Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 22/11/2002
முன்னுரிமைப் பிரிவுக் ( Priority Sector) கடன் வழங்கல்

முன்னுரிமைப் பிரிவுக் கடன் வழங்கல்

 

1. முன்னுரிமைப் பிரிவின் கீழ் உள்ள இலக்குகள் எவை?

இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் ஆகியவற்றின் இலக்குகளும் துணை இலக்குகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

உள்நாட்டு வங்கிகள் (பொதுப்பிரிவு வங்கிகளும் தனியார் பிரிவு வங்கிகளும்)

இந்தியாவில் செயல் படும் வெளிநாட்டு வங்கிகள்

மொத்த முன்னுரிமைப் பிரிவு முன் பணங்கள்

மொத்த வங்கிக் கடனில்(மொ.வ.க.) 40 விழுக்காடு

மொ.வ.க.வில்32 விழுக்காடு

மொத்த வேளாண்மை முன்பணங்கள்

மொ.வ.க.வில் 18 விழுக்காடு

இலக்கு இல்லை

சிறுதொழில் முன்பணங்கள்

இலக்கு இல்லை

மொ.வ.க.வில் 10 விழுக்காடு

ஏற்றுமதி முன்பணம்

ஏற்றுமதி முன்பணம் முன்னுரிமைப் பிரிவு கடன்வழங்கலின் பிரிவு அன்று

மொ.வ.க.வில் 12 விழுக்காடு

நலிந்த பிரிவினருக்கு முன்பணம்

மொ.வ.க.வில்10 விழுக்காடு

இலக்கு இல்லை

 

குறிப்பு : மொ.வ.க. என்பது மொத்த வங்கிக் கடனைக் குறிக்கிறது.

2. மொத்த வங்கிக் கடனில் அடங்கியவை எவை?

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, பிரிவு 42 (2)ன்படி பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் உள்ள தொகையை ஒத்திருக்க வேண்டும் இருந்த போதிலும் முன்னுரிமைப் பிரிவுக்கடன் வழங்கலில் இலக்குகளையும் துணை இலக்குகளையும் நோக்கும்போது நிலுவையிலுள்ள திட்டங்களின் வைப்புத் தொகைகள் இதில் சேர்க்கப்படுவதில்லை.

3. முனனுரிமைப் பிரிவில் அடங்கியவை எவை?

1. வேளாண்மை

2. சிறு தொழில்கள் (தொழிற்பேட்டைகள் அமைப்பதையும் உள்ளடக்கியது)

3. சிறிய சாலைப் போக்குவரத்து, நீர்ப்போக்குவரத்து இயக்குபவர்கள் (10 வாகனங்கள் வரை வைத்திருப்பவர்கள்)

4. சிறு வணிகம் (வணிகத்துக்குப் பயன்படும் சாதனத்தின் விலை 20 லட்சங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

5. சில்லரை வணிகம் (சில்லரை வணிகர்களக்கு முன்பணம் 10 லட்சம் வரை)

6. வாழ்க்கைத் தொழில்கள், சுய வேலைவாய்ப்பினர் (கடன் தொகை ரூ. 10 லட்சத்துக்கு மிகாமல். இதில் செயல்பாட்டு மூலதனம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் தகுதிபெற்ற மருத்துவத் தொழில் செய்வோரைப் பொருத்த வரை ஊரகப் பகதிகளில் தொழில் நடத்துவதற்கு கடன் எல்லைகள் முறையே ரூ. 15 லட்சமும் 3 லட்சமும் இந்தக் கடன் எல்லைக்குள் ஒரு மோட்டர் வாகனமும் முன்னுரிமைப் பிரிவுக் கடனில் உள்ளடங்கியது)

7. அட்டவணை சாதியினருக்கும், பழங்குடியினருக்குமான அரசு உதவி பெறும் நிறுவனங்கள்

8. கல்வி (வங்கிகளால் தனிநபருக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள்)

