Notifi. 2016-17/259
Ref. No. DBR. Leg. BC. 56/09.07.005/2016-17
மார்ச் 29, 2017
அனைத்து முகமை வங்கிகள்
அன்புடையீர்
அனைத்து முகமை வங்கிகளும் அரசு வர்த்தகப் பயன்பாட்டிற்காக
ஏப்ரல் 01, 2017 அன்று திறந்திருக்கும் – திருத்தப்பட்ட அறிவிக்கை
மார்ச் 24, 2017 தேதியிட்ட சுற்றறிக்கை DBR. No. Leg. BC. 55/09.07.005/2016-17-யில் எல்லா முகமை வங்கிகளும், வங்கிக் கிளைகளும் அரசு வர்த்தகங்களுக்காக தற்போதைய நிதியாண்டு எல்லா நாட்களிலும் மற்றும் ஏப்ரல் 01, 2017 அன்றும் திறந்திருக்கும் (சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட) என்று அறிவுறுத்தப்பட்டது.
2. ஏப்ரல் 01, 2017 அன்று வங்கிகளைத் திறந்து வைப்பது என்பது அவற்றின் ஆண்டு முடிவுக் கணக்கை முடிப்பதில், குறிப்பாக சில வங்கிகள் அந்த தேதி முதல் இணைக்கப்பட்டு செயல்படவிருப்பதால், சிக்கல்களை உருவாக்கும் என்று இது தொடர்பாக, தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அரசுடன் ஆலோசனை நடத்தியபின், பின்வருமாறு முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, முகமை வங்கிகள் நடப்பு நிதியாண்டின் எல்லா நாட்களிலும் (சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட) அரசு வர்த்தகத்தினை நடத்தும் கிளைகளை அதன்பொருட்டு முன்பே அறிவுறித்தியதுபோல் திறந்து வைத்திருந்தாலும், ஏப்ரல் 01, 2017 அன்று மட்டும் திறந்து வைத்திருக்கத் தேவையில்லை என்று அறிவுறுத்தப்படுகிறது.
இங்ஙனம்
(ரஜிந்தர் குமார்)
தலைமைப் பொதுமேலாளர் |