த்து நற்சான்றுமிக்க  சட்டபூர்வ கணக்குப் பரிசோதகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களை உபயோகப்படுத்துதல்.
  • குறைந்தது 50 சதம் வணிகத்தை உட்கொணட வங்கிப் பரிவர்த்தனைகளை, உடனுக்குடனான தணிக்கை மூலம், அந்நியச் செலவாணி, முதலீடு சம்பந்தப்பட்ட, இடர்வரவுள்ள துறை சார்ந்த முதலீடுகள் ஆகியவற்றை 100% தணிக்கை செய்தல் ஆகியன நடைமுறையில் உள்ளன என்பதை உறுதி செய்யும் முறை.
  • கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டவைகளைத் தெரிவிக்கும் முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டியவை.  அது குறித்த முன்னேற்றங்கள் ஆகியன பற்றி விவாதிக்க ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள், வங்கிகளின் முதன்மை செயல் அலுவலர்கள் / தலைவர், நிர்வாக இயக்குனர்கள் இடையேயான காலாண்டு கூட்டங்கள் என்னும் நடைமுறை 2000ம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்பட்டது.  நிதிநிலையை பலப்படுத்தல் பற்றிய வங்கிகளின் திறன் வாய்ந்த திட்டங்கள், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சிகள், அதனால் அடைந்த பயன்கள் ஆகியவையையும் கூட்டத்தில்  விவாதிக்கப்படும் கொள்கை சார்ந்த விஷயங்களில், வங்கியாளர்களுக்குத் தேவையான விளக்கங்களை எழுப்பும் இடமாகவும் இந்தக் கூட்டங்கள் இருக்கிறது.

 வங்கி சாரா மேற்பார்வைத் துறை

குறிக்கோள்

  • வங்கி சாரா நிதி நிறுவனங்களை நிதியியல் முறைகளின் ஒன்றுசேர்ந்த ஆரோக்கியமான பங்காக மேம்படுத்துவது. அதன்மூலம்
  • அவைகளில வைப்பு வைத்திருப்போர் நலன் கருதி மறைமுக பாதுகாப்பு தருவது

ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை கட்டமைப்பு

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் ஜனவரி 1997 திருத்தப் பட்டப்படி, ஏனையவற்றிற்கிடையே கீழ்கண்டவைகளும் கூறுகிறது

  • வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நுழைவு குறித்து கொள்கை வகுத்தல்; குழுமமாக்கப்படாத அமைப்புக்கள் வைப்புநிதி பெறுவதை (சில விதிவிலக்குகள் தவிர) தடைசெய்தல்
  • சொத்துக்கள் பற்றிய விபரங்களுக்கான கட்டுப்பாடுகளை வகுத்திட ரிசர்வ் வங்கியின் அதிகாரம்
  • கட்டாயமாக பதிவுசெய்தல், சொத்துக்களை தயார்நிலை நிதியாக பராமரித்தல் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி
  • வைப்புநிதி பெறுவது பற்றிய அறிவுரைகள், விவேக ஒழுங்கீடு
  • வைப்பு நிதி பெறும் NBFCகளுக்கான பரந்துபட்ட நெறிமுறைகள் மூலம் கட்டுப்படுத்துதல்
  • பதிவு சான்றிதழ் ரத்துசெய்தல், வைப்புநிதி பெறுவதை தடைசெய்தல், சொத்து உரிமையை மாற்றுதல், குற்றவியல் புகார்களை மற்றும் சீர் செய்ய முடியாத நிறுவனங்களை மூடுவதற்காக மனுவை பதிவு செய்தல்.  ரிசர்வ் வங்கியின் பார்வையாளர்களை சில நிறுவனங்களில் நியமித்தல்

NBFC க்கு இந்த அடிப்படை சட்ட கட்டமைப்பின்கீழ், ரிசர்வ் வங்கி மேற்பார்வை கட்டமைப்பை NBFC க்காக உருவாக்கியிருந்து அது,

a.   நேரடி ஆய்வுகள் (Camels Pattern)

b.    விவர அறிக்கைகளின்மூலம் தொலைநிலை கண்காணிப்பு

c.    சந்தை நுண்ணறிவு

d.   விதிகளை மீறிய நிகழ்வுகள் பற்றிய தணிக்கையாளரின் அறிக்கை

மேம்பாட்டு நடவடிக்கைகள்

இத்துறையில் அங்கீகாரமில்லாத மற்றும் மோசடியான நடவடிக்கைகளை அகற்ற சட்டம் இயற்ற மாநில அரசுகளுடன் ஒன்றுபட்டு செயல்படுதல். வைப்பு நிதியாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வை அளித்தல், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வைப்புதாரர்களுக்கான பயிற்சிகள்/ கருத்தரங்குகள்.

தீர்மானங்களில் உதவிட முறைசாரா ஆலோசனை குழு

NBFCன் சுய ஒழுங்குள்ள அமைப்புகளை துவங்குவதற்கு உதவி செய்தல்

NBFCன் பணியாளர்கள் மாநில அரசு மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்

நடப்பு முக்கியத்துவம்

  • அங்கீகாரமில்லாமல் வைப்பு நிதி பெறுவதை வழக்கு தொடரக்கூடிய குற்றமாக கருத வேண்டி, புதிய சட்டம் கொணர்தல்
  • பலதரப்பட்ட மக்களுக்கு (NBFC களின் தணிக்கையாளர் உட்பட) கல்வி சார்ந்த பிரசாரம், பயிற்சி/கருத்தரங்கம் முதலிய-வற்றின்மூலம் பொது மக்கள் அறியும் வண்ணம் இன்னும் பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்
  • NBFC களின் சொத்து – பொறுப்பு / இடர்நேர் மேலாண்மைகளின் முறைகள் ஆகியவற்றை செயல் முறை படுத்தல்
  • தகவல்  தெரிவித்தல் குறித்த நியமங்களை தீவிரமாக்கல், நிதி அறிக்கைகளுக்கு புதியவடிவம் கொணர்தல்
  • இணைய மயக்காக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பித்தல்

நிறுவன அமைப்பு

  •  ஜூலை 1997ல் ஆரம்பிக்கப்பட்டது, இன்றுவரை 16 வட்டார   அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன
  • தகவல் பரிவர்த்தனை மற்றும் தொலைக்காட்சிக் கலந்தாய்வுக் கூட்டம் ஆகியவற்றிற்காக மத்திய அலுவலகமும் வட்டார அலுவலகங்களும் பெரும்பரப்பு வலையமைப்பில் (WAN) ஒன்றிணைக்கப் பட்டுள்ளன
  • வேகமான ஒருமுகப்பட்ட நடவடிக்கைக்காக ஒழுங்கீடு மற்றும் மேலாண்மை பணிகள் ஒருமைப்படுத்தப் பட்டுள்ளன.

