மே 25, 2004
இந்திய
ரிசர்வ் வங்கி,
தனிநபர்களின்
அந்நியச்
செலாவணிப்
பரிமாற்றங்கள்,
அவர்களது
பணப்பறிமாற்றங்கள்
போன்று
எளிமையாக
அமைய, பல
நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
அவற்றுள்
தாராளமாக்கப்பட்ட
திட்டமும்
அடங்கும்.
அதன்படி
அமெரிக்க
டாலர் 25000 வரை
தனிப்பட்ட
நபர் தொகை
செலுத்தலாம்
என்பது
பிப்ரவரி 2004ல்
அறிவிக்கப்பட்டது.
அத்தோடு சலுகை
வீதத்தில்
பணியாளரது
பங்கு
விருப்பு
எனும்
வரையறைப்
பிரிவும்
நீக்கப்பட்டது.
இந்திய
ரிசர்வ் வங்கி
அயல்நாட்டு
செலாவணி
சட்டம் 1999
என்பதனை
நடைமுறைப்
படுத்திவந்த
துறையின்
பெயரையும்
செலாவணி
கட்டுப்பட்டுத்
துறை
என்பதற்குப்
பதிலாக
அந்நியச்
செலாவணித்துறை
என மாற்றி
அமைத்தது.
அத்தோடு
அதனைக்
குறிக்கோள்
நிறைவேற்றும்
மிக்க
சிறப்புக்
கடமைப்பிரிவாக,
சேவை
மனப்பான்மையுடையதாக
மாற்றி
அமைத்தது.
மேலும்
இந்திய
ரிசர்வ் வங்கி
பயிற்சி
பெற்ற
அலுவலர்களை
வாடிக்கையாளர்களை
நேருக்குநேர்
சந்திக்கும்
முதற்கட்ட
நிலையில்
வங்கிகள்
தங்கள்
அங்கீகரிக்கப்பட்ட
வணிகக்கிளைகளில்
பணி
அமர்த்தவேண்டும்
அதற்கான
நடவடிக்கைகளை
எடுக்க
வேண்டும் என
அறிவுறுத்தியது.
நவம்பர் 2003ல்
ஏற்றுக்
கொண்ட இடைப்
பருவ பணம்சார்
கடன்
கொள்கையைச்
செயல்பாட்டைப்
பின்பற்றி
இந்திய
ரிசர்வ் வங்கி
பொதுச்
சேவையின்
நடைமுறை
மற்றும்
செயற்பாங்கு
குறித்த
தணிக்கைக்
குழு ஒன்றினை (தலைவர்
எஸ்.எஸ்.தாராபூர்
முன்னாள் துணை
ஆளுநர்,
இந்திய
ரிசர்வ் வங்கி)
நிறுவியது. தனி
நபர்
வாடிக்கையாளர்
பரிமாற்றச்
செயல்பாடுகளில்
நான்கு
வேறுபட்ட
பகுதிகளை
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
நடைமுறை
மற்றும்
செயற்பாங்கின்
அடிப்படையில்
தாராபூர் குழு
ஆய்ந்தறிந்தது.
அயல்நாட்டுச்
செலாவணி,
அரசாங்கப்
பரிமாற்றங்கள்,
வங்கி
இயக்கமுறை,
நாணயமேலாண்மை
என
அப்பகுதிகள்
அமைந்தன.
தாராபூர் குழு
அதன்
அறிக்கையை
ஜனவரி-ஏப்ரல்
2004ல் அளித்தது.
இந்திய
ரிசர்வ் வங்கி
அதன்
பரிந்துறைகளைக்
கவனமாகப்பார்த்து,
அதனடிப்படையில்,
ஒவ்வொரு
பகுதியிலும்
அதைச்
செயல்முறைப்படுத்த
நடவடிக்கைகளைத்
தொடங்கி
வைத்தது.
இந்திய
ரிசர்வ் வங்கி
இக்குழுவின்
பரிந்துறைகளை
இதர
வங்கிகளுக்கு
அனுப்பிவைத்தது.
அவர்களது
உள்ளமைப்பு
பொதுச்சேவையின்
நடைமுறை,
மற்றும்
செயற்பாங்கு
குறித்த
தணிக்கை,
தற்காலிகத்
தனிக்குழுக்களிடம்
பின்தொடர்
நடவடிக்கை
ஒப்படைக்கப்பட்டது.
இந்திய
ரிசர்வ் வங்கி,
இத்தற்காலிகத்
தனிக்
குழுக்கள்,
குறிப்பாக
தனிநபர்களின்
பரிமாற்றம்
தொடர்பான
அம்சங்களில்
இப்பகுதிகளில்
செயல்முறைகளையும்
நடைமுறையையும்
எளிதாக்குவதற்கான
நடவடிக்கைகளைத்
தொடங்க
வேண்டுமேனக்
கேட்டுக்
கொண்டது. வங்கி
அளவிலான
தற்காலிகத்
தனிக்குழுக்கள்
இது தொடர்பாக
முதல்
கூட்டத்தில்
நேருக்குநேர்
வாடிக்கையாளர்களோடு
தொடர்புகொள்வதற்கு
பயிற்சி
பெற்ற
விபரமான
பணியாளர்க்களைப்
பணியமர்த்துவதை
உறுதி
செய்யவேண்டும்
என்பதையும்
இந்திய
ரிசர்வ் வங்கி
அறிவுறுத்தியது.
அல்பனா
கிள்ளாவாலா
தலைமை பொது
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு 2003-2004/1377
|