முக்கிய முதலீட்டு நிறுவனங்கள்
(Core Investment Companies - CIC)
1. ரூ.100 கோடிக்கும் குறைவாக சொத்துமதிப்புள்ள ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் அடிப்படை முதலீட்டு நிறுவனங்கள்(CIC) பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவைகள் விலக்கிற்காக புதிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமா?
ரிசர்வ் வங்கி சட்டம் 1934ன்படி பிரிவு 45 NC DNBS(PD) 220/CGM(US)-2011, 5.1.2011 தேதியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டபடியும், ஏற்கனவே உள்ள CICக்கள் கடந்த காலத்தில் பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மற்றும் ரூ.100 கோடிக்கும் குறைவாக சொத்துமதிப்புள்ள CICக்களும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனவே விலக்கு கோரி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை..
2. தற்போது உள்ள CICக்கள், கடந்த காலத்தில் பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை மற்றும் ரூ.100 கோடிக்கும் குறைவாக சொத்துமதிப்புள்ள CICக்களும், ஏற்கனவே உள்ள விதிகளைக் கடைபிடைத்து ‘அடிப்படை முதலீட்டு நிறுவனம்’ என்று பெயர் பெறும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று தொடர்ந்து சட்டபூர்வ தணிக்கையாளர் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டுமா?
அவசியமில்லை. DNBS(PD)220/CGM(US)-2011, 5.1.2011 தேதியிட்ட அறிவிக்கையின்படி, ஏற்கனவே உள்ள CICக்கள் கடந்த காலத்தில் பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை மற்றும் ரூ.100 கோடிக்கும் குறைவாக சொத்துமதிப்புள்ள CICக்கள், அந்த அறிவிக்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில் தணிக்கையாளர் சான்றிதழை சமர்ப்பிக்க அவசியமில்லை..
3. ஒரு தனிப்பட்ட குழுவின்கீழ் 4 அல்லது 5 அடிப்படை முதலீட்டு நிறுவனங்கள் ரூ.100கோடி முதலீட்டுக்கு மேல் இருந்தால், அதில் எந்த நிறுவனம் வங்கியிடம் CIC என்று பதிவு செய்வது அவசியமாகின்றது?
குழுவின்கீழ் உள்ள CICக்களாக உள்ள அனைத்து நிறுவனங்களும் CICs-ND-SI என்று கருதப்பட்டு வங்கியிடமிருந்து பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
4. ரூ.100 கோடிக்குமேல் மொத்த சொத்து உள்ள CICக்கள் ஒரு தனிகுழுவை கொண்டுள்ளது. ஒரு அமைப்பு பொது நிதியங்களைக் கொண்டும்/எழுப்பியும் உள்ளது. (CIC-ND-SI ஆக தகுதி பெறுதலுக்குத் தேவையான முன்தகுதி) இம்மாதிரி சந்தர்ப்பங்களில், குழுவில் உள்ள ஒவ்வொரு CIC அல்லது மூத்த CIC அல்லது பொது நிதியை திரட்டிய/வைத்திருக்கும் தனிப்பட்ட அமைப்பு ஆகியவை CIC-ND-SI ஆகக் கருதப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.(உம்) HCo என்பது மூலக்குழு. இது A, B, மற்றும் C ஆகிய CICக்களின் மூலதன ஈவுப்பங்கில் 100% வைத்துள்ளது. ஒருவேளை C பொது நிதியங்களை அணுகினால் HCo மற்றும் A,B,C ஆகியவை CIC- ND-SI என்று பதிவு பெறவேண்டுமா? அல்லது C மட்டும் பதிவு பெறவேண்டுமா?
இம்மாதிரி சந்தர்ப்பங்களில் C மட்டும் பதிவு செய்யப்படும். எனினும் Cக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்ற CICக்கள் நிதிஉதவி செய்திருக்கக் கூடாது.
5. ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனத்தின்(Subsidiary) அடுத்தக்கட்ட துணைநிறுவன (Step down subsidiary)த்தில் முதலீடு செய்வது, அந்நிறுவனத்தின் நிகர சொத்துக்களில் 90%ற்குக் குறைவு என்று கணக்கு எடுக்கும்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா?