 வங்கி மேம்பாடு மற்றும் செயல் துறை

பணிகள்

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949, ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 மற்றும் ஏனைய சட்டங்கள், வங்கியியல் செயல்முறை கொள்கைகள் ஆகியவற்றின்கீழ், இத் துறைக்கு வணிக வங்கிகளை ஒழுங்கீடு செய்யும் பொறுப்பு தரப்பட்டது.  வங்கிகள் விதிகளின்படி பணம், சட்டபூர்வ தயார்நிலை ஒதுக்கீடுகள், தலைமைசெயல் அலுவலரை நியமித்தல் மற்றும் சில செயலாக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் இதில் அடங்கும்.

இத்துறை செம்மையான போட்டியுள்ள வங்கி முறைகளை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் உழைக்கிறது.  இதற்காக போதுமான முதலீடு, வருவாயை கண்டுணர்தல், சொத்துக்களை இனம்பிரித்தல், கடன் மற்றும் இதர இழப்புகளுக்கு தொகை ஒதுக்குதல், முதலீட்டை மதிப்பீடு செய்தல், கணக்கியல்/வெளியே தெரிவித்தல் குறித்த நியமங்கள், சொத்து-பொறுப்பு மேலாண்மை, இடர் வரவு மேலாண்மை முறைகள் ஆகிய தொடர்பான விவேக ஒழுங்கீட்டு முறைகளை கொணர்கிறது. மற்ற முக்கிய பணிகளில் புது வங்கிகளுக்கு அனுமதி அளித்தல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகளின் விரிவாக்கம், துணை நிறுவனங்கள் அமைக்க மற்றும் புது நடவடிக்கைகள் மேற்கொள்ள வணிக வங்கிகளுக்கு அனுமதி அளித்தல், நலிந்த வங்கிகளை சீராக்க தொடர் நடவடிக்கை ஆகியவையும் அடங்கும்.

நடப்பு முக்கியத்துவம்:

  • நிறுவன ஆட்சியியல்

  •  வெளிப்படுத்தலின் விதிகள் பற்றிய விவாதக் கட்டுறைகள்

  • சொத்துக்களை சீர்திருத்தும் குழுமம்

  • பெரிய கடன்களை மறு அமைப்பு செய்தல்

  • வங்கி ஒழுங்கீட்டியல் சட்டத்தை திருத்துதல்

  • வங்கிகளுக்கான சர்வதேச கணக்கியல் நியமங்களை செயல்படுத்தல்

  • கடன் தொடர்பான செய்தி அறிவிக்கும் அலுவலகம்

  •  புதிய போதுமான முதலீட்டு கட்டமைப்பு

  •    நலிந்த வங்கிகளை புணரமைத்தல்
  • விவேக நியமங்களை, சர்வதேச நன்னடவடிக்கைகளும்  ஒத்திருக்கும்வகையில் மேம்படுத்தல்
  •  சட்ட சீர்திருத்தம்

  • காப்பீட்டு வணிகத்தில் வங்கிகளின் நுழைவு

  •  மின்னணு வங்கியியல் ஒழுங்கீடு

  •  தனியார் துறையில் புதிய வங்கிகள் துவக்க அனுமதி விதிமுறைகள்

  •  நாட்டுடமையாக்கப்பட்டுள்ள வங்கிகளின் அரசு முதலீட்டைக் குறைத்தல்
  • வங்கி ஒளிவுமறைவின்மையில் முன்னேற்றம் செய்தல்

இத்துறை பின்வருவனவற்றை கவனிக்கிறது.

1.  ரிசர்வ் வங்கியில் கணினிமயமாக்கல்
2.  வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயன்பற்ற திட்டங்களை வடிவமைத்தல்,   வளர்த்தல்
3.  வங்கிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்காணித்தல்

 I. ரிசர்வ் வங்கியில் கணிணி மயமாக்கல்

 ரிசர்வ் வங்கியின் ஆண்டுக் கணக்கில் விளைவு ஏற்படுத்தும் வங்கித்துறை (வைப்பு கணக்குகள் துறை, பொது கணக்கு துறை, பொதுக்கடன் அலுவலகம், மத்திய கணக்குப்பிரிவு) மற்றும் பணம் வழங்கல்துறை (பணக் கருவூலங்கள் நிர்வாகம் மற்றும் கணக்குகள்)  எல்லா நடவடிக்கைகளையும் கணிணி மயமாக்க DIT ஒருமுனைப்பட்டு இயங்கி வருகிறது. இ

 தகவல் தொழில் நுட்பத்துறை

த்துறைகள் வாடிக்கையாளர் சேவைகளையும் அளிக்கின்றன. ஆகையால் இந்த துறைகளை கணிணி மயமாக்கல் என்பது சிறந்த உள்ளக வேலைகள் (Housekeeping) மற்றும் திறனுள்ள வாடிக்கையாளர் சேவைகளையும் சிறப்புறச் செய்யும் நோக்குடன் உள்ளது.  இத்துறை மேற்கொண்ட கடமைகள் வன்பொருள் வாங்குதல், மென்பொருள் தயாரித்தல், அவைகளின் பரிசோதனை மற்றும் அவைகளின் தரத்தினை உயர்த்துதல் என்பன ஆகும்.  இக்கடமைகள் கிட்டத்தட்ட முழுஅளவு நிறைவேற்றபட்டாலும் தரம் உயர்த்தும் நடைமுறைகள் இன்னும் செயல்படுத்தவிருக்கிறது. சிறப்புத்துறைகளுக்கு அமைப்பின் தேவை குறித்த திட்டவிவரங்கள் (SRS) தயாரித்தல், புதுச் செயல் திட்டம் அளிப்பதை வேண்டுதல் (RFP), வெற்றிகரமாக திட்டங்களை அமல்படுத்த தேவையான மென்பொருள் தயாரித்தல் அல்லது வெளியிலிருந்து பெறுதல் ஆகியவற்றில் உதவுகிறது.

II.  வங்கிகள், நிதிநிறுவனங்கள் பயன்படுத்த திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் வளர்த்தல்:

செயலமைப்பை திறன்மிக்கதாக நேர்வழியில் உதவ ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் கீழ்கண்டவையாகும்:

ஏற்கனவே ஏற்படுத்திய திட்டங்கள்

  •   நான்கு பெருநகரங்களில் (மும்பை, புதுடெல்லி, கோல்கொத்தா மற்றும் சென்னை) MICR காசோலை செயலாக்கம்
  •  மின்னணு  தீர்வு சேவைகள் (பற்று / வரவு) ரிசர்வ் வங்கி அலுவலங்கள் உள்ள 15 மையங்கள் மற்றும் இந்திய ஸ்டேட் வங்கியின் மேலாண்மையிலுள்ள 30 மையங்கள்
  • மின்னணு நிதி மாற்றம் நான்கு பெருநகரங்கள் மற்றும் ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூர் ஆகிய இடங்களில்

செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள்

  • இந்திய நிதி வலையமைப்பு (INFINET)

  • பங்கு தீர்வு முறைமை (SSS) மற்றும் உடன்பாட்டுத் தீர்வு முறை (NDS)
  •  மையப்படுத்தப்பட்ட நிதி நிர்வாக முறை (eFMS)
  • வடிவமைக்கப்பட்ட நிதிசார்ந்த தகவல் தீர்வு வழி(SFMS)
  •  உடனுக்குடனான மொத்த தீர்வுமுறை (RTGS)

