சில
நிறுவனங்களால்
/ நபர்களால், “மின்னணுத்
தங்கம்”
என்பது ஒரு
வகைப் பணம்
எனவும், அது
அந்நியப்
பணத்திற்கு
ஈடான
தகுதியைப்
பெற்றுள்ளது
எனவும்
பொதுமக்களிடத்தில்
ஒரு
எண்ணத்தினைத்
தோற்றுவிக்கும்
முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளமை,
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
கவனத்துக்குக்
கொண்டு
வரப்பட்டுள்ளது.
வெளிநாடுவாழ்
இந்தியர்கள்
இந்தியாவில்
பணம்
செலுத்துவதற்கு
மின்னணுத்
தங்கத்தினைப்
பயன்படுத்துகிறார்கள்
என்பதைத்
தெரிவிக்கும்
ஒரு
சுற்றறிக்கையும்
ஒரு
பத்திரிகையுடன்
அண்மைக்
காலத்தில்
மக்களிடையே
பரவிவிட்டது
ரிசர்வ்
வங்கியின்
கவனத்திற்கு
வந்துள்ளது.
மின்னணுத்
தங்கம் என்பது
இறையாண்மை
பெற்ற எந்த
நாட்டினுடைய
பணமும் அன்று
என்பதை
இந்திய
ரிசர்வ் வங்கி
பொதுமக்களின்
தகவலுக்காகத்
தெளிவுபடுத்துகிறது.
இப்போது
நடைமுறையிலுள்ள
விதிகளின்படி
மின்னணுத்
தங்கப்
பரிமாற்றம்
சட்ட மீறல்
ஆகும். எனவே
பொதுமக்கள்,
வங்கிகள், பணம்
மாற்றுவோர்,
மற்ற நிதி
நிறுவனங்கள்
தங்கள்
பணப்பரிமாற்றங்களில்
மின்னணுத்
தங்கத்தினை
ஒரு பணமாகப்
பயன்படுத்த
வேண்டாம்
என்று
எச்சரிக்கப்படுகிறார்கள்.
அல்பனா
கில்லாவாலா
பொது
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு-2002-2003/409
|