RBI/2009-10/205
DCM(Plg).No. 2701/10.01.03/2009-10
அக்டோபர் 30, 2009
தலைவர்/நிர்வாக இயக்குநர்
அனைத்து பொது/தனியார் துறை வங்கிகள்
அன்புடையீர்,
வங்கிகள் தங்களது பண நிர்வாக செயல்பாடுகளுக்காக
ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிப்பது
இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி ஆளுநர் திருமதி உஷா தோரட் தலைமையிலான, பண நிர்வாகம் குறித்த உயர்மட்டக்குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 2009ல் சமர்ப்பித்தது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பண இருப்பு, பரிசீலித்தல் மற்றும் பண விநியோகம் ஆகியவற்றில் பாதுகாப்பு முறைகள் போன்றவற்றை உறுதி செய்து பொதுமக்களுக்கு சுத்தமான நோட்டுக்களை போதுமான அளவில் கிடைத்திட வேண்டியதன் முக்கியத்துவத்தை அக்குழு வலியுறுத்துகிறது.
2. வங்கிகள் மேற்கண்ட நோக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்திட, பணக்கருவூல அறைகளைப் பராமரிக்கும் அனைத்து வங்கிகளும், பொது மேலாளர் அளவிற்கு குறையாத ஒரு அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைத்து, ரிசர்வ் வங்கி தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு முக்கிய நிலையில் வைக்கவேண்டும். அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் பணக்கருவூல அறைகள் சார்ந்த பொறுப்புகளுக்கு அவர் கடமைப்பட்டவராகவும் ஆகிறார். மற்ற வங்கிகளும் ஒரு உயர் அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
3. வங்கிகள் தங்களது ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் பெயர்களை, அவர்களது அலுவலக முகவரி, தொடர்பு எண் (தொலைபேசி மற்றும் அலைபேசி, ஒளிநகலனுப்பி எண்) மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை விரைவில் எங்களுக்கு அனுப்பிடவேண்டும்.
4. உயர்மட்டக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விரிவான வழிகாட்டு நெறிகள் தனியாக வெளியிடப்படும்.
தங்கள் உண்மையுள்ள
(ராஷ்மி பெளஸ்தர்)
பொது மேலாளர்.
|