அறிவிப்பு எண் 130
Ref. No. DCM (Plg) 1273/10.27.00/2016-17
நவம்பர் 14, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
பிராந்திய கிராமப்புற வங்கிகள் / நகரக் கூட்டுறவு வங்கிகள் /
மாநில கூட்டுறவு வங்கிகள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தும் நிலைப்பாடு
மேற்குறிப்பிட்ட பொருள்குறித்த எங்களின் நவம்பர் 8, 2016 தேதியிட்ட DCM (Plg) 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். நவம்பர் 24, 2016 வரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களின் நடப்பு வாடிக்கையாளர்களை தங்கள் கணக்குகளிலிருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 24,000 வரை பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாம் என்று தெளிவுபடுத்தப்படுகிறது. ஆயினும், குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகளை மாற்றவோ, டெபாசிட் செய்யவோ அனுமதிக்கக்கூடாது.
2. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தம் தேவைக்கேற்ப மற்ற வங்கிகளிடமிருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று அனைத்து வங்கிகளும் அறிவுறுத்தப்படுகின்றன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்கள் கணக்குகளை வைத்திருக்கும் வங்கியிடமிருந்து பணத்தை எடுப்பதற்கு ரூ. 24,000 என்கின்ற உச்சவரம்பு பொருந்தாது.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர் |