CICயின் இருப்புநிலை ஏட்டில் குழவைச் சேர்ந்த நிறுவனங்களில் செய்யப்படும் அனைத்து நேரடி முதலீடுகள் என்று காட்டப்பட்டதுபோலவே இந்த நோக்கத்திற்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நிகர சொத்துக்களில் 90% என்பதை கணக்கெடுக்கும்போது துணை நிறுவனங்களால் செய்யப்படும் முதலீடுகள் Step down subsidiaryல் அல்லது வேறு நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளதேவையில்லை.
6. நடப்புக்கடன் பொறுப்புகள், வெளிக்கடன் பொறுப்புக்களில் ஒரு பகுதியாகுமா? DTL, Advance Tax Due மற்றும்provision for IT ஆகியவை எவ்வாறு கருதப்படும்?
திருப்பித்தரவேண்டிய எது ஒன்றும் வெளியாருக்கு உரிய கடன் பொறுப்பு ஆகும்.
7. ஒரு முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்த வைப்புகள் ஏற்காத வங்கிசாரா நிதிநிறுவனம் (NBFC-ND-SI), முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்த வைப்புகள் ஏற்காத அடிப்படை முதலீட்டு நிறுவனமாக (CIC-ND-SI) விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்று மாறும்பொழுதும் ஏற்கனவே உள்ள பதிவுச் சான்றிதழ் தொடருமா அல்லது புதிதாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டுமா?
CIC-ND-SIக்களுக்கென புதிதாக விண்ணப்பம் உள்ளதால் அதற்கென உள்ள தனி விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
8. குழுவிற்கு வெளியே CICக்கள்/ CIC-ND-SIக்கள் வைத்திருக்கும் 10% நிகர சொத்துக்களில் எவை எவை இருக்கலாம்?
ஒரு நிறுவனத்தின் திறமையான செயல்பாட்டிற்கு தேவையான வீடு, நிலம் அல்லது மற்ற அசையாச் சொத்துக்கள் இவற்றில் இருக்கலாம். ஆனால் குழுவில் இல்லாத நிறுவனங்களில் உள்ள பண முதலீடுகள்/கொடுத்த கடன்கள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளமுடியாது. எனினும் குழுவில் இல்லாத, கம்பெனியல்லாத நிறுவன அமைப்புகளில் (அறக்கட்டளைகள்) உள்ள முதலீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.
9. மார்ச் 31ஐத்தவிர டிசம்பர் 31 போல் வேறு ஏதாவது ஒரு தேதியை அடிப்படையாகக் கொண்டு சட்டபூர்வ கணக்குகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா?
இருப்புநிலை அறிக்கை (Balance Sheet)க்கு பிந்தைய தேதியிலும் ஏற்பட்ட நிகழ்வுகளை அத்தகைய கணக்குகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும், CIC-ND-SI உட்பட அனைத்து வங்கிசாரா நிதிநிறுவனங்களும் அந்த வருடத்தின் மார்ச் 31க்குள் தங்களது கணக்குகளை இறுதிசெய்து அதன் அடிப்படையில், ஆண்டு தணிக்கையாளர் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்.
10. குழுநிறுவனத்தில் செய்யப்படும் 90% முதலீடுகளைக் கணக்கிடுவதன் பொருட்டு, CIC-ND-SIக்கு குழுவிலுள்ள நிறுவனம் தவிர்த்து கூட்டாண்மை நிறுவனங்கள்(Partnership), பொறுப்புவரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்கள்(LLPs), அறக்கட்டளைகள், அங்கத்தினர்களைக் கொண்ட சங்கங்கள் போன்ற குழு அமைப்புகளில் செய்யப்படும் முதலீடுகள் எடுத்துக்கொள்ளப்படுமா?
குழுநிறுவனத்தில் செய்யப்படும் 90% முதலீடுகளைக் கணக்கிட, கம்பெனிகள் சட்டம் 1956ன் சட்டப் பிரிவுஎண் 3ன்கீழ் பதிவுசெய்யப்பட்ட கம்பெனிகளில் செய்யப்படும் முதலீடுகள் மட்டுமே குழுவில் செய்யப்படும் முதலீடுகளாகக் கருதப்படும். எனினும் CICக்கள்/CIC-ND-SI கம்பெனிகள் மீதமுள்ள நிகரசொத்துக்களில் 10%ஐ கம்பெனி தவிர இதரவகையான குழுவை சார்ந்த நிறுவன அமைப்புகளில் முதலீடு செய்யலாம்.
