Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (52.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/03/2007

வணிக நடவடிக்கைகளின் மதிப்பை முழு ரூபாயில் சொல்வதற்காக

RBI/2006-2007/299

 

DBOD.Dir.BC.No.70/13.01.01/2006-07                                                           March 30, 2007

 

 

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்

(வட்டார கிராமிய வங்கிகள் நீங்கலாக)

 

அன்புடையீர்,

வணிக நடவடிக்கைகளின் மதிப்பை முழு ரூபாயில் சொல்வதற்காக

ஜூலை 1, 2006ம் தேதியிட்ட நமது சுற்றறிக்கை எண் DBOD.Dir. BC.No.6/13.03.00/2006-07ன் பாரா 9ஐ தயவுசெய்து பார்வையிடுக.  அதன் கருத்துப்படி வைப்புகளின் மீதான வட்டி மற்றும் கடன், முன்தொகை இவற்றின் மீது விதிக்கும் வட்டித்தொகை ஆகியவை தொடர்பான வங்கி நடவடிக்கைகளின் மதிப்பை வங்கிகள் முழு ரூபாயில் சொல்லலாம்.  அதாவது மதிப்பின் மொத்தத்தில் 50 பைசாவிற்கு மேலுள்ளதை அடுத்த ரூபாயில் ஒன்றைக்கூட்டியும் 50 பைசாவிற்கு கீழுள்ளதை விடுத்தும், மதிப்பினைத் தரலாம்.  ஆயினும் வாடிக்கையாளர் அளிக்கும் பின்னத்தொகையில்(Fractions) ரூபாய் மற்றும் காசுகள் மதிப்பில் தரப்பட்ட காசோலைகளை மறுப்பதோ, தள்ளுபடி செய்வதோ கூடாது.

2. சமீபத்தில் அரசின் கணக்கில் பற்றுவைக்கும்படி, பின்னத்தொகையில் அளிக்கப்பட்ட கேட்புவரைவோலை ஒன்றினை வங்கி ஒன்று வாங்க மறுத்தமைக்காக, ஒரு வழக்கு அஹமதாபாத்திலுள்ள குஜராத் உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  குஜராத் உயர்நீதி மன்றம் சிந்திக்க வேண்டிய நோக்கில் ரிசர்வ் வங்கிக்கு வழிகாட்டியுள்ளது.  பின்னமான மதிப்பில் காசோலைகள் மற்றும் கேட்புவரைவோலைகள்  அளிக்கப்பட்டால் அவற்றை ஏற்க மறுக்குமாறு தமக்குள்ளே சுற்றறிக்கை அனுப்பியுள்ள  வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், அவர்களுக்கு அத்தகு காசோலைகளை ஏற்கும்படியாக உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும், அவ்வாறு ஏற்க மறுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அத்தகு பின்ன மதிப்பில் உள்ள காசோலைகள் மறுக்கப்படாதவாறு நடைமுறையிலுள்ள உத்தரவுகள்படியும், சட்டரீதியாகவும் இவ்விஷயத்தைக் கையாளும்படி ரிசர்வ் வங்கிக்கு குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆகவே வங்கிகள் அத்தகைய காசோலைகள், கேட்புவரைவோலைகளை மறுக்கப்படவில்லை தள்ளப் படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாதவண்ணம் வங்கிகள் தமக்குள் சுற்றறிக்கைகள்  அனுப்பியும், நடைமுறைகளை பரிசீலனை செய்தும், இவ்விஷயத்தில் தமது பணியாளர்கள் அறிவுரைகளை சரியாகக் கற்றுத்தேர்ந்து நடைமுறைப் படுத்துவதை வங்கிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.  அவ்வாறு பின்னத்தொகையில் அமைந்த காசோலைகள், கேட்புவரைவோலைகளை ஏற்க மறுக்கும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும் வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

3. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் கருத்துப்படி மேற்கண்ட உத்தரவுகளை மீறும் வங்கிகள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தயவு செய்து கவனிக்கவும். 

 

 

தங்களின் உண்மையுள்ள

 

 

(பி. விஜயபாஸ்கர்)

தலைமைப் பொது மேலாளர்     

 

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்