III. கண்காணிப்பு

  • o70% வணிகத்தை கணிணி மயமாக்குதல்/வலைப் படுத்தல் என்ற மத்திய ஊழல்தடுப்புக் குழு (CVC) இட்ட இலக்கை அடைவதில் உள்ள முன்னேற்றம்
  • oபெருநகரமல்லாத இடங்களில் காந்தமை காசோலை செயலாக்க மையங்களை ஏற்படுத்தல்
  • oவன்பொருள், இயக்க அமைப்பு மற்றும் தொடர்பு மேடை ஆகியவற்றில் தர நிர்ணயத்தை மேற்கொள்ளுதல்
  • oஉள்முக மற்றும் வரம்பு கடந்து பன்முக தொடர்புகளுக்கான கட்டமைப்புகளை (மர/நட்சத்திர வடிவமைப்புகள் மேம்படுத்துதல்.

சட்டத்துறை

பணிகள் :

ரிசர்வ் வங்கியின் துறைகள்/அலுவலகங்கள்/சார்பு நிறுவனங்கள் ஆகியன குறிப்பிடும் பல விஷயங்களின்மீது சட்ட ரீதியான அறிவுரைகளைத் தருவது இத்துறையின் முக்கிய பணியாகும். இத்தகைய குறிப்பிடல்கள் பெரும்பாலும் இந்திய அரசியல் சட்டம்/ஆட்சிமுறை சார்ந்த சட்டம், ரிசர்வ் வங்கிச் சட்டம், வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் (வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தும்).  அந்நியச் செலாவணிச் சட்டம், அரசுப் பத்திரச் சட்டம் மற்றும் வேறுபல மத்திய/மாநில சட்டங்களை கருத்து விளக்கம் கோருபவை ஆகும்.  ரிசர்வ் வங்கி பணியாளர்கள் குறித்த விதிமுறைகள் ஒழுங்குமுறைகள் பற்றியும் தொழில் உறவுகுறித்த சட்ட விஷயங்களிலும் கருத்து விளக்கமளிக்கவும் கடமைப்பட்டுள்ளன.

சட்டவடிவமைத்தல் அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்து, விதிகள், ஒழுங்குமுறைகள் போன்ற இரண்டாம் படியான சட்டங்கள், வங்கித்தொழில் சார்ந்த சட்டங்களின் கீழ் செய்யப்படும் சட்ட அறிவிப்புகள் அல்லது கட்டளைகள் ஆகியவையும் இத்துறைக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி தொடுக்கும் அல்லது அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விவகாரங்களில் இத்துறை, ரிசர்வ் வங்கியின் வழக்கறிஞருக்கு தகவல் அளித்தல், ரிசர்வ் வங்கியின்  வழக்கறிஞருக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடைப்பட்டவராக செயல்படுதல் எனவும் பணி செய்கிறது.

வங்கிக்காக இருப்பிடச் சொத்தினை வாங்குவதில் வங்கியின் வழக்கறிஞர் மூலம் சொத்தின் உரிமைப் பத்திரம் பற்றி ஆய்வு செய்தல், கட்டிடம் கட்டுவதற்கான ஆவணங்களை கையாளுதல் ஆகிய பணிகளையும் செய்கிறது.

பணக் கொள்கை துறை

பணிகள்

வருடாந்திர, பணவியல் மற்றும் கடன் கொள்கைகளை வகுத்துதல், கண்காணித்தல்,  அமல்படுத்தல் ஆகியவை இத்துறையின் முக்கிய நோக்கமாகும்.  பணவியல் கொள்கை மற்றும் பணவியல் மேலான்மையை முக்கியப்படுத்துவதுடன், அதன் செயல்படும் பங்கை உயர்த்தும் நோக்கில், பொருளாதாரத்தில் ஏற்படும் முன்னேற்றத்தின் சூழ்நிலைக்கேற்ப, துறையின் கொள்கைப்பணிகள் இடைவிடாமல் படிப்படியாக தோற்றுவிக்கப்படுகிறது.  இத்துறை தற்சமயம் சந்தை நுண்ணறிவு / பகுப்பாயவு கொள்கை மதிப்பீடு மற்றும் அவை பற்றிய நுட்ப ஆய்வு இவைகளை பெரிய அளவில் முக்கியப்படுத்துகிறது.

  • பணவியல் செயல்முறை திட்டம் மற்றும் பணவியல் நிதிநிலை அறிக்கையை தயார் செய்தல்.
  • வட்டி வீதத்தை உள்ளடக்கிய, வங்கியின் மொத்த மற்றும் முக்கிய பண இடப்பெயர்ச்சியை கண்காணித்தல்.
  • பணவியல் மற்றும் கடன்கள் முன்னேற்றத்தை, குறித்த கால இடைவெளியில் மறுபார்வை செய்தல்.
  • பண ரொக்க இருப்பு விகிதம் [CRR] மற்றும் சட்டபூர்வ பணமாக வைக்கும் விகிதம் [SLR] இவற்றை அட்டவணை வணிக வங்கிகள், சரியாக வைத்திருப்பதை கண்காணிப்பு மற்றும் மறுபார்வை செய்தல்.
  • மறுநிதியளிப்பு எல்லை, அட்டவணை வணிக வங்கிகளுக்கு பயன்பாடு இவை குறித்து, ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு செய்தல்.
  • பணச்சந்தையின் முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை [DATA] சேகரித்தல், கொடுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்
  • குறிப்பிட்ட, அனைத்திந்திய நிதியியல் நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களின் தகவல்களை [DATA] சேகரித்தல், கொடுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்.
  •  வங்கிகளின் நிதி ஆதார மேலாண்மை திட்டங்களை பகுத்தல் மற்றும் விவாதித்தல்.
  • அடிக்கடி மாறும் விளைபொருட்களுக்கான, விலை மற்றும் கடன் வழங்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மறு பார்வை செய்தல்

நடப்பு முக்கியத்துவம்

இத்துறை தற்போது, வலுவான குறைந்த கால செயல் மாதிரியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த செயல் மாதிரி நிதியியல் துறைகளின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையேயுள்ள நடைமுறை உறவுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுகிறது. எதற்காகவென்றால் நோக்கத்தை அடைய, பெரிய அளவில் நிதியியல் ஒருமைப்பாடை அடையும் போது மற்றும் பணவியல் கொள்கையின் பரவி செயல்படுதலை புரிந்து கொள்வதற்காக.

சர்வதேச நிதியியல் முறைகளும் விதிகளும் குறித்த நிலைக்குழுவிற்கு செயல் அலுவலகமாகவும் உள்ளது.