9. வீட்டுவசதி (நேரடி, மறைமுகக் கடன்கள் 5 லட்சம் வரை (நேரடிக் கடன்கள் நகர்ப்புறப் பகுதிகளில் 10 லட்சம் வரை மாநகரப்பகுதிகள்), ஊரகப் பகுதிகள் ஒரளவு நகர்ப்புறம், நகர்ப்புறம் ஆகிய பகுதிகளில் வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கு முறையே 1 லட்சமும் 2 லட்சமும்)

10. நுகர்வுக் கடன் (நலிந்த பிரிவினருக்கு நுகர்வுக்கடன் திட்டத்தின் கீழ்)

11. நேரடியாகவோ அல்லது இடையீட்டாளர் வழியாகவோ வங்கிகளால் வழங்கப்படும் சிறுகடன்கள், சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனகள் (சுஉகு) அரசு சாரா நிறுவனங்கள் (அசாநி)

12. மென்பொருள் தொழிலுக்குக் கடன்கள் (வங்கித் தொழிலிருந்து ரூ. 1 கோடிக்கு மிகாமல் கடன் எல்லை)

13. தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களைக் கொண்ட உணவு மற்றும் உணவு உற்பத்தித் துறைக்கென சிறப்பாக ஒதுக்கப்பட்ட கடன்கள் ரூ.5 கோடி

14. வங்கிகளால் துணிகர மூலதனத்தில் செய்யப்படும் முதலீடு

(துணிகர முதலீட்டு நிதிகள் செபி யில் பதிவு செய்துள்ள வணிக நிறுவனங்கள்)

4. வேளாண்மை நோக்கங்களுக்கான நேரடி நிதியுதவியில் அடங்கியவை எவை?

வேளாண்மை நோக்கங்களுக்காக வங்கிகளால் விவசாயிகளுக்கு நேரடியாகக் கொடுக்கப்படும் முன் பணங்கள் நேரடி விவசாய முன் பணங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் பயிர்க்கடன் என்று அழைக்கப்படும் பயிர் வளர்ப்புக்காக வழங்கப்படும் பருவக்கடன் அடங்கும். கடன் வாங்குவோர் ஒரே வங்கியில் கடன் வாங்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருளுக்குக் கடன் வழங்கும்போது பிணையமாக உற்பத்திப் பொருள்களை ஈடுவைத்தல், ஈடு வைத்த கிடங்கு பற்றுச்சீட்டு உட்பட) ஆகியவற்றின் பேரில் 12 மாதங்களுக்கு மேல் மிகாத காலத்துக்கு ரூ. 5 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது.

வேளாண்மைச் சாதனங்கள், இயந்திரங்கள் வாங்குதல், நீர்ப்பாசன ஆதாரங்களை மேம்படுத்துதல், நிலச்சீர்திருத்தமும் மேம்பாடும், பண்ணை வீடுகள் அது போன்ற பிற அமைப்புகளும் கட்டுமானப்பணிகள், நீர்ப்பாசனவசதிகள் மேம்பாட்டுக்காகவும் வழங்கப்படும் எனில் இடைப்பட்ட காலக்கடன்களும் நீண்ட காலக்கடன்களும் நேரடி நிதியுதவிக்குள் அடங்கும். தோட்டங்கள், மீன்பிடித்தல், கோழிவளர்ப்பு போன்ற செயல்கள் இயற்கை எரிவாயுத் தொழிற் சாலை நிறுவுதல், சிறு விவசாயிகள் வேளாண்மைக்கென நிலம் வாங்குதல், வேளாண்மை மருத்துவப்பகுதி அமைத்தல், வேளாண்மை வணிக நிலையங்கள் அமைத்தல் போன்றவை பிற நேரடி நிதியுதவிகளாகும்.

5. வேளாண்மைக்குரிய மறைமுக நிதியுதவிகளில் அடங்குபவை எவை?

