வணிக
ஆவணம்
தொழில்
மற்றும்
ஏற்றுமதிக்
கடன் துறை
(கொள்கைப்
பிரிவு)
1. வணிக
ஆவணம் (வ.ஆ.)
என்பது என்ன?
வணிக ஆவணம்
என்பது
உறுதிச்சீட்டு
வடிவில்
அளிக்கப்படும்
ஈடுபெறாத
பணச்சந்தை
முறை ஆவணம்
ஆகும்.
2. வணிக
ஆவணம் எப்போது
அறிமுகப்படுத்தப்பட்டது?
1990 ஆம் ஆண்டு
இது
அறிமுகப்படுத்தப்பட்டது.
3. ஏன் இது
அறிமுகப்படுத்தப்பட்டது?
பெருமளவில்
கடனுதவி
பெறும் கூட்டு
நிறுவன
வணிகர்களுக்குக்
குறுகிய காலக்
கடன்பெறும்
வாய்ப்புகளைப்
பல்வகைப்படுத்தல்,
முதலீட்டாளர்களுக்கு
ஒரு கூடுதல்
செயற்கருவியை
அளித்தல்
ஆகிய
நோக்கங்களுக்காக
1990 ஆம் ஆண்டு இது
அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி
முதன்மை
வணிகர்கள்
மற்றம்
அவர்களைச்
சார்ந்த
வணிகர்கள்
வணிகச்
செயல்பாட்டுக்கு
ஏதுவாக
குறுகிய
காலக்கடன்
தேவைகளைச்
சரிக்கட்டும்
பொருட்டு
வணிக ஆவணம்
வழங்கிடும்
அனுமதி
அவர்களுக்குக்
கொடுக்கப்பட்டது.
4. வணிக
ஆவணத்தை யார்
வழங்கலாம்?
ஒன்றிணைந்த
நிறுவனங்கள்
முதன்மை
வணிகர்கள்
மற்றும் அகில
இந்திய
நிதியுதவி
நிறுவனங்கள்
வணிக ஆவணம் (வ.ஆ.)
வழங்கலாம்.
5. எல்லா
ஒன்றிணைந்த
நிறுவனங்களும்
வணிக ஆவணத்தை
தானியங்கு
முறையில்
வழங்கத்
தகுதிபடைத்தனவா?
இல்லை.
கீழ்க்கண்ட
நிபந்தனைகளுக்கு
உட்பட்டே
வணிக ஆவணம்
வழங்க
முடியும்.
a.
கடைசியாகத்
தணிக்கை
செய்யப்பட்டு
வெளியான,
குழுமத்தின்
ஐந்தொகை
ஏட்டில்
குழுமத்தின்
திட்பமான
நிகர மதிப்பு
நான்கு
கோடிக்குக்
குறையாமல்
இருக்க
வேண்டும்.
b. வங்கிகள்/அகில
இந்திய நிதி
நிறுவனங்கள்
கம்பெனிக்கு
செயல்
மூலதனம்
அளித்திருப்பது.
c.
நிதியுதவி
செய்யும்
வங்கிகள்/நிறுவனங்கள்
குழுமங்களின்
கடன் கணக்கை
தகுநிலைத்
சொத்து என
வகைப்படுத்தியிருக்க
வேண்டும்.
6. வணிக
ஆவணம்
வழங்கிட வீத
அறுதிப்பாடுத்
தேவை (மதிப்பிடல்)
ஏதும் உண்டா?
ஆம்,
இந்தியக்
கடன்வீத
அறுதிப்பாட்டுத்
தகவல் சேவை
வரையறை
நிறுவனம், (CRISIL)
அல்லது
முதலீட்டுத்
தகவல் மற்றும்
கடன்
அறுதிப்பாட்டுச்
சேவை வரையறை
நிறுவனம் (ICRA)
அல்லது கடன்
பகுப்பாய்வு
வரையறை
நிறுவனம் (CARE)
அல்லது (FITCH)
இந்திய விட்ச
வீத
அறுதிப்பாட்டு
(மதிப்பிடல்)
தனியார்
வரையறை
நிறுவனம்
அல்லது
இந்திய
ரிசர்வ் வங்கி
இந்த
நோக்கத்திற்காக
அவ்வப்போது
குறிப்பிட்டு
அறிவிக்கும்
இது போன்ற
இன்னபிற
மதிப்பிடல்
முகமைகள் (CRA)
மதிப்பிடல்
தொடர்பான
தகவல்
அளிக்கப்
பரிந்துரைக்கப்பட்டவை.
