பத்திரிக்கைக்
குறிப்பு
ஆகஸ்ட் 23, 2005
வெளிநாட்டு
நாணயம் மூலம்
தான் பணம்
செலுத்த
வேண்டும்
என்று
வலியுறுத்துதல்
கூடாது
ஓட்டல்
உரிமையாளர்கள்
போன்ற சில
சேவை வழங்குவோர்
வெளிநாட்டினரிடம்
அமெரிக்க
டாலரில்
தனிக்கட்டணத்தைக்
கேட்பதாகவும்
அதனை
வெளிநாட்டு
நாணயமாகச்
செலுத்த
வேண்டும்
என்று
வலியுறுத்துவதாகவும்
ரிசர்வ்
வங்கிக்குத்
தகவல்
கிடைத்துள்ளது. இந்தச்
செயல்பாடு
அன்னியச்
செலவாணி
மேலாண்மைச்
சட்டம் 1999 (FEMA)க்கு
பொருந்தாது.
மேலும் இது
இந்தியாவில்
உள்நாட்டு
நாணயத்தின்
சட்டப்படியான
மதிப்பினைக்
குறைப்பதாகவும்
உள்ளது.
முன்னர்
அன்னியச்
செலவாணி
ஒழுங்குமுறைச்
சட்டம் (FERA) 1973ன்கீழ்
இந்திய அரசு 1981 ஆகஸ்ட் 20ஆம்
நாளிட்ட
அறிக்கை
ஒன்றில்
இந்தியாவுக்கு
வரும்
சுற்றுலாப்
பயணியர் அன்னிய
நாணயத்தில்
பணம்
செலுத்த்
வேண்டும் என்று
குறிப்பிட்டிருந்தது. எனினும்
அன்னியச்
செலவாணி
ஒழுங்குமுறைச்
சட்டம் (FERA) 1973 முன்னரே
தள்ளுபடி
செய்யப்பட்டுவிட்டது.
இப்போது
நடப்பிலுள்ள
அன்னியச்
செலவாணி
ஒழுங்குமுறைகள்
FEMA 1999 என்னும்
பெயரில்
வடிவமைக்கப்பட்டு
ஜுன் 1, 2000ல்
நடைமுறைக்கு
வந்தது.
FEMAவின்கீழ்
வெளியிடப்பட்ட
ரிசர்வ் வங்கியின்
மே 13, 2000
நாளிட்ட
அறிக்கை எண் 16,
இந்தியாவில்
வாழும்
நபர்கள்
வெளிநாட்டில்
வாழும்
ஒருவர்
இந்தியாவுக்கு
வரும்போது அவரிடமிருந்து
வெளிநாட்டு
நாணயத்தில்
பணம்
பெறுவதற்து மட்டும்
உரியது.
பரிமாற்ற
வசதிக்காக ஒரு
வெளிநாட்டவர்
அவருக்குச்
செய்யப்படும்
சேவைகளுக்காக
அவர் வெளிநாட்டுப்
பணத்திலோ
அல்லது
இந்தியப்
பணத்திலோ
அவருடைய
விருப்பப்படி
பணம்
செலுத்தும் சூழ்நிலையை
அது
உருவாக்கியது. வெளிநாட்டு
நாணயத்தில்
தான் பணம்
செலுத்த
வேண்டும்
என்று
வலியுறுத்தும்
உரிமையை அது
இந்தியாவில்
வாழ்வோருக்கு
வழஙகவில்லை.
இப்போது,
வெளிநாட்டினர்
அத்தகைய
நேரங்களில்
வெளிநாட்டு
நாணயத்தில்
தான் பணம்
செலுத்த
வேண்டும்
என்று
அறிவுறுத்தல்
எதுவும்
நடைமுறையில்
இல்லை.
ஆகவே,
இந்தியாவில்
வழங்கப்
படும்
சேவைகளுக்கு வெளிநாட்டு
நாணயத்தில்
தான் பணம்
செலுத்த வேண்டும்
என்று
வலியுறுத்துவது
இப்போதுள்ள
அன்னியச்
செலவாணி நடைமுறைகளுக்குப்
பொருந்தாதது.
அஜித்
பிரசாத்
மேலாளர்.
பத்திரிக்கை
வெளியீடு 2005-2006/238
|