 உள்நாட்டு கடன் மேலாண்மைத்துறை

பணிகள்:

ரிசர்வ் வங்கிச் சட்டத்தின்படி உள்ள அதிகாரத்தின்கீழ் ரிசர்வ் வங்கி, பொதுக்கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளில் புதிய கடன்களை வெளியிடுதல் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணம் மற்றும் பணமாக்க வைக்கும் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்கிறது மற்றும் வழிவகை செலவுக் கடன்களை நிர்வகிக்கிறது.

உள்நாட்டுக் கடன்களை இத்துறை நிர்வகிக்கிறது. அவ்வப்போது அரசுக்கடன் ஏலங்கள் நடத்துவது, புதிய பத்திரங்களை கொணர்வது, கடன்முதிர் அமைப்பை தடங்கலில்லா முறையில் ஏற்படுத்துவது, சந்தை விகிதப்படி கடன்களை வைப்பது இரண்டாம்நிலை சந்தையை ஏற்படுத்தி அரசு பத்திரங்களுக்கு பணமாக்கும் திறனை மேம்படுத்தல் ஆகியவை இதிலடங்கும், பணவியல் கொள்கையை நிர்வகிக்க எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போது பணமாக வைக்கும் செயலை நிறைவேற்றுகிறது. திறந்த நிலை சந்தை செயல்பாடுகள் பத்திரங்களை வாங்குதல் விற்றல் (திரும்ப விற்றல் வாங்கல் என்ற அடிப்படையில) (Repo, Reverse Repo) போன்ற பல பத்திரங்கள் மூலமாக இவைகளை செய்கிறது.

நடப்பு முக்கியத்துவம்:

  • பங்கு சந்தையில் உயர்காப்பு பத்திரங்களை வணிகம் செய்தல் உட்பட அரசு பத்திரங்களில் சில்லறை வணிகம் செய்தல்
  • அரசு பத்திர பரிவர்த்தனைகளின் வணிகம் மற்றும் தீர்வு செய்வதற்கான தொழில் நுட்பத்தை மேம்படுத்தல் – தீர்வு நிறுவனம் ஏற்படுத்துவது உட்பட
  • தற்போதுள்ள பொதுக்கடன் சட்டத்திற்கு பதிலாக புதிய அரசு பத்திரச் சட்டத்தை அறிமுகம் செய்தல்

 அந்நிய முதலீடுகள் மற்றும் செயல்பாட்டு துறை (DEIO)

பணிகள்

இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தை நிர்வகித்தல் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்புகளை நிர்வகித்தல் மேலும் முதலீடு செய்தல் ஆகியவைகள் இத்துறையின் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். இவற்றிற்கான நடவடிக்கைகள்:

  • அவ்வப்போது எடுக்கப்படும் கொள்கையின் அடிப்படையில் அந்நியச் செலாவணி மாற்று விகிதம் நிர்வகிக்கப்படுகிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி மற்றும் தங்கமாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை நிர்வகித்தல் மற்றும் முதலீடு செய்தல்
  • இந்திய அரசிற்காக வெளிநாட்டு பரிவர்த்தனை, சர்வதேச நிதி (IMF) பரிவர்த்தனைகள் ஆகியவற்றை நிர்வகித்தல், முதலீடு செய்தல்.
  • அந்நிய செலாவணிக்கான உத்திரவாத திட்டங்களை அமல்படுத்தல்
  • ஆசிய தீர்வகத்தில் இந்தியா உறுப்பினராக உள்ளதால் உருவாகும் விஷயங்கள்
  • தங்கக் கொள்கைகள் சார்ந்த விஷயங்கள், பன்னாட்டு தீர்வு வங்கியில் உறுப்பினராக இருத்தல் மற்றும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான வங்கியியல் நடைமுறைகள்

அந்நியச் செலாவணி மாற்று விகித நிர்வாகம்

அந்நியச் செலாவணி விகிதத்தின் அன்றாட மாற்றங்கள் சந்தையால் நிர்ணயிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணிக்கான முதன்மை நோக்கங்கள், அந்நியச் செலாவணி சந்தையில் ஒழுங்குமுறையை பராமரித்தல், தவறாமல் நிகழ்தல் (அல்லது) பிற காரணங்கள் ஆகியவற்றால் ஏற்படும் தற்காலிக “வழங்கல்-தேவை” பற்றாக்குறைகளைச் சரி செய்தல், மேலும் நிலையிழக்கச் செய்யும், சுய தேவைகளை நிறைவேற்றச் செய்யும் ஊகவணிக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துதல் ஆகியவையாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ரிசர்வ் வங்கி உள்நாடு, மற்றும் வெளிநாட்டிலுள்ள நிதிசந்தைகளின் நடவடிக்கைகளை ஊன்றி கவனித்து வருகிறது. அதன் பார்வையில் தேவை எனக் கருதும் சரியான பணவியல், நிர்வாகம் சம்பந்தமானவை மற்றும் இதர நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு சந்தைச் செயல்பாடுகளை கவனத்துடன் செயல்படுத்துகிறது.

கையிருப்பு மேலாண்மை

அன்னியச் செலாவணி, முதலீட்டுக்கான சந்தை மற்றும் பத்திரங்கள் இவைபற்றிய ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிர்வாகத்திற்கு அவசியமான கட்டமைப்புகளை ரிசர்வ் வங்கி சட்டம் 1934 வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியினுடைய கையிருப்பு கொள்கையின் ஒட்டுமொத்த நிலைப்பாடானது இடர் விருப்பமில்லா நிலையான வருவாயை நோக்கமாகக் கொண்ட ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் அணுகுமுறையின் பின்னே உள்ள முக்கிய நோக்கங்கள் பாதுகாப்பு மற்றும் எளிதில் பணமாக மாற்றவல்ல நிலை என்பதாகவே இருந்து வருகிறது. இந்த வரையறைகளுக்குள் பலன்களை செம்மைப்படுக்குதல் என்பதே திறம்வாய்ந்த செயல் முறைத் திட்டங்களை வகுப்பதை வலியுறுத்துவதாய் அமைகிறது.

நடப்பு முக்கியத்துவம்

  • முழுவதும் கணினி மயமான சூழலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்துறை, அமைப்புக்களை மேலும் செயலில் தற்போது ஈடுபட்டுள்ளது.
  • குறித்த வருவாய் பகுப்பாய்விலும் இத்துறை உள்ளக ஆய்வுத் திறன்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது.

அரசு மற்றும் வங்கிகளின் கணக்குத்துறை (DGBA)

பணிகள்

மிகமுக்கிய மரபு வழியான மத்திய வங்கிப் பணிகள் சிலவற்றை செய்லாக்கும் பொறுப்பினை அரசு மற்றும் வங்கிகள் கணக்குத்துறை ஏற்றுள்ளது. அவையாவன – வங்கிகளுக்கும் அரசுகளுக்கும் வங்கியாளராக செயல்படுதல், மத்திய, மாநில அரசுகளின் பொதுக் கடன்களை நிர்வகித்தல் என்பன. ரிசர்வ் வங்கியின் உட் கணக்குகளை பராமரித்தல் வாராந்திர செயல்பாட்டு அறிக்கை, மற்றும் வருடாந்திர இருப்புநிலை ஏடு, ஆகியவற்றுக்கும் இத்துறையே பொறுப்பாகிறது.