11. வங்கிசாரா நிதிநிறுவனங்களின் 2007 விவேக நடைமுறைகளிலிருந்து CIC-ND-SIக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?
இல்லை. வங்கிசாரா நிதிநிறுவனங்களாக வர்த்தகத்தை தொடர்வது மூலதன அளவு மற்றும் குழு நிறுவனங்களில் கடன்/முதலீடுகள் குவிந்திருத்தல் ஆகியவற்றின் பொருட்டு சட்டபூர்வ தணிக்கையாளர் சான்றிதழை சமர்ப்பித்தல் குறித்த சில கோட்பாடுகளில் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
12. FEMA ஒழுங்குமுறை சட்டம் 7ன் (அந்நிய பத்திரங்கள் வெளியீடு மற்றும் மாற்றம்) திருத்தப்பட்ட ஒழுங்குமுறை சட்டம் 2004ன்படி வெளிநாட்டில் முதலீடு செய்ய CIC-ND-SI க்கள் தடையில்லா சான்றிதழை (NOC) பெறவேண்டுமா?
ஆம். அவை ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. வங்கிசாரா நிதிநிறுவன மேற்பார்வை துறை(DNBS) யிடமிருந்து தடையில்லா சான்றிதழை பெறவேண்டும்.
13. பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட CICக்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யும்பொழுது DNBS இடமிருந்து தடையில்லா சான்றிதழை பெறவேண்டுமா?
இல்லை. வெளிநாடுகளில் முதலீடு செய்யும்பொழுது DNBS இடமிருந்து இவை தடையில்லா சான்றிதழை பெறவேண்டிய அவசியமில்லை.
14. CIC நிபந்தனையை பூர்த்தி செய்யக்கூடிய 100 கோடிக்கும் குறைவாக சொத்துக்களைக் கொண்ட, ரிசர்வ் வங்கியில் ‘B’ வகை கம்பெனியாக ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட NBFCக்கள் தானாகவே முன்வந்து பதிவுநீக்கம் பெறலாமா? (புதிய விதிமுறைகளின்படி இத்தகு கம்பெனிகள் ரிசர்வ்வங்கியிடம் நிறுவனங்கள் பதிவுசெய்ய அவசியமில்லாதவை) ஆம் எனில் எதன் அடிப்படையில் இது செய்யப்படலாம்? - சட்டபூர்வ தணிக்கையாளர் சான்றிதழ் அல்லது ஒரு வருடம் அல்லது அதற்கு மேலான தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை அறிக்கை அவசியமா?
ஆம். வங்கியில் பதிவு செய்யப்பட்ட CICக்கள், ஆனால் 5.1.2010 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 220 ன்கீழ் விதிவிலக்கிற்கான தகுதியை பூர்த்தி செய்யும்பட்சத்தில் அவை தாமாக முன்வந்து பதிவு நீக்கம் பெறலாம். தணிக்கையாளர் சான்றிதழ் மற்றும் தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை அறிக்கை இரண்டுமே இதன்பொருட்டு அளிக்கப்பட வேண்டும்.
15. ரூ.100 கோடிக்கும் குறைவாக சொத்து உள்ள CICக்கள் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படுகிறதா?
ரூ.100கோடிக்கும் குறைவாக சொத்து உள்ள CICக்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வங்கியிடமிருந்து அனைத்து வழிகாட்டிகள்/ஒழுங்குமுறைகள்/உத்தரவுகள் ஆகியவைகளிலிருந்து அவைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
16. CICக்கான விளக்கத்தின்படி 90% படுநிலை(exposure)யைக் கணிப்பதற்கு குழு நிறுவனங்களில் உள்ள முதலீடுகள்/கடன்கள் ஆகியவை மட்டுமே தகுதியானவையா? குழுவில் உள்ள கூட்டாண்மை நிறுவனங்களில் செய்யப்படும்முதலீட்டை எந்த விதமாக கருதலாம்?
CICக்கள் அத்தகைய நிறுவனங்களில் நிகர சொத்துக்களில் மீதமுள்ள 10%ஐ இவற்றில் முதலீடு செய்யலாம்.
