RBI/2008-09/296
DBOD.No.Leg.BC.86/09.07.005/2008-09
நவம்பர் 25, 2008
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் / அனைத்து இந்திய
நிதிநிறுவனங்கள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்
கடன் கொடுப்பவர்கள் பின்பற்றவேண்டிய
சிறந்த நடைமுறை வழக்கங்களுக்கான நெறித்தொகுப்பு - வழிகாட்டுதல்கள் - பரிசீலனைக் கட்டணம் - செலவினங்கள் ஆகியவை குறித்த அனைத்து தகவல்களையும் வெளியிடுதல்
மார்ச் 6, 2007 தேதியிட்ட எங்களின் சுற்றறிக்கை எண். DBOD.No.Leg. BC.65/09.07.005/2006-07-ஐப் பார்வையிடவும். இதன்படி வங்கிகள் / நிதிநிறுவனங்கள் தாங்கள் வழங்கும் எல்லாவகைக் கடன்களுக்கும் (கடனாளி வேண்டும் தொகை எதுவாயினும்) உரிய விண்ணப்படிவங்கள் விரிவானதாக இருக்க வேண்டும். பரிசீலனைக்குரிய கட்டணம் / செலவு, விண்ணப்பம் மறுக்கப்பட்டால் இதில் திருப்பியளிக்கப்படும் தொகை, கடனை காலகெடுவுக்கு முன்னரே திருப்பித்தர வசதியுண்டா, கடன் மீது விதிக்கப்படும் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சூழல்கள் எவை ஆகிய அனைத்து விவரங்களும் அந்த விண்ணப்படிவத்தில் இடம்பெற வேண்டும். இதனால் கடனாளி மற்ற வங்கிகளோடு ஒப்பிட்டு ஒரு தேர்ந்து தெளிந்த முடிவினை எடுக்கமுடியும்.
2. சில வங்கிகள் பரிசீலனை கட்டணம் தவிர சில இதர கட்டணங்களை கடனாளிகளுக்கு முன்னரே சொல்லாமல் பின்னர் விதிப்பது எங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு கடனாளிக்கு முன்னரே தெரிவிக்காமல் பின்னர் இவ்வாறு கட்டணங்களை விதிப்பது நியாயமான நடை முறை வழக்கமாகாது என்பதை குறிப்பிடுகிறோம்.
3. ஆகவே பரிசீலனை, இதர கட்டணங்கள் குறித்த அனைத்து தகவல்களும் கடன் விண்ணப்ப படிவங்களிலேயே தவறாமல் காட்டப்படுவதை உறுதிசெய்திடவேண்டுமென்று வங்கிகள் / நிதிநிறுவனங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் ஒரு கடன் மீதான அனைத்து செலவினங்களையும் வங்கிகள் ஒரு வாடிக்கையாளருக்கு தெரிவித்தால் அது அவர் மற்ற இடங்களிலிருந்து பெறும் நிதிஉதவிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க உதவியாக இருக்கும்.
தங்கள் உண்மையுள்ள
(பிரசாந்த் சரன்)
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)
|