இந்திய
ரிசர்வ் வங்கி
மைய
அலுவலகம்
வங்கிகள்
நடவடிக்கை
மற்றும்
மேம்பாடடுத்துறை
மையம்-1,
உலக வர்த்த்க
மையம்
கஃப ரோடு,
கொலாபா,
மும்பை- 400 005
DBOD No.DIR.BC 42/13.03.00/2001-02
நவம்பர்
7, 2001
வங்கி
கட்டுப்பாட்டு
சட்டம் 1949
பிரிவு 35A
அளிக்கும்
அதிகாரங்களின்படி
பாரதீய
ரிசர்வ் வங்கி,
பொதுநல
நோக்கின்
அவசியத்தாலும்
அவசரத்தாலும்
உடனடியாக
நிறைவேற்றிட
கீழ்க்கண்ட
ஆணைகளை
பிறப்பிக்கிறது.
1. வங்கிகள்
புதிய,
மீண்டும்
புழக்கத்திற்கு
விடக் கூடிய,
புழக்கத்திற்கு
விட முடியாத
ரூபாய் நோட்டு
பாக்கெட்டுகளில்
பின்னடிப்பதை
கைபவிட
வேண்டும்.
அதற்குப்
பதிலாக ரூபாய்
நோட்டுப்
பாக்கெட்டுகள்
காகித
வளையங்களால்
இறுக்கப்பட
வேண்டும்.
2. வங்கிகள்
கரன்சிநோட்டுக்களை
புழக்கத்திற்கு
விடக்கூடிய
மற்றும்
புழக்கத்திற்கல்லாதவைகளாகப்
பிரித்து,
நல்ல
நோட்டுக்களை
மட்டும்
பொதுமக்களிடையே
புழக்கத்திற்கு
விட வேண்டும்.
வங்கிகள்,
அழுக்கடைந்த
நோட்டுக்களை
பின்னடிக்காத
நிலையில்,
பணப்பெட்டகங்கள்
மூலமாக
உள்முக பண
அனுப்பீட்டில்
ரிசர்வ்
வங்கிக்கு
அனுப்ப
வேண்டும்.
3. ரூபாய்
நோட்டுகளின்
நீர்க்குறியீட்டின்மேல்
இனிமேற்கொண்டு
வங்கிகள்
எதுவும்
எழுதக் கூடாது.
கே.எல்.கேட்டர்பால்
செயல்
இயக்குநர் |