RBI/2015-16/168
DPSS (CO) RTGS No.492/04.04.002/2015-16
செப்டம்பர் 01, 2015
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
ஆர்.டி.ஜி.எஸ்ஸின் பங்கேற்பாளர்களின்
தலைமை செயல் அதிகாரி
அம்மணி / ஐயா
ஆர்.டி.ஜி.எஸ். கால சாளரத்தில் மாற்றங்கள்
செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கி விடுமுறை என்பதற்கான ஆகஸ்ட் 28, 2015 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் பத்திரிகை வெளியீட்டு எண் 2015-2016/ 528-ன் மேல் கவனம் கோரப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, சனிக்கிழமைகளில் இயங்கும் வங்கிகளுக்கு ஆதரவு சேவைகளை அளிக்கிறது.
2. எனவே, ஆர்.டி.ஜி.எஸ். இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இயக்கப்படமாட்டாது. எனினும் இயங்கும் சனிக்கிழமைகளில் முழு நாளாக இயங்கும். வருங்கால மதிப்பு தேதியிடப்பட்ட மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் நிகழும் பரிவர்த்தனைகள். ஆர்.டி.ஜி.எஸ்ஸின் கீழ் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
3. செப்டம்பர் 1, 2015லிருந்து கீழ்க்கண்டவாறு ஆர்.டி.ஜி.எஸ். கால சாளரம்.
வரிசை
எண் |
கால நிகழ்ச்சி |
சனிக்கிழமைகளையும் உள்ளடக்கிய வழக்கமான நாட்கள், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர |
1. |
அலுவல் திறப்பது |
08.00 மணிகள் |
2. |
தொடக்கநிலை விளிம்பு எல்லை
(வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள்) |
16.30 மணிகள் |
3. |
இறுதிநிலை விளிம்பு எல்லை
(வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள்) |
19.45 மணிகள் |
4. |
IDL ரிவர்ஸ் செய்தல் |
19.45 மணிகள் - 20.00 மணிகள் |
5. |
நாளின் முடிவுகள் |
20.00 மணிகள் |
4. இந்த சுற்றறிக்கை கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் பிரிவு 10 (2)-ன்கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
5. தயவு செய்து இதைப் பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
தங்கள் உண்மையுள்ள
நீலிமா ராம்டெக்
பொதுமேலாளர் |