இவ்வமைப்புகளிடமிருந்து
தகுதியுடைய
பங்கேற்பாளர்கள்
வணிக ஆவணங்களை
வழங்கிடத்
தேவையான
கடன்வீத
அறுதிப்பாட்டுத்
தகவலைப்
பெறலாம்.
குறைந்தபட்ச
கடன்
மதிப்பிடலை ப.2
என CRISIL
குறிப்பிடுகிறது.
அதற்கு
இணையான பிற
முகமைகளின்
மதிப்பிடலை
ஏற்கலாம்.
வழங்குவோர்
வணிக ஆவணம்
வழங்கப்படும்
நேரத்தில்
பெறப்பட்ட
மதிப்பிடல்
அன்றைய
நிலவரப்படி
அமைந்துள்ளது,
மறு
ஆய்வுக்குரிய
வகையில் அதில்
மாற்றம்
ஏதுமில்லை
என்பதையும்,
வணிக
ஆவணத்தின்
முதிர்வு நாள்
வழங்கியோர்
அறிவித்த கடன்
அறுதிப்பாட்டின்
நிலை (மதிப்பிடல்)
மாறுவதற்கு
முன்கூட்டியே
அடங்கும்
என்பதையும்
உறுதிப்படுத்த
வேண்டும்.
7. வணிக
ஆவணத்திற்கு
வரையறுக்கப்பட்ட
குறைந்தபட்ச
மற்றம்
அதிகபட்ச
முதிர்வுக்காலம்
என்ன?
வணிக ஆவணம்
வழங்கப்படும்
தினத்திலிருந்து
முதிர்வடைய
குறைந்த அளவு
15 தினங்கள்
அதிக அளவு ஓர்
ஆண்டாகும்.
8.
எவ்வ்ளவு
தொகைக்கு
உட்பட்டு ஒரு
வணிக ஆவணம் வழங்கலாம்?
வழங்குவோர்
அளிக்கும்
வணிக
ஆவணத்தின்
ஒட்டு மொத்தத்
தொகையின்
மதிப்பு
அக்குழுமத்தின்
இயக்குநர்
வாரியத்தால்
அனுமதிக்கப்பட்ட
தொகைக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்
அல்லது
கடன்வீத
அறுதிப்பாட்டு
(மதிப்பிடல்)
வணிக அமைப்பு
குறிப்பிடும்
இவ்விரண்டில்
எது குறைவோ
அத்தொகைக்கு
வணிக ஆவணம்
வழங்கலாம்.
நிதிஉதவி
நிறுவனங்களைப்
பொறத்தவரை, அவை
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
குடைமுறையின்
மொத்த
வரம்பிற்குள்
வணிக ஆவணம்
வழங்கலாம்,
கால
எல்லைக்குட்பட்ட
வைப்பு
நிதிமுறை, சில
எல்லைக்குட்பட்ட
கடன் வழங்கல்,
வைப்பு நிதிச்
சான்றிதழ்
மற்றம் கூட்டு
நிறுவனங்கிடையேயான
வைப்பு நிதி
போன்ற பல
வங்கித்
தொடர்பான
பத்திரங்கள்
வழங்குவது
போன்றே வணிக
ஆவணம்
வழங்கலாம்
குழுமங்கள்
கடைசியாக
வெளியிட்ட
தணிக்கை
செய்யப்பட்ட
ஐந்தொகை
ஆவணத்தில்
காணப்படும்
அவற்றின்
சொந்த நிகர
நிதியைவிட 100
சதவீதத்திற்கு
மிகாது தொகை
இருக்க
வேண்டும்.
9. வணிக
ஆவணம் வழங்கலில்
தொகையின்
தன்மை யாது?
வணிக ஆவணம்
ஐந்து இலட்சம்
அல்லது அதன்
பெருக்குத்
தொகை
அடிப்படையில்
வழங்கப்பட
வேண்டும்.
10.
எவ்வளவு
காலத்திற்கு
வணிக ஆவணம்
வழங்கல்
நீடிக்கலாம்?
