RBI/2015-16/420 FIDD.GSSD.CO.BC.No.26/09.01.03/2015-16
ஜுன் 09, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் / எல்லாப் பொதுத்துறை வங்கிகள்
அம்மையீர் / ஐயா
தேசீய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (NRLM) – ஆஜீவிகா – வட்டி மானியத் திட்டம்
தேசீய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (NRLM) கீழ் வழிகாட்டும் ஜனவரி 21, 2016 தேதியிட்ட எங்களது சுற்றறிக்கை எண் FIDD. GSSD. CO. BC. No. 19/09.01.03/2015-16-ஜப் பார்க்கவும்.
திட்டத்தில் சிறிதளவு மாற்றத்தை தெரிவிக்கும் வகையில், இந்திய அரசாங்கம் ஊரக வளர்ச்சித் துறையின் கடிதம் மே 23, 2016-ன்படி Para. I. xii (இணைப்பு III to V)-ல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தில் வட்டி மானியம் கோரும் சான்றிதழ்களில் “மனிதக் குறுக்கீடு கிடையாது” என்ற வாசகத்திற்கு பதிலாக” “மிகக் குறைந்த மனிதக் குறுக்கீடு” என்று சிறிய திருத்தத்தை அதன் மூலம் அறிவுறுத்துகிறது.
இங்ஙனம்
(உமா சங்கர்) தலைமைப் பொதுமேலாளர்
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்