17. நிறுவனம் பட்டியலிடப்படாத நிறுவனத்திற்கு ஒட்டுமொத்த பேரங்களுக்குரிய விதிகள் பொருந்துமா? ஒட்டுமொத்த பேரம்/விற்பனை விளக்கப்டுவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு பங்குகள்/பங்குமதிப்பு மாற்றப்படவேண்டும்?
இந்திய பங்குபத்திர பரிவர்த்தனை வாரிய (SEBI)த்தால் விளக்கமும் CIC சுற்றறிக்கைகளில் உபயோகிக்கப்படும் வார்த்தையின் விளக்கமும் வேறு. ஒட்டுமொத்த விற்பனை என்பதுதான் CICசுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஒட்டுமொத்த பேரம் அல்ல. சுற்றறிக்கையின் அடிப்படையில், ஒட்டுமொத்த விற்பனை என்பது நீண்ட கால அல்லது மிக முக்கிய விற்பனை, முதலீடு அல்லது முதலீட்டைத் தவிர்க்கும் நோக்கத்துடன் செய்யப்படுவது மற்றும் குறுகியகால வர்த்தகத்திற்கு செய்யப்படுவதுஅல்ல. ஒட்டுமொத்த பேரம் போலன்றி, இந்த நோக்கத்தில் விளக்கப்பட்டபடி, குறைந்தபட்ச எண்ணிக்கை/மதிப்பு என்று ஏதும் இல்லை.
18. CICக்கள்/CIC-ND-SIக்கள் வைப்புகள் பெறலாமா?
இல்லை. CICக்கள்/CIC-ND-SIக்கள் வைப்புகள் பெற முடியாது.
19. ‘பொது நிதி’ என்ற வார்த்தையின்கீழ் எவையெல்லாம் அடங்கும்? இதுவும் ‘பொது வைப்புகள்’ என்பதும் ஒன்றா?
பொது வைப்புகளும் பொதுநிதியும் ஒன்றல்ல. பொது நிதியங்களில் பொதுவைப்புகள், கம்பெனிகளுக்கு இடையிலான வைப்புகள், வங்கி நிதி மற்றும் வெளி வழிகளிலிருந்து வரக்கூடிய நேரடி மற்றும் மறைமுக நிதிகள் அதாவது வர்த்தக ஆவணங்கள், பத்திரங்கள் போன்றவை அடங்கும். எனினும் பொது நிதி என்பது பொது வைப்புகளை உள்ளடக்கியதாக பொதுவாக சொல்லப்பட்டாலும் CICக்கள்/ CIC-ND-SI க்கள் வைப்புகளை பொதுமக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ள முடியாது.
20. குழுநிறுவனம் என்றால் என்ன?
ஒரு நிறுவனம் CIC/CIC-ND-SI நிறுவனம் என்று தீர்மானித்திட, 5.1.2011 தேதியிட்ட அறிவிக்கை எண் DNBS(PD) 219/CGM(US)ன் பத்தி 3(1)b விரிவாக அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு, கீழ்க்காணும் உறவு முறைகளில் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உப நிறுவனம் – தாய் நிறுவனம் (AS 21ல் விளக்கப்பட்டபடி) இணைந்த முயற்சி (AS 27ல் விளக்கப்பட்டபடி), கூட்டாளி (AS 23ல் விளக்கப்பட்டபடி), உருவாக்குபவர் – உருவாக்கப்பட்டவர் [SEBI அளித்துள்ள விவரப்படி) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஈவுப்பங்குகளை பெறுவதும், எடுத்துக்கொள்வதும் (ஒழுங்குமுறைகள் 1997ன்படி)] சொந்தமுள்ள நிறுவனம் (AS18ன் விளக்கப்பட்டுள்ளது). பொதுவான விளம்பரப்பெயர் மற்றும் 20% மற்றும் அதற்குமேல் ஈவுப்பங்குகளில் முதலீடு செய்வது ஆகியவை.
21. வங்கிசாரா நிதிநிறுவனங்களுக்கு உள்ளதுபோலவே குழுநிறுவனத்திற்கான விளக்கம் CICக்கள்/CIC-ND-SI க்களுக்கும் பொருந்துமா?