விவசாயிகளுக்கு வங்கிகளால் மறைமுகமாக, அதாவது மற்ற முகமைகள் வழியாக வழங்கப்படும் கடன்கள் மறைமுக நிதியுதவி எனப்படும். வேளாண்மைக்கு வழங்கப்படும் மறைமுக நிதியுதவியுள் அடங்குபவை பின்வருவன:

i) உரங்கள், பூச்சி மருந்துகள், விதைகள் ஆகியனவற்றை வழங்குவதற்கு நிதியுதவி செய்யக் கொடுக்கப்படும் கடன்

ii) கால்நடைத் தீவனம், கோழித்தீவனம் போன்ற துணைச் செயல்களுக்கான நிதியுதவி செய்வதற்கென வழங்கப்படும் ரூ.25 லட்சம் வரையிலான கடன்கள்

iii) விவசாயிகளுக்கு தங்கள் கிணறுகளுக்கு மின் ஆற்றல் அளிப்பதற்காக தாழ் மின் அழுத்த இணைப்பு வழங்கும் பொருட்டு முன்னரே செலவிடப்பட்ட தொகையினைத் திரும்பப் பெறும் வகையில் மின்சார வாரியத்துக்கு வழங்கப்படும் கடன்கள்

iv) சிறப்பு விவசாயத் திட்டத்தின் கீழ் மாநில மின்சார வாரியங்களுக்கு அமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக (SI-SPA) வழங்கப்படும் கடன்கள்

v) நபார்டு வங்கியால் பராமரிக்கப்படும் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் (RIDF) வங்கிகளால் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகைகள்

vi) பகுதி நகர்ப்புறங்களில் நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு மின்னாற்றல் வழங்குவதற்காகவும், அமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் ஊரக மின்னாற்றல் வழங்கும் கழகம் (REC) வழங்கும் பத்திரங்களுக்குச் செலுத்தப்படும் தொகை

vii) வேளாண்மைக்காகவும்/வேளாண்மை தொடர்புடைய செயல்களுக்காகவும் நபார்டு வங்கியால் வழங்கப்படும் பத்திரங்களுக்குச் செலுத்தப்படும் தொகை.

viii) கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு சொட்டுநீர்ப்பாசனம் தெளிப்பு நீர்ப்பாசனம்/விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றுக்காக இவற்றின் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் நிதி

அ) விற்பனையாளரின் விற்பனையகம் ஊரகப் பகுதியிலோ அல்லது ஓரளவு நகர்ப் புறத்திலோ அமைந்திருக்க வேண்டும்.

ஆ) விற்பனையாளர் இதற்கெனவே சிறப்பாக விற்பனையகம் அமைத்திருக்க வேண்டும் அல்லது வேறு பொருள்களையும் விற்பவர் எனில் இந்தப் பொருள்களுக்கென தனி விற்பனைப் பிரிவினைக் கொண்டிருக்க வேண்டும்.

இ) ஒரு விற்பனையாளருக்கு வழங்கப்படும் நிதி 20 இலட்சம் வரை என்பது கடைப்பிடிக்கப்படும்.

ix) விவசாயிகளுக்கு அவர்களுக்குத் தேவையான இடுபொருள்களை வழங்குவதற்கெனத் தேவைப்படும் செயலீட்டு மூலதனத் தேவைகளுக்காக ஆர்த்தியர்களுக்கு(Arthias) (ஊரகப் பகுதிகளிலும், பகுதி நகர்ப்புறங்களிலும் உள்ள தரகு முகவர்கள்) வழங்கப்படும் கடன்கள்

x) வேளாண்மைக்கு வழங்குவதற்கென வங்கித் தொழில் செய்யாத நிதியுதவிக் குழுமங்களுக்குக் (NBFC) கடன்வழங்கல்

6. சிறுதொழில் நிறுவனங்களுக்குரிய (சி.தொ.நி.) வரைவிலக்கணம் என்ன?