வணிக ஆவணம்
வழங்கல்
அறிவிக்கப்பட்ட
நாளிலிருந்து
முன்
மொழியப்பட்ட
மொத்த வணிக
ஆவணத்
தொகையும் பொது
நிதி திரட்டல்
மூலமாக இரண்டு
வார
காலத்திற்முன்
முடிக்கப்படவேண்டும்.
11. வணிக
ஆவணம் வழங்கும்
நிறுவனம்
வெவ்வேறு
நாட்களில்
வணிக ஆவணத்தை
வழங்க
இடமுண்டா?
ஆம். வணிக
ஆவணத்தை ஒரே
நாளிலோ அல்லது
வெவ்வேறு
நாட்களில்
பகுதி
பகுதியாகவோ
வழங்கப்படலாம்,
இரண்டாம்
வகையில்
ஒவ்வொரு
ஆவணமும் ஒரே
முதிர்வடையும்
நாளைக்
கொண்டிருக்க
வேண்டும்
மேலும்
ஒவ்வொரு வணிக
ஆவணம்
வழங்கலும்,
அதனைப்
புதுப்பித்தலும்
புதிய
வெளியாடாகக்
கருதப்பட
வேண்டும்.
12.
வழங்குபவராகவும்
பணம் தரும்
முகவராலும்
யார்
செயல்படலாம்?
பட்டியல்
படியான
வங்கியே வணிக
ஆவணம் வழங்கி
பணம்
அளிக்கும்
செயலைச்
செய்ய இயலும்.
13. வணிக
ஆவணத்தில்
யார் முதலீடு
செய்யலாம்?
தனி
நபர்கள்,
வங்கிக்
குழுமங்கள்
பதிவு
செய்யப்பட்ட
பிற இந்தி
ஒருங்கிணைந்த
நிறுவனங்கள்,
ஒன்றிணையா
நிறுவனங்கள்,
வெளிநாடு வாழ்
இந்தியர்கள்,
வெளிநாட்டு
முதலீட்டு
நிறுவனங்கள்,
வணிக
ஆவணத்தில்
முதலீடு
செய்யலாம்.
ஆனால் முதலீடு
செய்யும் தனி
முதலீட்டாளர்
ரூ, 5
இலட்சத்திற்குக்
குறையாமல்
முதலீடு
செய்ய
வேண்டும்
எனினும்
முதலீடு
செய்யும்
தனிப்பட்ட
முதலீட்டாளர்கள்
முதலீடு
செய்யும் தொகை
இந்தியப்
பத்திரங்கள்
மற்றும்
பரிமாற்ற
வாரியம் (SEBI)
குறிப்பிடும்
நிபந்தனைகளைப்
பொறுத்தே.
14. வணிக
ஆவணத்தை
தாளில்
இல்லாமல் வேறு
வகையில்
வழங்கலாமா?
ஆம். வணிக
ஆவணங்கள்
உறுதிச்சீட்டு
(பட்டியல் I)
வடிவிலோ (இந்தியப்
பாதுகாப்பு
மற்றும்
பரிமாற்ற
வாரியத்திடம்
(SEBI) பதிவு செய்து
கொண்ட முதலீடு
பெறும்
நிறுவனங்களிடம்
பருப்பொருளற்ற
நிலையில்
வணிக ஆவணத்தை
வழங்கலாம்/வைத்திருக்கலாம்.
வங்கிகள்,
நிதியுதவி
நிறுவனங்கள்
பொதுவான
அல்லது
சிறப்பான
முதலீடுகளை
அனுமதிக்கும்
நிறுவனங்கள்
யாவும் இதே
வழிமுறையைத்தான்
கடைப்பிடிக்க
வேண்டும்.
15.
எப்போதுமே
வணிக ஆவணம்
வழங்க கழிவு
தர வேண்டுமா?
ஆம். வணிக
ஆவணம் வழங்க
அதன்
முகமதிப்புக்கு
ஏற்ப
வழங்குபவர்
வரையறுக்கும்
கழிவினைக்
கொடுத்தாக
வேண்டும்.
16. வணிக
ஆவணம் வழங்கியவரே
விலை கொடுத்து
அதனை வாங்கிக்
கொள்ள
முடியுமா?