இல்லை. விளக்கம் CICக்கள்/CIC-ND-SIக்களுக்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும் பொதுவானதல்ல. ஒரு நிறுவனத்தை CIC/CIC-ND-SI ஐ என்று வகைப்படுத்திடும் குழுநிறுவனத்திற்கான விளக்கம் மிகவும் விரிவானது. அதனால் ஏற்படும் நன்மை CICக்கள்/CIC-ND-SI க்கு உரித்தானது.
22. ஒரு நிறுவனம் எவ்வாறு CIC/CIC-ND-SIஆக பதிவு செய்யப்படும்?
வங்கியின் இணைய தளத்திலிருந்து CIC/CIC-ND-SIக்கான விண்ணப்பப்படிவங்களை தள இறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து, அந்தக் கம்பெனி எந்த இடத்தில் உள்ளதோ, அந்த இடத்தின் மண்டல அலுவலகத்தில் தேவைப்படும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்.
23. ஒரு CIC/CIC-ND-SI குழுவிற்குள் 90% முதலீடு செய்திருக்கவேண்டும். ஆனால் நடப்பு படுநிலைவிதி(Exposure norms)களில் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் ND-SI 40% மட்டுமே எந்த ஒருகுழுவிலும் கடன் மற்றும் முதலீடு ஆகியவை செய்ய அனுமதிக்கப்படுகிறது. எனவே ஒருவங்கிசாரா நிதிநிறுவனம் NOF, CRAR அல்லது குவிதல் முறைமைகளை மீறாமல் ஒரு CIC ஆகமுடியாது, ஏனெனில் அதன் மொத்த வர்த்தகமும் உப நிறுவனத்தில் இருக்கும். எனினும் அவர்களது அமைப்பில் மூலதனப் பங்குகள் கைக்கொண்டுள்ள விதத்தில் இது தெளிவை உண்டாக்குவதால், ஒரு வங்கிசாரா நிதிநிறுவனம் தானாகவே CIC-ND-SI ஆவதற்கு முன்வரலாம். இவ்விஷயம் எவ்வாறு தீர்வுகாணப்படுகிறது? NBFCs- ND-SIக்கள் மூலதன போதிய தன்மை/படுநிலை முறைமைகள் ஆகியவற்றில் மாற்றம் காணும் கால கட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுமா? (பதிவு செய்யப்படாத CICக்கள்/CIC-ND-SI க்கள் 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுவது போல).
வங்கிசாரா நிதிநிறுவன திட்டத்தின் முழு விவரங்களோடு ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கவேண்டும். அந்தந்த வழக்கின் தன்மையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையில், விதிவிலக்குகள் பற்றி பரிசிலிக்கப்படும்.
24. ஒரு நிறுவனம் தனது குழு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனால் முதன்மை வர்த்தகத்தின் நியமயங்களை (சொத்து- வருவாய் பொருத்தவரை) பூர்த்தி செய்யாத காரணத்தால், ஒரு வங்கிசாரா நிதிநிறுவனமாக முடியவில்லை. இருப்பினும் அந்த நிறுவனம் ஒரு CICஆக பதிவு செய்யமுடியுமா? அல்லது அது முதலில் வங்கிசாரா நிதிநிறுவனமாக பதிவு செய்யவேண்டுமா?
ஒரு CIC அதனுடைய முதலீடுகளில் போதிய ஈவுப்பங்குகள் போன்றவற்றை பெற முடியாததால் குறிப்பிடத்தக்க வருமானம், தகுதி இல்லாமல் இருக்கலாம். ஈவுப்பங்குகளை மீண்டும் முதலீடு செய்திட அவை முடிவெடுக்கலாம். எனவே ஒரு CIC ஆக தகுதிபெற, முதன்மை வர்த்தக நியமத்தை பூர்த்திசெய்ய அவசியம் இல்லை.
25. ஒரு நிறுவனம் CIC ஆக இருந்தபோதிலும் அதற்காக குறிப்பிடப்பட்ட தகுதித் தேவைகளை மிகச்சரியாக பூர்த்தி செய்யாதபட்சத்தில், ஒரு வங்கிசாரா நிதிநிறுவனமாக அது பதிவு செய்துகொள்வது அவசியமா?