உற்பத்தி செய்தல், உபயோகத்துக்கு ஏற்றவையாக்குதல், பொருள்களைப் பதனப்படுத்துதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் இயந்திரங்களின் மதிப்பு (உண்மை விலை) ரூ. 1 கோடியை மிகாமல் இருக்கும் எனில் அவை சிறு தொழில் நிறுவனங்கள் என அழைக்கப்படும். மற்றவற்றுக்கு இடையே இவற்றில் சுரங்கத் தொழில், கல், மண் சுரங்கங்கள் தொழில், இயந்திரங்கள் விற்பனை மற்றும் பழுது பார்த்தல் ஆகியனவும் அடங்கும். துணை அலகுகளைப் பொறுத்தமட்டில் தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடு (உண்மை விலை) ஒரு கோடிக்கு மிகாமல் இருப்பின் சிறுதொழில் நிறுவனம் என வகைப்படுத்தப்படும்.

சில குறிப்பட்ட பொருள்களைப் பொருத்த வரையில் பின்னலாடை தயாரிப்பு மற்றும் கைக்கருவிகளிலும் சிறுதொழில் நிறுவனம் என வகைப்படுத்தப்படுவதற்குரிய முதலீட்டு எல்லை ரூ. 1 கோடி என்பது இந்திய அரசினால் ரூ. 5 கோடி என உயர்த்தப்பட்டுள்ளது.

7. மிகச் சிறு தொழில் முனையம் என்பதன் வரைவிலக்கணம் என்ன?

ஒரு தொழில் நிறுவனம் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் அது எங்கு இருந்தாலும் அதனுடைய தொழிற்சாலை, இயந்திரங்கள் ஆகியற்றின் மதிப்பு ரூ. 25 இலட்சத்துக்கு மிகாமல் இருப்பின் அதற்கு மிகச்சிறு தொழில் முனையம் என்னும் நிலை வழங்கப்படுகிறது.

8. சிறு சேவைகள் மற்றும் தொழில் முனையங்கள் (SSSBE) என்பவை யாவை?

சிறுதொழில் நிறுவனத்தின் பயன்களை அடையும் நிலம் மற்றும் சட்டடங்கள் நீங்கலாக தொழில் சார் சேவை மற்றும் வணிக நிறுவனங்களில் முதலீடு, நிலையான சொத்துகளில் ரூ. 10 லட்சம் வரை இருக்குமெனில் அவை சிறு சேவை மற்றும் தொழில் முனையங்கள் எனப்படும். நிலையான சொத்துகளின் மதிப்பினைக் கணக்கிடுவதற்கு மூல உரிமையாளர் செலுத்திய மூல விலையே (தொடர்ச்சியான உரிமையாளர் என்ன விலை செலுத்தினர் என்பதைக் கருதாமல்) கருதப்படும்.

9. சிறுதொழில் பிரிவில் (SSI) மறைமுக நிதியுதவி என்பதனுள் அடங்குபவை எவை?

சிறுதொழில் பிரிவில் மறைமுக நிதியுதவி என்பதில் அடங்கியுள்ளவற்றில் முக்கியமானவை பின்வருவன:

கை வினைஞர்களுக்கும் குடிசைத் தொழில்களுக்கும் உரிய இடுபொருட்களை வழங்குவதிலும் சந்தைப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள மையப்படுத்தப்படாத பிரிவுக்கு உதவுவதில் தொடர்புள்ள முகமைகளுக்கு நிதியுதவி.

10. வங்கிகளால் செய்யப்படும் எவ்வகை முதலீடுகள் முன்னுரிமைப் பிரிவின் கீழ் கணக்கில் கொள்ளப்படுகின்றன?

சிறப்பாகக் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களால் வெளியிடப்படும் சிறப்புப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகள் முன்னுரிமைப் பிரிவின் ஒரு பகுதியாக ஏற்கப்படுகின்றன. அவை கீழ்க்கண்ட நிபந்தனைகளக்குட்பட்டவை.

i) மாநில நிதி நிறுவனம் (SFC)

மாநில தொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDC)சிறுதொழில் நிறுவனங்களக்காகவென்றே SFC மற்றும் SIDC களால் வெளியிடப்படும் பத்திரங்களில் செலுத்தும் தொகை முன்னுரிமை சிறுதொழில் நிறுவனங்களுக்குரிய மறைமுக நிதியாக ஏற்கத்தக்கது.

