Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (48.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 27/02/2004

துயர்நீக்குப் பத்திரங்கள் அடமானத்தின் பேரில் வழங்கப்படும் கடன் தொகைகள்

RBI/2004/82

BPD.PCB. Cir. 36/13.08.00/2003-04 பெப்ரவரி 27, 2004

 

அனைத்துத் தொடக்கநிலை (நகர்ப்புறக்) கூட்டுறவு வங்கிகளின்

நிர்வாக அதிகாரிகளுக்கும்,

 

அன்புடையீர்,

துயர்நீக்குப் பத்திரங்கள் அடமானத்தின் பேரில் வழங்கப்படும் கடன் தொகைகள்

சுற்றறிக்கை எண் UBD..NO. PCB.82/DC./13.08.00/1992-1993, ஜுன் 2, 1993 தேதியிடப்பட்டதில் உள்ள பாரா 2ல் குறித்துள்ள கட்டளைகளின்படி 10% துயர்நீக்குப் பத்திரங்கள் 1993 அடமானத்தின் பேரில் வங்கிகள் கடன் அளிக்கலாம் என்பது அறிவிக்கப்படுகிறது. இது குறித்த விவரத்தைச் சுற்றறிக்கையில் பார்க்கவும்.

2. இந்திய அரசாங்கம் அவ்வப்போது துயர்நீக்குப் பத்திரங்களை அவ்வப்போது வட்டிவிகிதங்களில் முதிர்வுகளில் வெளியிடுவது நீங்கள் அறிந்ததே. இதன் பின்னிணைப்பில் சொல்லியுள்ளபடி குறிப்பிடப்பட்ட 30 முகவர் வங்கிகள் மூலமாக பத்திரங்கள், பத்திர வடிவில் வழங்காமல் பத்திரப்பதிவேட்டில் கணக்குவைக்கப்படுவதன் மூலமாகவும் வெளியிடப்படுகிறது. இவ்வாறு வெளியிடப்படும் பத்திரங்களை அடமானம் வைத்து கடன்வழங்க முடியுமா என்ற ஐயப்பாடுகள் எங்களுக்கு அனுப்பபடுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் வெவ்வேறு வகையான பத்திரங்களின் அடமானத்தின் பேரில் வங்கிகள் கடன் தரலாம் என்பதைத் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். அதே சமயம் அவர்கள் கீழே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை மனதில் கொள்ளவும்.

i. துயர்நீக்குப் பத்திரங்களை அடமானத்திற்காக உள்ளன என்ற ஒரே காரணத்திற்காக அன்றி கடனுக்கான ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம், கடன் வாங்குபவரின் தேவையில் ஒரு நேர்மை, கடன் தொகையின் பயன்பாடு இவற்றைக் குறித்து வங்கிகள் திருப்திப்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.

ii. அவ்வப்போது ரிசர்வ் வங்கி வெளியிடும் வட்டிவிகிதங்கள் குறித்த கட்டளைகளின்படியே கடனுக்கான வட்டிவிகிதம் விதிக்கப்பட வேண்டும்.

iii. குறிக்கப்பட்ட வட்டிவிகிதத்தில் கடனையோ, வட்டியையோ திரும்பப் பெறுவதில் தவறுதல்கள் ஏற்பட்டால் அந்த இழப்பினை ஈடுசெய்யும் வகையில் ஈடுதொகை வைத்துக் கடன் வழங்கப்பட வேண்டும்.

 

3. இவ்வாறான கடன்கள் வழங்கப்படும்போது பெரும்பாலான வங்கிகள் இந்த பத்திரங்கள்/சான்றுகளைத் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வதில்லை என்பது கவனிக்கப்படுகிறது. கடன் வழங்கிய 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகோ, அல்லது பத்திரத்தின் முதிர்வு காலத்திற்குப் பிறகோ, கடன் கொடுத்த வங்கிகள் அந்த விவரத்தை ரிசர்வ் வங்கியின் பொதுக்கடன் அலுவலகத்திற்கோ அல்லது முகவர் வங்கிக்கோ தெரிவிக்கின்றன. சில வங்கிகள் இவ்வாறு அவர்களிடம் அடமானம் வைக்கப்பட்டு பெயர்மாற்றம் செய்யப்படாத பத்திரங்கள் தொலைந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றன. சில போலிப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்த சில தகவல்களும் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப் பட்டன. சமீபகாலத்தில் ஒரு நிகழ்வில் பத்திர உரிமையாளரின் முகவர் என்று கூறிக்கொண்டு ஒருவர் பத்திரத்தின் வண்ணநகல் ஒன்றினை எடுத்து வந்து பத்திர உரிமையாளரின் கையெழுத்தை சரிபார்க்கச் சமர்ப்பித்தார். இத்தகைய நிகழ்வுகள் தெரிந்தோ தெரியாமலோ மோசடிகளுக்கு வழிகாட்டும் ஒரே பத்திரத்தின்பேரில் பல்வேறு வங்கிகள் கடன் கொடுப்பதைத் தடுக்க ஒரு கட்டுப்பாட்டு வழிமுறையை உங்கள் பக்கம் அறிமுகப்படுத்த ஒரு அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.

 

4. துயர்நீக்குப் பத்திரங்கள்/ சான்றிதழ்கள் மீதான கடன்கள் வழங்கப்படும்போது கீழ்க்கண்ட பண்புக்கூறுகளை மனதில் கொண்டு எச்சரிக்கையுணர்வோடு செயல்படும்படி வங்கிகள் அறிவுறுத்தப் படுகின்றன.

 

i. அரசு பத்திரம் மற்றும் பத்திரப்பதிவேட்டுக் கணக்கின்மீது வங்கிகள் கடன் வழங்குகையில் அதற்கான் பற்றூன்றுரிமையைப் பதிவு செய்ய சட்டத்தில் வழிவகையில்லை. கடன் வழங்கும் வங்கி அந்த பத்திரத்தை துணைப்பிணையமாக வைத்துக் கடன் வழங்க விரும்பினால் அந்த பத்திரம் வங்கியின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். பத்திரங்களின் அடமானத்தின்பேரில் கடன்கொடுப்பது என்கிற வரையறைக்குட்பட்ட நோக்கத்திற்காக வங்கிகள் தமது பெயரில் பத்திரங்களை மாற்றிக் கொள்ளமுடியும் என்பது அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ii. துயர்நீக்குப் பத்திரங்களின் பேரில் கடன் ஒரு மூன்றாவது நபருக்குத் தரப்படமாட்டாது.

iii. இந்திய அரசின் அறிவிப்புப்படி சேமிப்புப்பத்திரங்களை அடமானம் வைத்துக் கடன்பெற முடியாது.

நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் தம்மிடம் இத்தகு தவறுகள் நேரிடாத வண்ணம் தேவைப்படும் இடர்காப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5. பெற்றமைக்கான ஒப்புதலை எமது பிராந்திய அலுவலகத்திற்கு அளித்திடுக.

தங்கள் உண்மையுள்ள

 S. கருப்பசாமி

தலைமைப் பொது மேலாளர்(பொறுப்பு)

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்