Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (104.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 01/09/2010

NEFT/NECS/ECS பரிவர்த்தனைகளில் வரவு/திரும்புதல் ஆகியவற்றில் ஏற்படும் தாமதத்திற்கு வங்கிகள் அளிக்கவேண்டிய அபராத வட்டி சீரமைத்தல்

RBI/2009-2010/188
DPSS.CO.EPPD.No.477/04.03.01/2010-11

செப்டம்பர் 1, 2010

NEFT/NECS/ECS திட்டங்களில் அங்கத்தினராக உள்ள வங்கிகளின்
தலைவர்/நிர்வாக இயக்குநர்/தலைமை நிர்வாக அதிகாரி

அன்புடையீர்,

NEFT/NECS/ECS பரிவர்த்தனைகளில் வரவு/திரும்புதல் ஆகியவற்றில்
ஏற்படும் தாமதத்திற்கு வங்கிகள் அளிக்கவேண்டிய அபராத வட்டி சீரமைத்தல்

மின்னணு முறையிலான செலுத்துதல்களில் சிறுஅளவிலான செலுத்துதல்களில் சமீபகாலத்தில் அபரிமித வளர்ச்சி எண்ணிக்கையிலும், பரவலிலும் ஏற்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நம் நாட்டிலுள்ள ஏறத்தாழ 70,000 வங்கிக் கிளைகள் NEFT வசதியை அளிக்கின்றன.  ECS  89 மையங்களில் கிடைக்கிறது. ஜூலை 2010 மாதத்தில் மட்டுமே NEFTல் 9 மில்லியன்,  NECS/ECS ல் 25மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. செலுத்துதல் முறைமை மெதுவாக மின்னணு ஊடக முறைக்கு மாறுவதற்கான நல்ல நிமித்தமாக இதைக் கருதலாம். அதேவேளையில், அங்கத்தினர் வங்கிகள் வாடிக்கையாளர் சேவை மற்றும் திறமைக்கான அளவீடுகளை கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியமாகும்.

NEFT/NECS/ECS நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் அவ்வப்போது நாங்கள் வழங்கும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றின் கருத்துப்படி அங்கத்தினர் வங்கிகள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பயனாளிகள் கணக்கிற்கு வரவு வைக்கப்பட வேண்டும் அல்லது வரவு வைக்கப்பட முடியாவிடில் (ஏதோவொரு காரணத்தால்) பரிவர்த்தனை முதலில் தொடங்கிடும் வங்கி அல்லது உத்தரவாதமளிக்கும் வங்கிக்கும் திருப்பி அனுப்பப்படவேண்டும். இதில் தாமதம் ஏற்படுமானால், அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள அபராத விதிகளுக்கு உட்பட நேரிடும்.

அபராதத்திற்குரிய பரிந்துரைகள் இத்தகு மின்னணு ஊடக செலுத்துதல் சிறு அளவிலான முறைமைகளில் ஒரேமாதிரியாக இல்லை.  NECS மற்றும் ECS வரவு பரிவர்த்தனைகளை பொருத்தவரை வங்கிகள் கொடுக்கவேண்டிய அபராத வட்டி என்பது நடப்பிலுள்ள வங்கி விகிதம் +2% (நடைமுறை வழிகாட்டுதல் முறையே பத்தி 15.4ன்படி மற்றும் பத்தி 29 ன்படி)ஆகும். NEFT பரிவர்த்தனைகளுக்கு அபராத வட்டி என்பது வங்கி விகிதம் (நடைமுறை வழிகாட்டுதல் முறையே பத்தி 6.7ன்படி). இவற்றில்  உபயோகிக்கப்படும் தர நிர்ணயவிகிதம் ஒரே மாதிரியானவையாக்கிடவும், அபராதம் குறித்த கருத்துக்களை எல்லா வகையான    மின்னணு ஊடக (சிறு அளவு) செலுத்துதலின் முறைகளில் சீரமைத்திடவும், பின்வரும் திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. 

NECS/ ECS வரவு

பயனாளிக்கு வரவு வைக்க கெடுவான நாளிலிருந்து, உண்மையாக வரவு வைக்கப்பட்ட நாள் வரை உள்ள காலத்திற்கு நடப்பிலுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் LAF ரிப்போவிகிதத்துடன் 2% கூட்டப்பட்ட விகிதத்தில் அபராத வட்டியை, இறுதிகட்ட வங்கி(Destination Bank) அளிக்க கடமைப்பட்டுள்ளது. அந்த அபராத வட்டி கோரப்படாத போதிலும், அது  பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப் படவேண்டும்.

NEFT

பத்தி 6.7. பண மாற்றம் குறித்த பரிவர்த்தனையில், பணம் சேரும் இறுதிக்கட்ட வங்கி கொடுத்த செலுத்துதல் குறித்த அறிவுறுத்துதலுக்குப் பின்னர் வங்கியின் பணியாளர் நடவடிக்கையால் உள்ள கவனக்குறைவு, மோசடி ஆகியவை பிழை ஆகியவற்றால் தாமதமோ அல்லது நஷ்டமோ ஏற்பட்டால், அதனால் இறுதிக் கட்டத்தில் பயனாளிக்கு பணம் தாமதமாகச் சென்று சேர்ந்தால், இறுதிக்கட்ட வங்கி அந்த தாமதமான காலகட்டத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் LAF ரிப்போவிகிதத்துடன் 2% கூட்டப்பட்ட விகிதத்தில் இழப்பீடு வழங்கப்படும். ஏதோவொரு காரணத்தால் பணத்தைத் திருப்பி அனுப்பும் அறிவுறுத்துதல்படி நடப்பில் தாமதம் ஏற்பட்டால், இறுதிக்கட்ட வங்கி அந்த பணத்தைத் திருப்பி அளிப்பதோடு கூடவே திருப்பித்தரும் நாள்வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ரிப்போவிகிதத்துடன் 2% கூட்டப்பட்ட விகிதத்தில் வட்டியும் அளிக்க வேண்டும்.

பத்தி 6.8ம் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டது.

NEFT பரிவர்த்தனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், தொடங்கிடும் வங்கி NEFT பரிவர்த்தனைக்கான கோரிக்கைகளை (முகப்பு அல்லது உடன் நிகழ் முறையின் மூலம்) அடுத்த பணித்தொகுதியில், எப்படியும் கோரிக்கையைப் பெற்ற 2 மணிநேரத்திற்குள் செயல்படுத்திடவேண்டும். இதை பூர்த்தி செய்வதில் தாமதம் அல்லது தாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பின் அதனை வாடிக்கையாளுக்கு காரணத்துடன் தெரிவித்திடவேண்டும்.

நடைமுறைக்கான வழிகாட்டுதல்களில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை அங்கத்தினர் வங்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

தங்களது உண்மையுள்ள

(ஜி.பத்மநாபன்)
தலைமைப் பொது மேலாளர்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்