நாணயங்களுக்குத்
தட்டுப்பாடு
இல்லை 5 ரூபாய்
நாணயங்கள்
உட்பட -
தெளிவுபடுத்துகிறது
ரிசர்வ்
வங்கி
நவம்பர் 8, 2005
5
ரூபாய் நாணயங்களுக்குத்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
என்றும்
அதனால் 5
ரூபாய்
பணத்தாள்கள்
மீண்டும்
அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளன
என்றும் செய்தி
அறிக்கைகள்
வெளியாவது
ரிசர்வ் வங்கியின்
கவனத்துக்கு
வந்துள்ளது. இந்திய
ரிசர்வ்
வங்கியிலும்
ஏனைய
வங்கிகளிலும்
கூட 5 ரூபாய் நாணயங்கள்
உட்பட எந்த
நாணயங்களுக்கும்
தட்டுப்பாடு
இல்லை என்பது
பொது
மக்களின்
நலன் கருதி
தெளிவுபடுத்தப்படுகிறது. எந்த
இலக்க
மதிப்பிலும்
நாணயங்களைப்
பெற
விரும்புவோர்
இந்திய
ரிசர்வ்
வங்கியிலும்
பிற
வங்கிகளிலும்
நாணயங்களை
மாற்றுதலாகப்
பெறலாம். பேரளவில்
எல்லா நாணய
மதிப்பிலும்
நாணயங்கள் உள்ளன
என்பது
மேலும்
தெளிவுபடுத்தப்
படுகிறது.
இதனால் 5
ரூபாய்
பணத்தாள்களை
மீண்டும்
அறிமுகப்படுத்தும்
திட்டம்
எதுவும்
இல்லை.
பத்திரிக்கை
வெளியீடு 2005-2006/556
பி.வி.
சதானந்தன்
மேலாளர்.
|