RBI/2017-18/160
DGBA.GBD.No.2573/15.02.005/2017-18
ஏப்ரல் 12, 2018
தலைவர் / தலைமை நிர்வாக அதிகாரி
சிறுசேமிப்புத் திட்டத்தைக் கையாளும் ஏஜென்சி வங்கிகள்
அன்புடையீர்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம்
மேற்குறிப்பிட்ட பொருளில், ஜனவரி 11, 2018 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கை DGBA.GBD.No.1781/15.02.005/2017-18-ஐப் பார்க்கவும். இந்திய அரசாங்கம், மார்ச் 28, 2018 தேதியிட்ட அதன் அலுவலகக் குறிப்பாணை எண் (OM) No. F. No. 01/04/2016-NS-ல், 2018-19-ம் நிதியாண்டின் காலாண்டிற்கான விகிதம், 2017-18-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்காக ஏப்ரல் 01, 2018-ல் அறிவிக்கப்பட்டபடி (நகல் இணைக்கப்பட்டுள்ளது) விகிதம் மாறாமல் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2. இந்த சுற்றறிக்கையின் உள்ளடக்கங்கள், அரசு சிறுசேமிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உங்கள் வங்கிக் கிளைகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவேண்டும். இந்தத் திட்டத்தினைப் பற்றி சந்தாதாரர்கள் தகவலறிய உங்கள் வங்கிக் கிளைகளின் அறிவிப்புப் பலகையில் காட்டப்படவேண்டும்.
இங்ஙனம்
(ஹர்ஷ வர்தன்)
மேலாளர்
இணைப்பு – மேலே உள்ளபடி |