RBI/2016-17/40
FIDD.FLC.BC.No.12/12.01.018/2016-17
ஆகஸ்டு 25, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட)]
அம்மையீர் / ஐயா
நிதியியல் கல்வி மையங்கள் – தகவல் அளிக்கும் படிவத்தில் மாற்றம்
நிதியியல் கல்வி மையங்கள் குறித்த ஜனவரி 14, 2016 தேதியிட்ட FIDD.FLC.BC.No.18/12.01.018/2015-16 என்ற சுற்றறிக்கையைப் பார்க்கவும். இதில் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன், நிதியியல் கல்வி மையங்கள் மற்றும் கிராம வங்கிகள் தகவல் அறிவிக்கும் விதம் குறித்த படிவங்கள் (இணைப்பு III, Part A, B and C) இணைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, தகவல் அளிக்கும் படிவத்தைத் (இணைப்பு III, Part A, B and C) திருத்தியமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலுக்காக, மாதிரி தகவல்கள் அதில் பதிவு செய்து காட்டப்பட்டுள்ளன. SLBC / UTLBC இணைக்கப்பட்டுள்ள எக்ஸல் தாளில் பதிவுகள் செய்து காலாண்டு அடிப்படையில் அந்தந்த பிராந்தியத்திலுள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு காலாண்டு முடிந்தபின் 20 நாட்களுக்குள் அனுப்பிட வேண்டும். இந்த செப்டம்பர் 2016 ல் முடியும் காலாண்டில் தொடங்கி, இந்தப் புதிய படிவத்தில் அனுப்பப்படவேண்டும்.
இங்ஙனம்
ஒப்பம்
(A.உத்கடா)
முதன்மைத் தலைமைப் பொதுமேலாளர் |