RBI/2009-10/119
DBOD,No.Leg.BC.30/09.07.005/2009-10
ஆகஸ்ட் 12, 2009
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்
வங்கிகள் முடக்கி வைத்துள்ள கணக்குகள் மீதான வட்டி வழங்குதல்
வாடிக்கையாளர் சேவை குறித்த ஜூலை 1, 2009 தேதியிட்ட எங்களின் தொகுப்புச் சுற்றறிக்கை எண் DBOD,No.Leg.BC.9/09.07.006/2009-10-ல் உள்ள பத்தி 5.8.9-ஐப் பார்க்கவும். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழங்கும் ஆணையின் அடிப்படையில் வங்கிகள் முடக்கி வைத்திடும் வாடிக்கையாளர்களின் குறித்தகால வைப்புக் கணக்குகள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றுமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.
2. பத்தி 5.8.9-ல் குறிப்பிட்டுள்ளபடி, அந்த வைப்பினை கணக்கு தொடங்கியபோது உள்ள அதே கால அளவிற்கு முதிர்விலிருந்து புதுப்பிக்க ஒரு வேண்டுதல் கடிதத்தை வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன. ஆயினும் இதை மறுஆய்வு செய்தபொழுது அதே கால அளவிற்கு புதுப்பிப்பதைக் காட்டிலும் வைப்புதாரர் விரும்பும் கால அளவிற்கு அந்த வைப்பினை புதுப்பிக்க வாய்ப்பளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
3. எனவே வாடிக்கையாளரிடமிருந்து புதுப்பித்ததற்கான வேண்டுதல் கடிதத்தைப் பெறும்பொழுது அவர் எந்த கால அளவிற்கு அந்த வைப்பினை புதுப்பிக்க விரும்புகிறார் என்பதனை அதிலே குறிப்பிடும்படி வங்கி அவருக்கு அறிவுறுத்தலாம். வைப்புதாரர் ஒருவேளை புதுப்பிப்பதற்கான கால அளவைத் தேர்ந்தெடுத்து குறிப்பிடாவிட்டால் வங்கிகள் முன்பிருந்த அதே கால அளவிற்கு புதுப்பிக்கலாம்.
தங்கள் உண்மையுள்ள
(B. மஹாபத்ரா)
தலைமைப் பொது மேலாளர்
|