முடியாது
அவ்வாறு வணிக
ஆவணத்தை
வாங்கிக்
கொள்வதோ
இணையாக
ஏற்றுக்
கொள்வதோ
இயலாது.
17. இதனை
மீளப்பெறுவதற்கு
வழி என்ன?
தொடக்கத்தில்
வணிக
ஆவணத்தில்
முதலீடு
செய்பவர்
அதற்கு உரிய
கழிவு
சேர்க்கப்பட்ட
மதிப்புக்கான
தொகையை
குறுக்குக்
கோடிட்ட,
கணக்குடையோருக்கு
மட்டும்
வழங்குவதற்கான
காசோலையை,
வழங்கியோரின்
கணக்கில்,
வாங்குவோர்
பணம் பெறுவோர்
முகமை (IPA) மூலம்
சேர்ப்பிக்க
வேண்டும்.
வணிக ஆவணம்
முதிர்வடையும்
நாளில்
அ) வணிக
ஆவணம் தாள்
வடிவில்
இருந்தால்
அதனை
வைத்திருப்ப்வர்
வாங்குவோர்
பணம்
பெறுவோர்
முகமை (IPA) மூலம்
பணம்
பெறுவதற்காகஅதனை
ஒப்படைக்க
வேண்டும்.
ஆ) வணிக
ஆவணம்
மின்னியக்க
வடிவில்
இருந்தால்
அதனை
வைத்திருப்பவர்
வழங்குபரும்
பணம் தரும்
முகவராகவும்
செயல்படுபவர்
மூலமாகமுதலீடு
மற்றும் பணம்
பெறும்
வழிமுறைப்படி
சேர வேண்டிய
பணத்தைப்
பெறலாம்.
18. வணிக
ஆவணத்தை
வழங்குவதில்
வங்கிகளும்
முதலீட்டு
நிறுவனங்களும்
மாற்று
வசதிகளை
வழங்க
வேண்டுமா?
வணிக ஆவணம்
ஒரு
தனித்தியங்கும்
பொருள்
என்பதால்
வங்கிகளோ,
நிதியுதவி
செய்யும்
நிறுவனங்களோ
ஆவணம் வழங்க
மாற்று
வசதிகள்
வழங்க
வேண்டிய
கட்டாயம்
இல்லை. எனினும்
வங்கிகளும்,
நிதியுதவி
நிறுவனங்களும்
வணிகமுறை
முடிவுகளால்
அறிவிக்கப்பட்ட
நிபந்தனைகளின்
அடிப்படையில்
நெகிழ்வுத்தன்மை
கொண்ட கடனைக்
கூடுதலாக்கும்
மாற்று
வசதிகளையோ,
கடன் பின்
நிறுத்து
வசதிகளையோ
அளிக்கலாம்.
இத்தகைய
சலுகையும்
குழும
வாரியத்தின்
குறிப்பிட்ட
அனுமதியின்
அடிப்படையில்
ஏற்புடைய
விவேகமான
செயல்முறைக்கு
ஏற்றதே
19. வங்கி
அல்லாத
அமைப்புகள்
ஒன்றிணைந்த
நிறுவனங்கள்
ஆகிய வணிக
ஆவணம் வழங்கலில்
கடன் வசதியைக்
கூடுதலாக்கும்
பொருட்டு
பொறுப்புறுதி
அளிக்க
முடியுமா?
முடியும்.
அத்தகைய
நிறுவனங்கள்
நிபந்தனையற்ற
மாற்ற இயலாத
உறுதி மொழியை
வணிக ஆவணம்
வழங்கலில் (கடன்
வசதியைக்
கூடுதலாக்குதலில்)
கொடுக்க
முடியும்.
கீழ்க்கண்ட
முறைகளில்
a.
வழங்குபவர்
வணிக ஆவணம்
வழங்குவதற்கான
குறிப்பிட்ட
தகுதிசார்
விதிகளை
நிறைவேற்ற
வேண்டும்.
b.
பொறுப்புறுதியாளர்
வழங்குபவரைக்
காட்டிலும்
குறைந்த
பட்சம்
ஒருபடி
உயர்ந்த கடன்
பெறும்
தகுதியில்
குறைந்த
பட்சம்
ஒருபடி
உயர்ந்தவர்
என
அங்கீகரிக்கப்பட்ட
கடன்
மதிப்பிடல்
முகமை ஏற்க
வேண்டும்.
c. வணிக
ஆவணம்
வெளியீட்டு
அறிவிப்பு
கீழ்க்கண்ட
அம்சங்களை
முறையாக
வெளியிட
வேண்டும்.
