அறிவிப்பு எண் 23
Ref. No. FIDD. FLC. BC. 11/12.01.018/2017-18
ஜூலை 13, 2017
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் சிறுநிதி வங்கிகள்)
அன்புடையீர்
நிதியியல் கல்வி மையங்கள் மற்றும் கிராமப்புறக் கிளைகள் மூலம் நிதியியல் கல்வி – நிதி அளிக்கும் வரம்பில் மாற்றங்கள், காணொலிக்காட்சிகளுக்கான கருத்துரைகள் மற்றும் கையடக்கப் பிரொஜெக்டர் கருவிகள் அளித்தல்
நிதியியல் கல்வி மையங்கள் மற்றும் கிராமப்புற வங்கிகளைகளுக்கான வழிகாட்டுதல்களில் உள்ள கொள்கை மாற்றம் குறித்த மார்ச் 2, 2017 தேதியிட்ட எங்களின் FIDD. FLC. BC. 22/12.01.018/20167-17 சுற்றறிக்கையைப் பார்வையிடவும். இதன்படி நிதியியல் கல்வி தொடர்பான முகாம்களை நடத்திட ஆகும் செலவில் 60 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 15,000 வரை ஒரு முகாமிற்கான செலவை நிதியியல் சேர்க்கை நிதியிலிருந்து, நிதியியல் கல்வி மையங்கள் மற்றும் கிராமப்புற வங்கிக்கிளைகள் பெற முடியும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2. மறு ஆய்வின் பேரில், நிதியியல் சேர்க்கை நிதியத்திலிருந்து வங்கிகளுக்கு இவ்வாறு அளிக்கப்படும் நிதியுதவியின் வரம்பு ஒரு முகாமிற்கான செலவில் 60 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக் ரூ. 5,000 வரை என்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிதவி குறித்த விவரங்களை வங்கிகள், நபார்டு வெளியிட்ட மே 4, 2017 தேதியிட்ட 107 / DFIBT-24/2017 சுற்றறிக்கையிலிருந்து பெறலாம்.
3. காணொலிக் காட்சிகளுக்கான கருத்துரைகள் மற்றும் கையடக்க புரொஜெக்டர்கள் அளித்தல்: நிதியியல் கல்வி முகாம்களை திறம்பட நடத்திடும் பொருட்டு நிதியியல் கல்வி மையங்கள் மற்றும் கிராமப்புறக் கிளைகள் கையடக்க புரொஜெக்டர்கள் உதவியுடன் காணொலிக் காட்சிகளாக நிதியியல் விழிப்புணர்வு குறித்த விளக்கங்கள், விளம்பரங்கள், காட்சிகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதென்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. இதற்காக புரொஜெக்டர்கள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் (இரண்டும் சேர்த்து) வாங்கும் செலவில், 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000 வரை ஒரு நிதியியல் கல்விமையம் / கிராமப்புறக் கிளைக்கு வழங்குவதென்று (செலவினங்களைத் திருப்பித்தரும் அடிப்படையில்) தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி குறித்த விவரங்களை நபார்டு வெளியிட்ட மே 4, 2017 தேதியிட்ட 105/DFIBT-22/2017 சுற்றறிக்கையில் காணலாம்.
4. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள நிதியியல் விழிப்புணர்வு செய்திகள் அடங்கிய காணொலிக் காட்சிகளை, நிதித்துறை நெறிமுறையாளர்களின் நிதியுதவியால் இயங்கும் தேசிய நிதியியல் கல்வி மையம் (NCFE) தயாரித்துள்ளது. முதல் காணொலிக் காட்சி KYC குறித்த விவரங்கள் (உ-ம். முகவரிச் சான்றிதழ் etc.) சார்ந்தது. வங்கி வர்த்தக தொடர்பாளர்கள், NEFT / RTGS போன்ற மின்னணு பணப்பரிவர்த்தனை விவரங்கள், போலி மின்னஞ்சல்கள் / தொலைபேசி அழைப்புகளால் ஏமாற்றப்படாமலிருத்தல், பொன்ஸி திட்ட மோசடிகள் போன்றவை அடங்கிய காட்சிகள் இதில் உள்ளன. இரண்டாம் காணொலிக் காட்சி – BHIM மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பணமாற்ற இடைமுகம் பற்றிய விவரங்களைத் தருகிறது. மூன்றாம் காணொலிக் காட்சி – பணமில்லாத மின்னணு எண்மின் (digital) பணப் பரிமாற்றம் குறித்த விவரஙகளைத் தருகிறது. நிதியியல் கல்வி மையங்கள் மற்றும் கிராமப்புறக்கிளைகள் நிதியியல் கல்வி முகாம்களை நடத்தும்போது இந்த காணொலிக் காட்சிகளைப் பயன்படுத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இங்ஙனம்
ஒப்பம்
(உமா சங்கர்)
தலைமைப் பொதுமேலாளர் – பொறுப்பு
|