சுற்றறிக்கை எண் DNBS(PD)219/CGM(US) 2011, 5.1.2011 தேதியிட்டதில் பத்தி 2ல் குறிப்பிடப்பட்ட CIC ஆவதற்கான நியமத்தைப்பூர்த்தி செய்யாதபட்சத்தில், ஒரு கைகொண்ட நிறுவனம்(Holding Company) ஒரு வங்கிசாரா நிதிநிறுவனமாக பதிவு செய்து கொள்ளலாம். எனினும் அம்மாதிரி நிறுவனங்கள் CIC-ND-SI ஆக பதிவு செய்ய விரும்பினால் அல்லது CICயிலிருந்து விலக்கு பெற விரும்பினால் பின்வருமாறு செயல்படவேண்டும். CICஆக வர்த்தக அங்கீகாரம் பெறும்வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் தான் செய்துமுடிக்கும் செயல்திட்டம் பற்றி ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யமுடியவில்லை என்றால் வங்கிசாரா நிதிநிறுவனத்திற்கான தேவைகள் மற்றும் விவேக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
26. CIC நியமத்தை பூர்த்தி செய்யாத (அனைத்து 4 நிபந்தனைகளும்) ஒரு ஹோல்டிங் கம்பெனி, வங்கிசாரா நிதிநிறுவன தேவைகள் மற்றும் விவேக நடைமுறைகளை (சொத்து-வருமான அடிப்படையைப் பூர்த்தி செய்யாதபோதும்) கடைபிடிக்க வேண்டுமா? உதாரணமாக, ஹோல்டிங் கம்பெனி மற்றொரு குழு நிறுவனத்தில் 60% பங்கை கொண்டிருக்கிறது. எனவே CICஆக இருக்கத் தகுதியில்லை. மேலும் நிதிச் சொத்துக்களிலிருந்து வருமானம், மொத்த வருமானத்தில் 50%க்கும் குறைவாகும். அத்தகைய நிறுவனம் NBFC நியமங்களைக் கடைபிடிக்க வேண்டுமா?
ஆம். RBI சட்டத்தின் பிரிவு 451A ன்படி ஒரு நிறுவனம் NBFI ஆக வர்த்தகத்தைத் தொடங்க அல்லது தொடர பதிவுச்சான்றிதழ்(CoR) பெறவேண்டும். எனவே NBFCஆக ஆவதற்குமுன் பதிவுச்சான்றிதழ் தேவைப்படுகிறது.
27. ஒரு குழு தன் வடிவமைப்பை சீராக்கும்பொருட்டு ஒரு CIC-ND-SI ஐ தன் குழுவில் ஏற்படுத்திட முயற்சிக்கிறது. எனினும் ரிசர்வ் வங்கியிடமிருந்து பதிவுச்சான்றிதழ் (CoR) இன்றி எந்தவொரு நிறுவனமும் NBFI ஆக வர்த்தகத்தைத் தொடர முடியாது. ஆகவே, தொடங்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்ட நிறுவனம் பதிவுச்சான்றிதழுக்காக விண்ணப்பிக்கவேண்டும். மற்ற நிறுவனங்களிடமிருந்து பங்குகளை CIC-ND-SI க்கு மாற்றுவதற்குமுன் இதைச் செய்ய வேண்டும். அதேநேரத்தில் தேவைகளின் அடிப்படையில் நிறுவனத்திற்கு தகுதி இருக்காது. ஏனெனில் நிகர சொத்துக்களில் 90%ஐ நிறுவனங்களில் முதலீட்டில் வைத்திருக்கவில்லை. இம்மாதிரி சூழ்நிலையில் அந்த நிறுவனம் என்ன செய்யவேண்டும்?
ஓராண்டு காலத்திற்குள் தனது செயல் திட்டம் பற்றியும் அதன்மூலம் CIC-ND-SI தகுதி பெறுவது பற்றியும் விளக்கி அந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியிடமிருந்து பதிவுச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு செய்யமுடியாதபட்சத்தில் விதிவிலக்குகள் பொருந்தாது. அந்த நிறுவனம் NBFCக்குரிய மூலதன போதியத் தன்மை மற்றும் படுநிலை கொள்கைகள் ஆகியவற்றைக் கடைபிடிக்கவேண்டும்.
