RBI/2004-05/315
DCM (Plg).No.G.31/10.03.00/2004-05
டிசம்பர் 27, 2004
பணப்பெட்டக அறைகளுடைய
வங்கிகள
அன்புடையீர்,
நாணயங்களை ஏற்க மறுத்தல்
2004 ஏப்ரல்
5 தேதியிட்ட கடிதத்தில
(எண் DCM(RMMT)
No.1181/11.37.01/2003-04) வங்கிக் கிளைகளுக்கு
நாணயங்களை மக்களிடமிருந்து
பெற்றுக் கொள்ளுதல்
பற்றி ரிசர்வ்
வங்கியின் கட்டளைகள்/அறிவுரைகள்
பற்றிச் சொல்லியிருந்தோம்.
2004 நவம்பர் 22 அன்று
சென்னையில் உள்ள
ரிசர்வ் வங்கி
அலுவலர் பயிற்ச்சிக்
கல்லுரியில் நடைபெற்ற
ரிசர்வ் வங்கிக்
கிளைகளின் பணம்
வழங்கும் துறையின்
தலைமை அலுவலர்கள்
– பணப்பெட்டக அறைகள்
கொண்ட வங்கிகளின்
மூத்த அதிகாரிகள்
கூட்டத்தில், நாணயங்களை
மக்களிடமிருந்து
வங்கிக் கிளைகள்
வாங்காமலிருத்தலால்
மக்கள் படும் இன்னல்கள்/அவதிகள்
பற்றி விரிவாக
எடுத்துச் சொல்லப்பட்டது.
2. நேரடியாகவும்
மறைமுகமாகவும்,
வங்கிக்கிளைகள்
நாணயங்களை வாங்க
மறுப்பது பற்றி
இன்னமும் நிறையப்
புகார்கள் வருகின்றன.
என்வே மீண்டும்
ஒரு முறை உங்கள்
கிளைகள் அனைத்திற்கும்,
நாணயங்களைப் பொதுமக்கள்
மாற்றலுக்காகவோ
அல்லது தங்கள்
கணக்கில் வரவு
வைப்பதற்காகவோ
கொடுத்தால் வாங்கிக்
கொள்ள அறிவுறுத்துமாறு
உங்களுக்குக்
கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.
கிளைகளுக்கு உள்ளேயும்
வெளியேயும், நாணயங்களை
மாற்றும் வசதி
இருப்பதாக அறிவிப்புகள்
இருக்க வேண்டும்.
3. ஏற்றுக் கொள்ளப்படுகின்ற
நாணயங்களைக் கையாளுவதற்காக,
நாணயங்களைப் பிரித்து
எண்ணும் இயந்திரங்களைக்
குறிப்பாக பெரிய
நிறுவனங்கள்/கோயில்களை
வாடிக்கயாளர்களாக்
ஜாண்ட கிளைகள்,
பயன் படுத்த வேண்டும்.
நடைமுறையில் உள்ள
விதிகளின்படி,
அலுமினியத்தாலான
5, 10, 20 பைசாக்கள், அலுமினியமும்
வெண்கலமும் கலந்த
10 பைசாக்கள், எவர்சில்வர்
10 பைசா, குப்ரோ நிக்கல்
25, 50 பைசா மற்றும்
ஒரு ரூபாய் நாணயங்கள்
மும்பை/கல்கத்தா/ஹைதராபாத்
நாணயம் அச்சடிக்கும்
அலுவலகங்களுக்கு
அனுப்பப்படவேண்டும்.
எவர்சில்வர்
25, 50 பைசாக்கள,
1 ரூபாய், குப்ரோ
நிக்கல் 2,
5 ரூபாய் நாணயங்களை
மீண்டும் புழக்கத்தில்
விட அனைத்து முயற்சிகளும்
மேற்கொள்ளப்படவேண்டும்.
ஒரு வேளை இந்த நாணயங்களுக்குத்
தேவை இல்லையெனில்,
சம்மந்தப்பட்ட
ரிசர்வ் வங்கிக்
கிளையின் பணம்
வழங்கு துறையை
அணுகலாம்.
4. மக்களுக்கு
எவ்விதத் தொந்தரவும்
கொடுக்காமல், எவ்விதக்
கட்டுப்பாடோ நிபந்தனையோ
விதிக்காமல், உங்களது
அனைத்துக் கிளைகளும்
மக்களிடமிருந்து
அவர்கள் அளிக்கும்
அனைத்து நாணயங்களையும்
ஏற்றுக் கொள்ளவேண்டும்
என்று நீங்கள்
அவர்களுக்கு மீண்டும்
ஒருமுறை அறிவுறுத்துமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
5. கிடைத்தமைக்கு
ஒப்புதல் அளித்து
உங்கள் செயலாக்கத்தை
எங்களுக்குத்
தெரியப்படுத்த
வேண்டுகிறோம்.
நம்பிக்கையுள்ள
யு.எஸ். பாலிவால்
தலைமைப் பொது
மேலாளர் |