ii) ஊரக மின்னிணைப்பு வழங்கும் கழகம் (REC)

நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கு மின்னாற்றல் வழங்குவதற்காகவும் அமைப்பு மேம்பாட்டுக்காகவும் அதனுடைய சிறப்பு விவசாயத்திட்டடத்தின் கீழ் ஊரக மற்றும் ஒரளவு நகர்ப்பகுதிகளில் வெளியிடப்படும் சிறப்புப் பத்திரங்களில் செலுத்தும் தொகை முன்னுரிமைக்கடன் திட்டத்தின் கீழ் வேளாண்மைக்குரிய மறைமுக நிதியுதவியாக ஏற்கப்பட உரியது.

iii) நபார்டு NABARD

நபார்டு வங்கியால் வேளாண்மை/வேளாண்மை தொடர்பான செயல்கள் மற்றும் விவசாயம் சாராத சில நோக்கங்களுக்காக வெளியிடப்படும் பத்திரங்களில் செலுத்தும் தொகை முன்னுரிமைப் பிரிவினால் வேளாண்மைக்கு சிறுதொழில் நிறுவனங்களுக்கு, (இடத்துக்கேற்ற வகையில்) உரிய மறைமுக நிதியுதவியாக ஏற்க உரியவை

iv) இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI)

இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியால் சிறுதொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வதற்காகவே விற்பனைக்கு விடப்படும் பங்குகளில் செலுத்தும் தொகை சிறுதொழில் நிறுவனங்களுக்குரிய முன்னுரிமை நிதியுதவியாக ஏற்பதற்கு உரியது.

v) இந்திய சிறுதொழில்கள் நிறுவனம் லிமிட்டெட் (NSIC)

இந்திய சிறுதொழில்கள நிறுவனத்தினால் சிறுதொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கென்றே இந்திய சிறுதொழில் நிறுவனத்தில் வெளியிடப்படும் பங்குகளில் செலுத்தும் தொகை சிறுதொழில் நிறுவனங்களுக்குரிய முன்னுரிமை நிதியுதவி ஏற்பதற்கு உரியது.

vi) இந்திய வீட்டு வசதி வங்கி (NHB)

தங்குமிட அலகுக்குரிய கடன் அளவு என்பதைப் பற்றிக் கருதாது இந்திய வீட்டு வசதி வங்கியால் வீட்டுவசதிக்கென்றே வழங்கப்படும் பத்திரங்களில் செலுத்தப்படும் தொகை முன்னிரிமைப் பிரிவுக்கடன்களின் கீழ் மறைமுக வீட்டு வசதி நிதியாக ஏற்பதற்கு உரியது.

vii) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (HUDCO)

அ) தங்குமிட அலகுக்குரிய கடன் அளவு என்பதைப் பற்றிக் கருதாது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தினால் வீட்டு வசதிக்கென்றே வழங்கப்படும் பத்திரங்களில் செலுத்தப்படும் தொகை முன்னுரிமைப் பிரிவுக் கடன்களின் கீழ் மறைமுக வீட்டு வசதி நிதியாக ஏற்பதற்கு உரியது.

ஆ) மிகச்சிறு பிரிவில் வரும் கை வினைஞர்கள், கைத்தறி நெசவாளர்கள் போன்றோருக்குக் கடன் வழங்குவதற்காக HUDCOவினால் வழங்கப்படும் சிறப்புப் பத்திரங்களில் செலுத்தப்படும் தொகை மிகச்சிறு பிரிவுக்குரிய மறைமுகக் கடனாகக் கருதப்படும்.

11. முன்னுரிமைப் பிரிவின் கீழ் நலிந்த பிரிவினர் யாவர்?

முன்னுரிமைப் பிரிவின் கீழ் நலிந்த பிரிவினர் பின்வருவோர்:

1) 5 ஏக்கரும் அதற்குக் குறைவாகவும் வைத்துள்ள சிறு விவசாயிகள், ஓரஞ்சார்ந்த விவசாயிகள் நிலமற்ற தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள், வாரப் பங்காளர்கள்.

