8% சேமிப்பு (வரி விதிப்பிற்குரிய) பத்திரங்கள் 2003 – வருமானவரி சட்டம் 1961 – டிடிஎஸ்(TDS)
RBI/2007-08/141 Ref.DGBA.CDD.No.H.3024/13.01.299/2007-0
செப்டம்பர் 19, 2007
பாந்ரா 28, 1929(S)
பொது மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் 17 தேசிய வங்கிகள் ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்/ஐடிபிஐ லிமிடெட் எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட்/ஆக்ஸிஸ் வங்கி லிமிடெட் மற்றும் எஸ்எச்சிஐஎல்
அன்புடையீர்,
DGBA.CDD.No.H-17134/13.01.299/2006-07 மே 31, 2007 தேதியிட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட தலைப்பின்கீழ் வெளியிடப்பட்ட பத்திரங்களுக்கான வட்டியில் தொடக்கத்திலேயே வரி பிடிப்பது தொடர்பான சில விஷயங்களில் இந்திய அரசு கொடுத்துள்ள சில விளக்கங்களை கீழே கொடுத்துள்ளோம்.
வரிசை எண்
விவரம்
கருத்துக்கள்
1.
ஏற்கனவே உள்ள பத்திரம் வைத்திருப்போருக்கு வரி பிடிக்கப்படுமா அல்லது 1.4.07க்கு பிறகு முதலீடு செய்வோருக்கு பிடிக்கப்படுமா?
டிடிஎஸ்(TDS) 8% சேமிப்பு (வரி விதிப்பிற்குரிய) பத்திரங்கள், 2003 1.6.07 லிருந்து அமலில் உள்ளது. 2003 சேமிப்பு(வரி விதிப்பிற்குரிய) 8% சேமிப்பு பத்திரங்களுக்கு ஏதேனும் வட்டி 1.6.2007க்குப் பிறகு வரவு வைக்கப் பட்டாலோ அல்லது அளிக்கப்பட்டாலோ அந்த நிதியாண்டில் ரூ.10000/-க்கு அதிகமாக இருந்தாலோ டிடிஎஸ் உண்டு. எனவே முதலீடு செய்யப்பட்ட தேதி முக்கியமல்ல. எனவே ஏற்கனவே பத்திரம் வைத்திருப்போருக்கும் டிடிஎஸ் உண்டு
2.
1.7.2007 லிருந்து வட்டிக்கான வரி பிடிக்கப்படுமேயானால் (1.1.2007 இருந்து 30.6.2007 வரையிலான கால கட்டத்திற்கு) கூட்டு வட்டியைத் தேர்ந்தெடுத்த வைப்புதாரருக்கு 1.1.2007லிருந்து 30.6.2007 வரை யிலான கால கட்டத்திற்கு படிவம் 16Aவும் சேர்ந்துள்ள வட்டி மற்றும் அதற்கு கழிக்கப்பட்ட வரி விவரங்கள் ஆகியவை வழங்கப்படுமா?
ஆமாம், எங்கெல்லாம் வட்டிக்கு டிடிஎஸ் செய்யப்பட்டதோ, அங்கெல்லாம் படிவம் 16A வைப்புதாரருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
1.6.2007 லிருந்து கொடுக்கப்படவேண்டிய வட்டிக்கு வரி பிடிக்கப்படவேண்டும். கேள்வியில் உள்ளதுபோல் 1.7.2007லிருந்து அல்ல.
3.
கூட்டுவட்டியை தேர்ந்தெடுத்தோர்க்கு முதிர்வடைந்த போது வரியை பிடிக்க வேண்டுமென்றால் வணிக முறை கணக்கீட்டை பின்பற்றி கடந்த வருடங்களில் வட்டியை அவ்வப்போது பெறும் முறையில் உள்ளோரின் நிலை என்ன?
வரி கழிப்பது, முதிர்வடையும் நேரம் வரை காத்திருக்கவேண்டாம். எப்பொழுது எல்லாம் வட்டி வரவு வைக்கப்படுகிறதோ/ அளிக்கப்படுகிறதோ, எது முதலில் வரும் தொகையோ, அந்த நிதியாண்டில் ரூ.10000/-க்கும் அதிகமாக அந்த ஆண்டில் ஆகும்பொழுது செய்யலாம்.
2. இத்திட்டத்தினை செயல்படுத்தும் குறிப்பிட்ட வங்கிகளுக்கு தகுந்த உத்தரவுகளை நீங்கள் பிறப்பிக்கலாம்.
3. பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
தங்கள் உண்மையுள்ள
(K. பாலு) துணைப் பொது மேலாளர்
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்