பொறுப்புறுதியளிக்கும்
குழுமத்தின்
மொத்த
மதிப்பு,
இதைப்போன்றே
இக்குழுமத்தால்
பொறுப்புறுதி
பெற்ற
குழுமங்களின்
பெயர்கள்,
பொறுப்புறுதி
அளித்த
குழுமம்
எவ்வகையாக
உறுதி
மொழிகளைக்
கொடுத்து
என்ற விபரம்,
எந்தச்
சூழ்நிலையில்
அந்த
உறுதிமொழிகள்
பின்பற்றப்பட
மாட்டா என்ற
விபரம்.
20.
வழங்குபவர்/
பணம்
பெறுவோர்
முகமை/கடன்
மதிப்பிடல்
முகமை
ஆகியோரின்
பங்களிப்பும்
பொறுப்புகளும்
வழங்குபவர்
a)
வழங்குபவர்
ஒவ்வொருவரும்
வணிக ஆவணத்தை
வழங்குவதற்காக
வாங்குவோர்
பணம் பெறுவோர்
முகமையை (IPA)
நியமிக்க
வேண்டும்.
b) அன்றைய
தரமான சந்தை
நிலவரப்படி
வழங்குபவரது
நிதிநிலையைத்
தகுதிவாய்ந்த
முதலீட்டாளர்களுக்கு
வழங்குபவர்
அறிவிக்க
வேண்டும்.
c)
வழங்குபவருக்கும்
முதலீடு
செய்பவருக்கும்
இடையேயான
பரிமாற்ற
ஒப்பந்தம்
உறுதிப்படுத்தப்பட்ட
பிறகு
வழங்கும்
குழுமம்
முதலீட்டாளருக்குத்
தாள்வடிவில்
சான்றிதழை
வழங்க
வேண்டும்.
அத்துடன்
முதலீட்டாளருடைய
கணக்கில்
வணிக ஆவணத்தை
வரவு வைத்து
முதலுட்டைப்
பெற்றுக்
கொண்டவர்
அதற்குரிய
தனது கணக்கில்
பற்றெழுத
வேண்டும்.
d)
வழங்குபவர்
பணம் பெறுவோர்
முகமை(IPA) யிடம்
செல்லத்தக்க
ஒப்பந்தம்
ஒன்றினைச்
செய்துள்ளார்.
அது தொடர்பான
ஆவணங்கள்
யாவும்
முறைப்படி
உள்ளன எனும்
வாங்குவோர்
பணம் பெறுவோர்
முகமை
சான்றிதழ்
நகல் ஒன்றினை
முதலீட்டாளருக்கு
அளிக்க
வேண்டும். (பட்டியல்
III)
வழங்குபவரும்
பணம்
தருபவருமான
முகவர் (வ.ப.மு)
(IPA)
i. இந்திய
ரிசர்வ் வங்கி
வலியுறுத்தும்
குறைந்த பட்ச
கடன்
மதிப்பிடல்
தகுதியை
வழங்குபவர்
பெற்றுள்ளார்
என்பதனை வ.ப.மு.
உறுதிப்
படுத்த
வேண்டும்.
அத்துடன் கடன்
மதிப்பிடல்
முகமை
நோக்கில் கடன்
மதிப்புக்கு
ஏற்புடைய
மொத்தத்
தொகைக்கு
உட்பட்டே வ.ஆ.
மூலமாக
திரட்டப்பட்ட
நிதி அமைய
வேண்டும்.
ii. வ.ப.மு.(IPA)
வழங்குபவர்
ஒப்புவித்த
ஆவணங்கள்
யாவற்றையும்
சரிபார்க்க
வேண்டும்.
வாரியத்
தீர்மான நகல்,
அங்கீகரிப்பட்ட
செயல்படுத்துவோரின்
கையெழுத்துக்கள்
(வ.ஆ. தாள்
வடிவில்
இருந்தால்)
அதன்
அடிப்படையில்
ஆவணங்கள்
முறையாக
உள்ளன
என்பதைச்
சான்றளிக்க
வேண்டும்.