மத்திய மாநில அரசுகளின் பொதுக்கடன்களை நிர்வகித்தல் உட்பட பொதுவான வங்கி வணிகம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ல் கூறப்பட்டவை மற்றும் குறிப்பிட்ட அரசுகளுடனான ஒப்பந்தங்கள் ஆகியவைகளால் முறைப்படி தரப்பட்ட உரிமைகளாகும். இந்தப்பணிகள் அன்றாட அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் பொதுக்கணக்குத் துறை, வைப்பு நிதி கணக்குத்துறை, பொதுக்கடன் அலுவலகம், மற்றும் முகமை வங்கி கிளைகள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் முதன்மை வைப்பு நிதி கணக்குகள் ரிசர்வ் வங்கியின் நாக்பூரிலுள்ள் மத்திய கணக்குப் பிரிவில் பராமரிக்கப்படுகிறது. இப்பிரிவு மத்திய மாநில அரசுகளுக்கான வழிவகைச் செலவுக் கடன்களை, வழங்குதலையும் கவனித்துக் கொள்கிறது.

ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகளினால் அளிக்கப்படும் அதிருப்தியான சேவைகள் பற்றி, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் தீர்க்கப்படுவதையும் இத்துறை கண்காணிக்கிறது.

பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத் துறை (DEAP)

பணிகள்

 ரிசர்வ் வங்கி பொருளாதார ஆய்வில் ஒரு உயர்ந்த பாரம்பரியம் கொண்டது. இதன் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கைத்துறை:

  • இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அடிப்படை விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் (உள்நாடு மற்றும் பன்னாடு) குறித்து பகுப்பாய்வு செய்கிறது
  • இந்திய பொருளாதார பண்புகள் குறித்த புள்ளி விவரம் மற்றும் தகவல்களை வழங்கும் முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. அவை
  • பணம் மற்றும் கடன்களின் மொத்த அளவு ஏற்றுமதி இறக்குமதி நிலுவை, வெளிநாட்டு கடன் பற்றிய புள்ளி விவரங்கள் உள்நாட்டுக் கடன், அரசு நிதிநிலை புள்ளி விவரங்கள், பணப் புழக்கம், மற்றும் நிதிச் சேமிப்பு
  • பொருளாதார கொள்கை ஏற்படுத்தல், பணவியல், வங்கி மற்றும் நிதிக் கொள்கைகள் உருவாக்குதல் ஆகிய இந்த பகுதிகள் பற்றி அறிவுரைகள் / உதவிகள் வழங்குவது மற்றும் தன் கருத்தை தெரிவிப்பது, மேலும்
  • ரிசர்வ் வங்கியின் பொருளாதார நூல் வெளியீடுகளைத் தயார் செய்கிறது.

உரிய நேரத்தில், தரமான, தகவல்களை தருவதை பொருத்தவரையில் ரிசர்வ் வங்கி சர்வதேச தரத்திற்கு ஒத்திருக்கிறது. இத்தகைய தகவல்கள் பல்வேறு வெளியீடுகள் மற்றும் இணையதளம் மூலமாக குறித்த காலத்தில் பரவலாக்கப்படுகிறது.

இத்துறை 6 முக்கிய வெளியீடுகளை வெளியிடுகிறது - வருட வெளியீடு (வருடாந்திர அறிக்கை, பணம் மற்றும் நிதி அறிக்கை, வங்கியல் மற்றும் நிதியின் போக்கு மற்றும் முன்னேற்ற அறிக்கை, மாநில அரசுகளின் நிதிபற்றிய அறிக்கை), மாதவெளியீடு (புள்ளிவிவர பிற்சேர்க்கை) மற்றும் வருடத்திற்கு மும்முறை வெளியிடப்படும ஆய்வுப் பத்திரிகை (பிரத்தியேகமான ரிசர்வ் வங்கி செய்தி இதழ்). இத்துடன், ஆய்வு அறிக்கைகள் பணியாளர் ஆய்வறிக்கைதொடரில் வெளியிடப்படுகிறது. இந்த வெளியீடுகள் பகுப்புத்திறன் மற்றும் உள்ளடக்கம், சந்தையில் பங்கெடுப்போர், பகுப்பய்வாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் சர்வதேச சமுதாயம் ஆகியவர்களுக்கு தகவல் தரும் ஆவணங்களாக நிறுவப்பெற்றுள்ளன.

தனது ஆராய்ச்சி பகுப்பாய்வுகள் மூலம் ரிசர்வ் வங்கியின் கொள்கை வடிவமைப்பிற்கு உதவுவதுடன் சர்வதேச நிதி அமைப்பு நாட்டின் கலந்தாய்வுகள், தரப்படுத்தும் முகமைகளுடனான கருத்துப் பரிமாற்றங்கள், ஆகியவற்றிலும் இணைந்து செயலாற்றுகிறது. மேலும் அரசிற்கு கொள்கை சார்ந்த உதவி, பொருளாதார கருத்தாய்வு (Economic Survey) நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை பேச்சு, பாராளுமன்ற கேள்விகள் ஆகியவை சம்பந்தமான பின்னணி விபரங்களை தருகிறது. ஆய்வை மேம்படுத்துகிறது. மற்றும் கருத்தரங்கு, இணைந்த ஆய்வுகள் அறக்கொடை திட்டங்கள் ஆகியவை மூலம் பொருளாதாரம் குறித்த முக்கிய விஷயங்களில் வெளி வல்லுநர்கள் கருத்தை பெறுகிறது.

17 பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ரிசர்வ் வங்கியில் ஏற்படுத்தப்பட்ட ஆய்வு இருக்கைகள், ஆய்வு மாணவருக்கு உதவும் திட்டங்கள் குறிப்பிட்ட ஆய்வுத்திட்டங்கள், வெளியீடுகள் ஆகியவற்றிற்கு உதவும் சிறப்பு நிதி உதவிகள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

பெரும்பொருளாதாரம், வங்கியில் மற்றும் நிதியியல் ஆகியவற்றில் புகழ்பெற்றவர்கள் உரை ஆற்றும் இரண்டு வருடாந்திர உரை நிகழ்ச்சிகளான் சி.டி. தேஷ்முக் மற்றும் எல்கே.ஜா நினைவு சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்கிறது.

தெற்காசிய கூட்டமைப்பு மத்திய வங்கி கவர்னர்கள் மற்றும் நிதிச் செயலாளர்கள் ஆகியோரின் வலை இணைப்பான தெற்காசிய கூட்டமைப்பு நிதி (SAARC FINANCE) குறித்த பணிகளையும் ஒருங்கிணைக்கிறது. மத்திய அலுவலகத்தில் ஒரு சிறந்த நூலகத்தையும் பராமரிக்கிறது.