28. ரூ.100 கோடிக்கும் குறைவாக சொத்துள்ள காரணத்தாலும், பொதுமக்களிடமிருந்து நிதி பெறாத காரணத்தாலும் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட CICக்கள் NBFCகளாக வங்கி சாரா நிதிநிறுவனங்களாக பதிவு செய்யப்பட வேண்டுமா?
பொதுமக்களிடமிருந்து நிதி பெறுகின்றனவோ, அல்லவோ ரூ.100 கோடிக்கும் குறைவாக சொத்துள்ள CIC க்கள், ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்துள்ள ஆனால் பொதுமக்களிடமிருந்து நிதி பெறாத நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ன் பிரிவு 45IA ன்கீழ் பதிவிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன (5.10.2011 தேதியிட்ட DNBS.PD.221/CGM(US)2011 அறிக்கையின் கருத்துப்படி ) ஆகவே அவை இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யத்தேவையில்லை. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 45NCன்கீழ் இந்த விலக்கு அளிக்கப்படுவதால் அவை வங்கியை அணுகத் தேவையில்லை.
29. ரூ.100 கோடிக்கும் குறைவாக சொத்துள்ள பொதுமக்களிடமிருந்து நிதி பெறாத NBFC வங்கி சாரா நிதிநிறுவனத்திற்கு மேற்குறிப்பிட்ட சலுகை உண்டா?
இல்லை. மேலே குறிப்பிட்ட சலுகை CICக்களுக்குமட்டும் சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. CICக்களாக வகைப்படுத்த முடியாத NBFCக்கள் அல்லது CICக்குரிய எந்த நெறிகாட்டுதலுக்கும் உட்படுத்த முடியாதவைகள் வங்கியிடம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வப்போது அவற்றிற்காக வெளியிடப்படும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.
30. நிகரசொத்து என்பது நடைமுறையிலுள்ள பயன்பாட்டு சொத்துக்களை உள்ளடக்கியதா?
ஜனவரி 5, 2011 தேதியிட்ட DNBS(PD)219/CGM(US)2011 எண்ணிட்ட சுற்றறிக்கையில் பத்தி 3(1)e), CICக்கு விளக்கம் கொடுக்கும்பொருட்டு நிகரசொத்துக்களை விரிவாக விளக்கிக் கூறுகிறது. அதில் குறிப்பிடப்பட்ட அனைத்து வகை சொத்துக்களும், அவை நடைமுறைப்பயன்பாட்டு வகைசார்ந்த சொத்துக்களோ, இல்லையோ நிகர சொத்துக்களில் அவை அடங்கும்.
31. குழுக்கம்பெனிகள் என்பது LLPக்கள் (வரையறுக்கப்பட்ட பொறுப்புரிமை கூட்டாண்மை நிறுவனங்கள்) மற்றும் Partnership (கூட்டாண்மை வர்த்தக நிறுவனங்கள்) உள்ளடக்கியதா?
LLPக்களும் Partnership நிறுவனங்களும் குழுமங்கள் என்றவகையில் வராதவை. ஆகவே அவை குழுக்கம்பெனிகள் என்ற விளக்கத்தில் அவை சேர்க்கப்படுவதில்லை. மேலும் இவை குறித்த சட்டரீதியான நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் வடிவமைப்பு இளகியதாக உள்ளதால் அவை இந்த குழுக்கம்பெனிகளில் சேர்க்கப்படக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. CICக்கள் இவற்றில் முதலீடு செய்வது கூடுதலாக, நிகர சொத்துக்களில் 10% முதலீடு செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
32. வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் கட்டாயமாக ஈவுப் பங்குகளாக மாற்றப்படும் உபகரணங்கள் “வெளியார் நிதிப்பொறுப்பு” என்பதில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் கம்பெனிகள் சட்டப்படி இத்தகு உபகரணங்கள் 20 ஆண்டுகளுக்குள் பங்குகளாக மாற்றப்படுமானால் அவை “பொது வைப்புகளில்” சேர்க்கப்படுவதில்லை. இந்த வித்தியாசம் குறித்து உங்கள் கருத்து.
