காசோலை சேகரக் கொள்கை(CCP) - உள்ளூர்/வெளியூர் காசோலைகளுக்கு உடனடி வரவு
RBI/2009-10/387 RPCD.CO.RRB.BC.No.65/03.05.33/2009-10
ஏப்ரல் 8, 2010
தலைவர்
அனைத்து ஊரக வங்கிகள்
அன்புடையீர்,
பெப்ரவரி 5, 2009 தேதியிட்ட RPCD.CO.RRB.BC.No.87/03.05.33/2008-09 சுற்றறிக்கையைப் பார்க்கவும். தேசிய நுகர்வோர் புகார் தீர்வு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட காலகெடுவின்படி உள்ளூர்/வெளியூர் காசோலைகளை சேகரத்திற்காக தமது காசோலை சேகரக் கொள்கையை வடிவமைக்கும்படி ஊரகவங்கிகள் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
2.காசோலை சேகரிப்புக்கொளகை பின்வருவன குறித்து அறிவுறுத்தல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஊரக வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. உள்ளூர்/வெளியூர் காசோலைகளுக்கு உடனடியாக வரவு வைப்பது குறித்த விஷயங்களோடு, அவற்றின் சேகரத்திற்காக ஆகும் கால அளவிற்கு உரிய கெடு மற்றும் தாமதத்திற்கு அளிக்கும் வட்டி ஆகியவற்றையும் காசோலை சேகரிப்பு கொள்கை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
3. இந்த சுற்றறிக்கை பெற்றதற்காக ஒப்புகையை எங்களின் பிராந்திய அலுலவகங்களுக்குத் தெரிவிக்கவும்.
தங்கள் உண்மையுள்ள
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்