புள்ளிவிவரம் மற்றும்  தகவல் மேலாண்மைத்துறை

பணிகள்:

புள்ளிவிவரத்துறை 1959ல் அப்போதிருந்த ஆய்வு மற்றும் புள்ளிவிவரத் துறையிலிருந்து உருவாக்கப்பட்டது.  டிசம்பர் 1981ல் இத்துறை மறு கட்டமைப்பு செய்யப்பட்டது.  அப்போது புள்ளிவிவரப்பகுப்பாய்வு மற்றும் கணனித்துறை என பெயரிடப் பட்டது.  முதன்மை ஆலோசகர் இதன் தலைவராக உள்ளார்.  இதன் மைய அலுவலகம் மும்பையிலும் மண்டல அலுவலகங்கள் புது டெல்லி, சென்னை மற்றும் கோல்கத்தா நகரங்களிலும் உள்ளது.

இத்துறையின் முக்கிய பணிகள் கீழ்கண்டவையாகும்.

  • வங்கித்துறை,  குழுமங்கள் மற்றும் வெளித்துறை பற்றிய தகவல்களைச் சேகரித்தல், பகுத்தல் மற்றும் பரவச் செய்தல்
  •  ரிசர்வ் வங்கிக்கு தேவையான மாதிரி சுற்றாய்வுகளை திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் நடத்துதல்
  • ரிசர்வ் வங்கி தொடர்பான மற்றும் அக்கறையுள்ள பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளல்
  • முக்கிய பெரும் பொருளாதார சுட்டிகாட்டும் அளவுகளை குறித்த முன்னறிபிப்புகளை உருவாக்குதல். குறிப்பிட்ட விஷயங்களில் மற்ற துறைகளுக்கு அவற்றை அளித்தல் புள்ளிவிவர பகுப்பாய்வில் தொழில் நுட்ப உதவிகளை அளித்தல்
  • பொருளாதார மாற்றங்களை அளத்தல் மற்றும் மதிப்பிடல் தொடர்பான ஆராய்ச்சி முறைகளை வளர்த்தல், சிறு குழுக்கள் செயற்குழுக்கள் ஆகியவற்றில் பங்கேற்பதன் மூலம் பொருளாதாரத்தின் பல பகுதிகளுக்கான தரவுத்தளத்தை மேம்படுத்துதல்

இன்றைய முக்கியத்துவம்

  • தகவல் முறையில் ஒரு மத்திய தகவல் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்துதல் மற்றும் அது சம்பந்த செயல்களை ஒருமுகப் படுத்தல்.  இவ்வமைப்பு செய்திகள் மேலாண்மை மற்றும் விநியோக முறையில் ஒரு தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவுசெய்வோர், பகுப்பாய்வாளர், ஆராய்ச்சியாளர் ஆகியோருக்கு தவறில்லா முரண்பாடில்லாத தற்கால மற்றும் முற்கால தகவல்களைக் கொண்ட மையக களஞ்சியத்திற்கு உடன் நிகழ், நிகழ்நேர தகவல்களைஅளிப்பதன்மூலம் இத்தகைய மாற்றம் ஏற்படும் பரந்த தகவல் பயனீட்டு செயல் வல்லமையை பயனீட்டாளர்களுக்கு இவ்வமைப்பு வழங்கும்.  ரிசர்வ் வங்கியின் முடிவெடுப்பதற்கு உதவும் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக விளங்கும்.
  • வங்கித்துறை பற்றிய  மிகப்பெரிய தகவல் தளத்தை பேணுதல்
  • கிளைகள் அளவிலான கடன், வைப்புநிதி மற்றும் வங்கிகளின் வருடாந்திர கணக்கு பற்றி தகவல்கள் அடிப்படையிலான இரு வருட வெளியீடுகளை கொணர்கிறது. அவையாவன முறையே i) அடிப்படை புள்ளிவிவர அறிக்கை ii) இந்தியாவிலுள்ள வங்கிகள் பற்றிய புள்ளிவிவர அட்டவணை
  • பல வகைப்படுத்தப்பட்ட வங்கி அலுவலகம் பணியாளர்கள் உள்ளிட்ட இந்தியாவிலுள்ள எல்லா வங்கி அலுவலகங்கள் குறித்த அனைத்தையும் உள்ளடக்கிய தகவல் ஏட்டை பராமரிக்கிறது.
  • வங்கித்துறை மூலம் நடந்த வெளித்துறை பரிவர்த்தனைகளின் முதன்மை தகவல் தளத்தை பராமரித்தல், இத்தகவல் தளத்திலிருந்து உருவாக்கப்பட்ட அட்டவணைகள், பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கைத்துறை கொடுக்கும் ஏற்றுமதி இறக்குமதி நிலுவை புள்ளிவிவரங்கள் ஆகியவற்றுக்கு ஆதாரப் பங்களிக்கிறது.  வெளிநாட்டு முதலீடு பற்றிய மாதிரி சுற்றாய்வு மற்றும் வகைப்படுத்தப்படா வருவாய் குறித்த மாதிரி சுற்றாய்வு இவை போன்ற குறிப்பிட்ட காலங்களில் நடக்கும் சுற்றாய்வினை மேற்கொள்கிறது.  வெளித்துறையில் உள்ள தகவல் இடைவெளிகளை நிரப்புவதற்காக் இவைகளை செய்கிறது.
  • கொள்கை மற்றும் ஆய்வு நோக்கத்திற்காக பரவிய முறையில் பயன்படுத்தப்படும் பொருளாதார தனியார் தொழில் துறைகள் பற்றிய உறுதிபடுத்தப் பட்ட தகவல்களை தயார் செய்தல். ரிசர்வ் வங்கியின் செய்தி இதழில் இவைகளை குறித்த காலங்களில் இத்துறை பிரசுரிக்கிறது.
  • ஜனவரி 1998லிருந்து காலாண்டுக்கு ஒருமுறை “தொழில் சார்ந்த எதிர்கால வாய்ப்பு சுற்றாய்வு” மேற்கொள்ளப் படுகிறது எதற்காக வென்றால் உற்பத்தி தொழில் ஈடுபட்டுள்ள தனியார் தொழில் துறையின் செயலாக்கம் குறித்த செய்திகளை சேகரித்தல், மேலும் இத்துறையின் வரும் காலாண்டுகளில் ஏற்படும் முன்னேற்றம் பற்றியும் அறிவதற்காக
  •  பல்வேறு புள்ளிவிவர பொருளாதார அளவீடு மற்றும் செயல்முறை சார்ந்த ஆய்வு நுட்பங்களை பயன்படுத்தும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளுகிறது. முக்கிய மானவைகளில் ஒன்றாக இத்துறை பணவீக்கம் பற்றிய காலாண்டு மறுபார்வையை தயாரித்தல், தேசிய வருமானம், வேளாண் மற்றும் தொழில் உற்பத்தி, பணவியல் மற்றும் வங்கிகளின் மொத்த அளவைகள் ஆகிய முக்கிய மாற்றங்களை முன்னறிந்து கூறுதல் ஆகியன.

கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைத் துறை

பணிகள்:

கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைத் துறை என்ற புதியதுறை மார்ச் 2005லிருந்து ரிசர்வ் வங்கியில் தனது செயலாக்கத்தைத் துவக்கியது. “உடனுக்குடனான மொத்த ஒப்பந்தத் தீர்வு’ (RTGS), மின்னணுத்தீர்வுச் சேவை (ECS), மின்னணு நிதி மாற்றம்(EFT), நிறுவனங்களுக்கிடையேயான அரசுப் பத்திரங்கள் தீர்வுமுறை மற்றும் வங்கிகளுக்கிடையேயான அந்நியச் செலாவணிக்கான தீர்வுமுறை, வணிகவங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து நடத்தும் காசோலை அடிப்படையிலான தீர்வுமுறை இவையனைத்தையும் கட்டுப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுதல் இத்துறையின் பொறுப்பாகும். மைய நிர்வாகக் குழுமத்தின் இணைந்த குழுவாக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள “கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை” என்ற குழுவிற்கு செயலாளர் ரீதியிலான சேவைகளையும் இத்துறை செய்கிறது.

இத்துறையின் பணிகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியதாகஅமைகிறது.

  • கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைகளுக்கான கொள்கைகளை வகுத்தல்
  • கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைகளைக் கட்டுப்படுத்துதல்
  • கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைகளை மேற்பார்வையிடுதல்
  • பன்னாட்டுத்தீர்வுகளுக்காக வங்கி வடித்தமைத்தபடி கொடுப்புத் தீர்வு முறைகளின் அடிப்படை செயல்முறைகளை அமுல்படுத்துதல்
  • கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைகளுக்கான தர அடிப்படைகளை நிர்ணயித்தல்
  • முக்கியத்துவம் வாய்ந்த கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறை குறித்த திட்டங்களை வடிவமைத்து, வளர்த்து, ஒருங்கிணைத்து அமலாக்கம் செய்தல்
  • கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைகளின் பணிகளைக் கண்காணித்தல்

பிராந்திய அலுவலகங்களில் அமைந்துள்ள தேசிய தீர்வு மையங்கள் இத்துறைக்கு உதவுகின்றன.

“கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை குழுமம்” (BPSS)

இக்குழுமம் காலாண்டுக்கு ஒருமுறை கூடி, கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறை குறித்த எல்லா வகைகளையும் கட்டுப்படுத்தி மேற்பார்வையிடும் பணியின் கொள்கைகளை வகுக்கின்றன. நடப்பிலிருக்கும் மற்றும் வரவிருக்கும் கொடுப்பு மற்றும் ஒப்பந்தத் தீர்வு முறைகளின் தரத்தை நிர்ணயித்து அதிகாரம் வழங்குகிறது. தீர்வு முறைகளின் அங்கத்தினர்களுக்கு அடிப்படைத் தேர்வு முறைகள் அமைத்து அதன் பேரில் அவர்களைத் தொடர்ந்திட அனுமதித்தல் அல்லது மறுத்தல் மேலும் நீக்குதல் போன்றவை இக்குழுமத்தின் பணியாகும்.

நடப்பு நிலவரத்தின் முனைப்பு

கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகளுக்கான 2006ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டவடிவமைப்பில் அளிக்கப்பட்ட செயல்முறைத் திட்டத்தின் அம்சங்களைச் செயல்படுத்துவதில் இத்துறை முனைப்புடன் இயங்கி வருகிறது. இதன் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.

மார்ச் 2006ஆம் ஆண்டுக்குள் (அதாவது முதலாண்டின்முடிவுக்குள்)

  • குறைந்த அளவில் செயல்படுத்திடும் வகையில் ஒரு அமைப்பினை, இந்திய வங்கியாளர் சங்கம் மற்றும் முக்கிய வங்கிகளின் கூட்டுறவோடு அமைத்திடுதல்.
  • 2005ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேசியத் தீர்வு முறைகளை எல்லாப் பெருநகரங்களிலும் அமைத்துத் தருதல்
  • மின்னணு நிதிமாற்ற முறைகளுக்கான சட்டத்திட்டங்களை முடிவாக்கித் தருதல்
  • உடனுக்குடனான மொத்தத்தீர்வு முறைகளின் (RTGS) இரண்டாம் கட்டத்தை அமலாக்கம் செய்தல். ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கு முறைகள் (IAS) மூலமாக உடனுக்குடனான மொத்தத்தீர்வு முறைகள் (RTGS) அடிப்படையிலமைந்த செயல்பாட்டால் எல்லா முக்கிய மையங்களிலும் எல்லா வங்கி நடவடிக்கைகளும் தீர்வு செய்யப்பட்ட வழிவகை செய்தல். காகித வடிவ அமைப்பினை அடிப்படையாகக் கொண்ட மற்ற தீர்வு முறைகள் இதனால் முடிவுக்கு வந்துவிடும்.
  • தேசிய அளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் RTGS அமைப்பில் இணைந்த இணையதள இணைப்பின் மூலமாக தங்கள் அங்கத்தினர்களை இணைத்து, அதனால் வங்கி வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளையும் RTGS மூலமாக தீர்க்கலாம்.
  • காசோலையை மின் உருவப் படமாக்கி அனுப்பி “சுருக்கு வழியில் காசோலைத் தீர்வு’ முறையைச் செய்தல் (cheque truncation) மாதிரிச் செயலாக்கமாக, தலைநகரில் அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
  • காந்த மை காசோலைத் தீர்வு முறை (MICR)க்கான குறைந்தபட்ச திறன் அடிப்படிகளை அமைத்துத் தருதல்.
  • மும்பை பத்திரங்கள் பரிமாற்ற மையம் (BSE) மற்றும் தேசிய பத்திரங்கள் பரிமாற்ற மையம் (NSE) இவைகளால் முதலீட்டுச் சந்தை தீவிரமாக இயங்கி வரும் 500 மையங்களில் மின்னணு நிதிச் சேவை முறை அமைத்துத் தருதல். RTGS/SEFT/NEFT மற்றும் நீட்டிக்கப்பட்ட NEFT திட்டங்கள் இணைப்பின மூலமாக மேற்கண்ட திட்டம் வடிவமைக்கப்படும்.
  • தேசிய அளவிலான தீர்வு முறைகள் (RTGS, G. Sec. clearing) அந்நியச் செலாவணித் தீர்வு MICR, ECS, EFT அனைத்திற்கும் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு மையத்தினை ரிசர்வ் வங்கி அமைக்கிறது.
  • ஒவ்வொரு சேவை அளிக்கும் வங்கி/நிறுவனம் தனது தர அடிப்படைகள் மற்றும் கொடுப்பு முறைக்கான சட்டத்திட்டங்கள் இவற்றை வெளிப்படையாக அறிவித்திடல் வேண்டும். எந்த சட்டதிட்டங்களின் கீழ் “கொடுப்பு” அளிக்கப்படும், அவற்றில் குறைபாடுகள் இருப்பின், நிவாரணம் என்ன, அதற்கான கொள்கை இவற்றோடு வாடிக்கையாளர் ஊக்குவிப்பு மையம் அமைப்பது உட்பட அனைத்தையும் யாவரும் அறியும்படி செய்திடல் வேண்டும்.
  • இந்தியாவின் கொடுப்பு முறைக்கான கணக்குப் புத்தகத்தை (Red Book) வடிவமைத்துத் தருதல்
  • கொடுப்பு தீர்வு முறைக்கான மசோதாவின் மூலம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சட்டத்தினை கொடுப்பு தீர்வுமுறைக்கு உருவாக்கி அளித்தல்.

