அறிவிப்பு எண் 149
Ref. No. DCM (Plg) 1346/10.27.00/2016-17
நவம்பர் 22, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
அன்புடையீர்
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகியவை சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது - திருமண
விழாவை நடத்துவதற்கான பணம் எடுக்க உச்சவரம்பு - திருத்தம்
நவம்பர் 21, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DCM. (Plg) No. 1320/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். மேற்கண்ட சுற்றறிக்கையில் பாரா 2 (vi) (c)-யில் உள்ள வழிகாட்டி உத்தரவுகளில் கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“யாருக்கெல்லாம் பணமாக கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோ, அவர்களது விரிவான பட்டியல், அதனோடு அளிக்கப்படவேண்டிய தொகை ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்டு இருக்குமேயானால், பட்டியலில் உள்ள அந்த நபரகளுக்கு வங்கிக் கணக்கு இல்லையென்று ஒரு சுய உறுதிமொழியை அளிக்கவேண்டும். இந்தப் பட்டியலில் எந்த நோக்கங்களுக்காக பணம் அளிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிடவேண்டும்.“
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்
|