அத்துடன் வ.ப.மு.
(IPA)
வழங்குபவருக்கும்
தனக்கும்
செல்லத்தக்க
ஓர் ஒப்பந்தம்
உண்டு
என்பதையும்
சான்றளிக்க
வேண்டும் (பட்டியல்
III)
iii. மூல
ஆவணங்களின்
சான்றளிக்கப்பட்ட
நகல்கள் (வ.ப.மு.வால்)
சரிபார்க்கப்பட்டு
அதனுடைய
பொறுப்பில்
வைக்கப்பட
வேண்டும்.
கடன்
மதிப்பிடல்
முகமை (க.ம.மு.) (CRA)
1. இந்திய
பத்திரம்
மற்றும்
பரிமாற்ற
வாரியத்தில் (SEBI)
வரையறுக்கப்பட்ட
நடத்தை
விதிகளின்படி
கடன்
மதிப்பிடல்
முகமை
முதலீட்டுக்
சந்தை முறை
ஆவணத்தின்
மதிப்பிடல்
வேண்டும்.
வணிக ஆவணம்
தொடர்பான
மதிப்பிடலுக்கு
அதே வழிமுறை
பின்பற்றப்படுகிறது.
2.
வழங்குபவரின்
செயலாற்றல்
பற்றி
அறிந்ததைக்
கொண்டு கடன்
மதிப்பிடல்
முகமை கடன்
மதிப்பீட்டுக்
காலத்தின்
தகுதியை
முடிவு
செய்யும் தனி
அதிகாரத்தைப்
பெற்றுள்ளது.
அதற்கேற்ப
கடன்
மதிப்பிடல்
முகமை
மதிப்பீடு
செய்யும்போதே
அந்த
மதிப்பீடு
எப்போது
மறுமதிப்பீடு
செய்யப்படும்
என்பதையும்
தெளிளவாக்க
குறிப்பிடுகிறது.
3. கடன்
மதிப்பிடல்
முகமை (CRA) கடன்
மதிப்பிடலின்
கால அளவைத்
தீர்மானிக்கும்
போது மிக
உன்னிப்பாக
குறிப்பிட்ட
கால
இடைவெளியில்
வழங்குபவரின்
மதிப்பீட்டையும்
அவர்களது
தொடர்
செயல்பாடுகளையும்
கவனித்து அதன்
அடிப்படையில்
மாறுபட்ட
அம்மதிப்பீட்டின்
நிலையை
வெளியிடுகிறார்கள்.
அத்துடன்
இணைய
தளத்திலும்
அதனை
அறிவிக்கிறார்கள்.
21. இவை
தவிர வணிக
ஆவணம் முறையில்
வேறு ஏதேனும்
நடைமுறைகளோ
அறிக்கை
தொடர்பான
தேவைகளோ
உள்ளனவா?
இந்திய
நிலையான
வருவாய்
பணச்சந்தை
மற்றும்
பெறப்படு
சங்கம் (FIMMDA)
நிலையான பணச்
சந்தையின்
பாதுகாப்பிற்காக
ஒரு தானியங்கி
ஒழுங்க
நிறுவனமாகச்
செயல்பட்டு
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
ஆலோசனைப்படி
தரமிக்க
வழிமுறையையும்
ஆவணங்களையும்
பயன்படுத்தி
வணிக ஆவணம்
சந்தையின்
சுமூகமான
செயல்பாட்டுக்காகவும்
செயல் முறை
நெகிழ்விற்காகவும்
சில
நெறிமுறைகளைப்
பரிந்துரைக்கலாம்.
பட்டியல்
இல் கூறியபடி
தேவையான
விவரங்களை
உள்ளடக்கி
வணிக ஆவணம்.
வழங்கும்
செயல்பாடு
முடிந்த
மூன்ற
நாள்களுக்குள்
வ.ப.மு. ஒவ்வொரு
வணிக
ஆவணத்தையும்
தலைமைப் பொது
மேலாளர்,
தொழில் மற்றம்
ஏற்றுமதிக்
கடன்துறை
இந்திய
ரிசர்வ் வங்கி,
மத்திய
அலுவலம்,
மும்பை
அவர்களுக்கு
அனுப்பி
வைக்க
வேண்டும். |