2) தனி நபர் கடன் தொகை ரூ. 50,000க்கு மிகாமல் உள்ள இடத்திலுள்ள கைவினைஞர்கள், கிராமத் தொழிலாளர்கள், குடிசைத் தொழிலாளர்கள்.

3) ஸ்வர்ண ஜயந்தி கிராம ஸ்வரோஜ்கார் யோஜனா (SGSY) பின் பயனாளிகள்

4) பட்டியல் சாதியினர், பழங்குடியினர்

5) வேறுபட வட்டி விகிதத் திட்டத்தின் (DRI) பயனாளிகள்

6) ஸ்வர்ண ஜயந்தி ஷகாரி ரோஜ்கர் யோஜனா (SJSRY) வின் பயனாளிகள்

7) கழிவறைச் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் விடுதலையும் மறுவாழ்வும் திட்டத்தின் (SLRS) பயனாளிகள்

8) சுய உதவிக் குழுக்கள் (SHG)

12. ஒரு வங்கி முன்னுரிமைப் பிரிவுக் கடன்வழங்கலில் இலக்கினை அடையாத போது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

உள்நாட்டு, பட்டியல் வணிகவங்கிகள் வேளாண்மை முன்னுரிமைப் பிரிவுக் கடன் வழங்கலில்/இலக்கினை அடையாத போது நபார்டு (NABARD) வங்கியால் நிறுவப்பட்டுள்ள ஊரக ஊள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF)யிலிருந்து நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியினைச் செயல்படுத்துதல், வங்கிகளால் செலுத்தப்பட வேண்டிய தொகை, வைப்புத் தொகைக்குரிய வட்டி விகிதங்கள், வைப்புத் தொகை காலம் போன்றவை இந்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இந்த நிதி அமைக்கப் படுவதைக்குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும்.

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் முன்னுரிமைப் பிரிவுக் கடன் வழங்கலில் இலக்கினையோ அல்லது துணை இலக்குகளையோ அடையவில்லையெனில், எவ்வளவு தொகை குறைகிறதோ அந்த அளவு தொகையில் ஆண்டுக்கு 8 சதவீத வட்டி வீதத்துக்கு முதலீடு செய்யப்பட வேண்டும்.

13. கடன் விண்ணப்பங்கள் குறித்த நடவடிக்கைகளுக்குக் கால எல்லை உண்டா?

ரூ.25000க்கு உட்பட்ட கடன் விண்ணப்பங்கள் பதினைந்து நாட்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும். ரூ.25000க்கு மேற்பட்டவை 8 முதல் 9 வாரங்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும்.

14. முன்னுரிமைப் பிரிவின் கீழ்வரும் கடன்களுக்குரிய வட்டி விகிதம் என்ன?

இன்றைய வட்டிக் கொள்கையின்படி ரூ. 2 இலட்சத்துக்கு உட்பட்ட கடன்களுக்குரிய வட்டி விகிதம் அந்த வங்கியின் முதன்மைக் கடன்வழங்கு வட்டி விகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ரூ. 2 இலட்சத்துக்கு மேற்பட்டால் அதற்குரிய வட்டி விகிதத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமை வங்கிகளுக்கு உண்டு.

15. முன்னுரிமைப் பிரிவுக் கடன் வழங்கல் ரிசர்வ் வங்கியால் எவ்வாறு மேற்பார்வை செய்யப்படுகிறது?

வணிக வங்கிகளால் வழங்கப்படும் முன்னுரிமைக்கடன்கள் காலமுறைப்படி அந்த வங்கிகளால் அனுப்பப்படும் புள்ளி விவர அறிக்கைகள் மூலம் மேற்பார்வை செய்யப்படுகிறது. அவர்களின் செயலாற்றல் வழி நடத்திச் செல்லும் (Lead Bank) வங்கித் திட்டத்தின் கீழ் (மாநில, மாவட்ட, வட்டார நிலைகளில்) அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் வழியாக மதிப்பிடப்படுகிறது.

 

 

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்