Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (135.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 21/08/2015
இந்திய ரிசர்வ் வங்கி, ருபீ கூட்டுறவு வங்கி, புனேவுக்கு வெளியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகள் நீட்டிப்பு

ஆகஸ்ட் 21, 2015

இந்திய ரிசர்வ் வங்கி, ருபீ கூட்டுறவு வங்கி, புனேவுக்கு
வெளியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகள் நீட்டிப்பு

மஹாராஷ்டிரா, புனேயிலுள்ள ருபீ கூட்டுறவு வங்கிக்கு ஆகஸ்ட் 20, 2015 தேதியிட்ட DCBR.CO.AID/D-10/12.22.218/2015-16 உத்தரவின்படி மறு பரிசீலனைக்கு உட்பட்டு, ஆகஸ்டு 22, 2015 முதல் பிப்ரவரி 21, 2016 வரை மேலும் 6 மாதங்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகின்றன. இவ்வங்கிக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகள் முன்னரே பிப்ரவரி 22, 2013 முதல் ஆகஸ்ட் 21, 2013 வரை பிறப்பிக்கப்பட்டன. இவை மூன்று முறை 6 மாதங்களுக்கும், இருமுறை 3 மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. கடந்த முறை உத்தரவு மே 21, 2015 முதல் ஆகஸ்ட் 21, 2015 வரை 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் சட்டப்பிரிவு 35A(1) மற்றும் சட்டப்பிரிவு 56 உடன் சேர்ந்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பிரயோகித்து, இந்தக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆர்வமுள்ள பொதுமக்கள் பார்வையிடும் விதமாக இந்த உத்தரவுகளின் நகல்கள் வங்கியின் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவுகளின் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்துவிட்டதாகக் கருதக்கூடாது. தனது நிதிநிலையில் முன்னேற்றம் காணும் வரை, வங்கி வர்த்தகத்தைக் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்குட்பட்டு, இந்த வங்கி நடத்திவரும். இந்திய ரிசர்வ் வங்கி, சூழ்நிலைக்கு ஏற்ப, இந்த உத்தரவுகளில் மாற்றத்தைக் கொண்டுவரக் கருதிடலாம்.

சங்கீதா தாஸ்
இயக்குநர்

PRESS RELEASE: 2015-2016 / 467

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்