நம் வங்கி விதிகளைப் பொறுத்தவரை 10 ஆண்டுகள் என்பது விவேக நடைமுறை கருதி கூறப்பட்டுள்ளது. அது கம்பெனிகள் சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு பொருந்தும் வகையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் கருத்தில் கொள்ளவேண்டியவை பொதுவைப்புகள் பற்றியதல்ல “வெளியார் நிதிப்பொறுப்பு” பற்றியதாகும்.
33. இதர வங்கி சாரா நிதிநிறுவனங்கள் போல CIC-ND-SI நிறுவனங்கள் தானியங்கி விதிமுறை மூலமாக வெளிநாட்டுக் கடனை வாங்கவோ அல்லது பங்குகள் வாங்கிட வங்கிக்கடன் பெறவோ முடியாது அல்லவா?
இவ்வாறு வழிகாட்டுதல்கள் CIC-ND-SI நிறுவனங்கள் வெளிநாட்டுக்கடன்கள் வாங்குவதை வெளிநாட்டு முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. வெளிநாட்டு ஈவுப்பங்குகளில் வங்கிக்கடனைப் பொறுத்தவரை (நிகர சொத்துக்களில் 60%வரை மட்டுமே) முதலீடு செய்யமுடியும் (ஆகவே அது மொத்த சொத்துக்களில் குறைந்த சதவீதமே ஆகும்.) பங்குகளில் முதலீடு செய்யப்படாதபட்சத்தில் அந்த அளிவிற்கு CIC-ND-SIகள் வங்கியிலிருந்து நிதியுதவி பெறலாம்.
34. ஒரு குழுவில் உள்ள சிறிய CIC பொது நிதியைத் தேடாதபட்சத்தில் மொத்த சொத்துக்களின் மதிப்பை மட்டுமே அடிப்படையாக வைத்து அது ஏன் பதிவு செய்திடப் பட வேண்டும்?
முன்பே கூறியபடி ஒரு குழுவிலுள்ள மற்ற CICக்கள் பொது நிதியை ஏற்றுக்கொண்ட போதிலும், அதில் பொதுநிதி பெறாத ஒரு CICக்கு பதிவிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. (உதாரணத்திற்கு) A ஒரு CIC எனக்கொள்வோம். B மற்றும் Cயும் A குழுவிலுள்ள CICக்கள் எனக்கொள்வோம். A குழுமம் பொதுநிதி மற்றும் B மற்றும்C உட்பட எதிலிருந்தும் நிதியுதவி பெறவில்லையெனில், A பதிவு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. A, B மற்றும்C அனைத்துமே எந்தவகையிலும் பொதுநிதி உதவி பெறவில்லையென்றால் அவைகளும் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை.
35. சில விதிமுறைகளை பூர்த்தி செய்யும்பொருட்டு ஒரு குழுவிலுள்ள நிறுவனங்களில் உள்ள அனைத்து CICக்களின் திருத்தப்பட்ட நிகரமதிப்பு (Adjusted Networth) கூட்டி கணக்கில் எடுக்கப்பட வேண்டுமா?
மூலதனத் தேவைகளை கணிப்பதற்காக இது செய்யப்படலாம். இடர்வரவிற்கு ஈடான சொத்துக்களின் மதிப்பைவிட நிகர மதிப்பு குறைவாக் இருக்கக்கூடாது. விதிமுறைகளை பூர்த்தி செய்ய சொத்துக்கள் கூட்டப்பட்டு கணக்கெடுக்கப்பட்டால் நிகரமதிப்பும் கூட்டப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
36. பொதுநிதி என்ற வார்த்தையில் பொருள் காண்பதில் முரண்பாடு உள்ளது அது பொதுமக்களிடமிருந்து பெறும் வைப்புகளை உள்ளடக்கிய ஒன்றானால் ஒரு CIC பொதுநிதி பெற்றதாகக் கருதப்பட்டு, NBFCஆக படுநிலை விதிமுறைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும் இல்லையா?
பொதுநிதி என்பது பொதுமக்களிடமிருந்து பெரும் வைப்புகளை உள்ளடக்கியதான போதிலும் CICக்கள் பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெறமுடியாது என்பது கேள்வி எண் 19ற்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பதிவுச் சான்றிதழ் பெற்றிருந்தபோதிலும் ஒரு NBFC குறிப்பிட்ட அனுமதியின்றி பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெறமுடியாது.
|