2006-07ம் ஆண்டுக்குள் அமலாக்கம் செய்யப்பட வேண்டியவை

  • புதிய நிறுவன அமைப்பினை உருவாக்குதல், தேசிய தீர்வு முறையை எல்லா காந்த மை காசோலை தீர்வு (MICR) மையங்களுக்கும் விரிவுபடுத்துதல், இந்திய பொது கொடுப்பு முறைக்கான கணக்குப் புத்தகத்தை (Red Book) சர்வதேசத் தீர்வுகளுக்கான வங்கியால் வெளியிடும்படி செய்தல் முதலிய 2005-06ம் ஆண்டில் துவக்கப்பட்ட அனைத்துப் பணிகளும் முடிவடைய வழி செய்தல்.
  • கூடுதலான இனங்கண்டுள்ள 14 மையங்களுக்கு காந்த மை காசோலைத் தீர்வு முறையை விரிவாக்கம் செய்தல்
  • காந்தமை காசோலை அமைப்பு முறையை விரிவாக்கி ஒவ்வொரு காசோலையும் அந்த அமைப்பின் கீழ் வரும்படி செய்தல்
  • புதிய, சிறு அளவிலான கொடுப்பு நிறுவனங்கள் மூலமாக தேசிய அளவிலான மின்னணு நிதிமாற்றச் சேவை (EFT) முறையை அமலாக்கம் செய்தல்.
  • முக்கியத்துவம் வாய்ந்த தீர்வு முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணைந்தபடி அனைத்து தீர்வு முறைகளையும் அமைத்தல்
  • அதிக அளவில் மக்களோடு தொடர்புடைய தபால் அலுவலகங்கள் போன்ற அமைப்புகளோடு இணைப்பு உடன்படிக்கைள் செய்து கொண்டு, கொடுப்பு தீர்வு முறைகள் இன்னும் அதிகமாக மக்களை சென்றடைய வழி செய்தல்.
  • மின்னணு அமைப்பின் மூலமாக, அரசாங்கத்தின் வரவு மற்றும் செலவுகளைத் தீர்வமைத்தல், மின்னணு முறை சார்ந்த செயல்பாடுகளின் மேலாண்மையில் ரிசர்வ் வங்கி துடிப்போடு செயல்படும்.

2007-2008அம் ஆண்டிற்குள் அமலாக்கம் செய்யப்படவேண்டியவை

  • பெரிய தொகையிலமைந்த தேசிய அளவிலான அரசுப் பத்திரத் தீர்வு முறைகள் (G.Sec clearing) மற்றும் “உடனுக்குடனான மொத்தத் தீர்வு முறைகளுக்கான” (RTGS) நகருக்கு அப்பால், பின் தொடர் துணைபுரியும் தகவல்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
  • சிறு அளவிலான கொடுப்பு முறைகளுக்கான புதிய அமைப்பினை நிறுவி, அதன் குடையின் கீழ் அனைத்துவிதமான சிறு அளவு கொடுப்பு முறைகளைக் கொண்டுவரும்படி செயல்புரிதல்.
  • கொடுப்பு முறைகளுக்கான சட்டத்தின் கீழ் பெறும் அதிகாரத்தின்படி வெவ்வேறுவகையான கொடுப்பு முறைகளுக்கான விதிமுறைகளை அமைத்தல்
  • சுருக்குவழி (cheque truncation) காசோலைத் தீர்வு அடிப்படையிலான முறையை மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் செயல்படுத்துதல்.
  • நாட்டிலுள்ள எல்லா பெருவாரியான தீர்வு மையங்கள், மற்றும் தீர்வு நிறுவனங்களை உள்ளடக்கிய தேசியத்தீர்வு முறையை கொண்டுவருதல்.

 செயலாளர் துறை

  1. மத்திய மன்றம், மத்திய மன்றக் குழு, ரிசர்வ் வங்கி அலுவலர் வருங்கால வைப்பு நிதி நிர்வகிப்பாளர்கள், ரிசர்வ் வங்கி அலுவலர் பொறுப்பு நிதி சம்பந்தமான கூட்டங்கள், அது சம்பந்தமான செயல்கள்
  2. மூத்த நிர்வாகிகள் கூட்டங்கள், அது சம்பந்தமான செயல்கள்
  3. துணை ஆளுநர்களது குழுக் கூட்டங்கள், அது சம்பந்தமான செயல்கள்
  4. மேலே சொல்லப்பட்ட கூட்டங்களின் முடிவுகளை, மத்திய அலுவலகத்தின் சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரியப்படுத்தல். மூத்த நிர்வாகிகளின் கூட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கியின் அனைத்துக் கிளைகளுக்கும் அறிவித்தல், அவைகளின் அமலாக்கச் செயல்பாட்டைக் கண்காணித்தல்
  5. ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் பணியில் சேர்தல், பணி ஓய்வு பெறுதல், பொறுப்புகளை ஒப்படைத்தலும் ஏற்றலும் ஆகியவை சம்பந்தமான பணிகள்
  6. ஆளுநர், துணை ஆளுநர்களின் சேவை சம்பந்தமான விதிமுறைகள் சார்பான வேலைகள்
  7. மத்திய மன்றம் (Central Board) / பிராந்திய மன்றம் (Local Board) அமைப்பது சம்பந்தமான பணிகள்
  8. மேல்நிர்வாகத்திற்குத் தேவையான நிர்வாக உதவிகளை (பணியாளர்கள் உதவி உட்பட) அளித்தல்
  9. IDMD, PRD போன்ற துறைகளை நிர்வகித்தல்
  10. கணிணி, கணிணி சம்பந்தமான பொருட்கள், நகலனுப்பி, செல் போன்கள் மற்றும் கணிணி மென் பொருட்களை உயர் நிர்வாகத்திற்கும் உயர் மட்டக் குழுக்களுக்கும் அளித்தல்
  11. அயல் நாடுகளிலிருந்து வரும் முக்கியஸ்தர்கள், பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள், உயர் நிர்வாக அதிகாரிகள், மத்திய மன்றத்தின் இயக்குநர்கள் போன்றவர்களுக்கு தேவையான வசதிகளையும் உதவிகளையும் செய்தல்
  12. கருத்தரங்கம், ஆடிட்டோரியம், உயர் அதிகாரிகளின் உணவுக்கூடம், மிக மிக முக்கியஸ்தர்களின் விருந்தினர் மாளிகை இவைகளை அப்படிப்பட்டவர்கள் வருகைக்காக பதிவு செய்து பராமரித்தல்
 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்