ஆகஸ்ட் 13, 2015
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A ன் கீழ் கட்டுப்பாட்டு உத்தரவுகள் – சதாப்தி மஹிலா சஹகாரி பேங்க் லிட்., தானே மாவட்டம், தானே, மஹாராஷ்ட்ரா
சதாப்தி மஹிலா சஹகாரி பேங்க் லிட்., தானே மாவட்டம், தானே, ஆகஸ்ட் 20, 2014 அலுவல் நேர முடிவிலிருந்து 6 மாத காலம் வரை கட்டுப்பாட்டு உத்தரவு எண் UBD.CO.BSD-I/D-5/12.22.504/2014-15 தேதி ஆகஸ்ட் 14, 2014-ன்படி நடக்க ஆணையிடப்பட்டது. அந்த ஆணையின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 19, 2015 அலுவல் நேர முடிவிலிருந்து அமலாக்கம் செய்யப்படுவதன் பொருட்டு, பிப்ரவரி 04, 2015 தேதியிட்ட ஆணை எண் DCBR.CO.BSD-I/D-31/12.22.504/2014-15 பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், ஆகஸ்ட் 14, 2014 தேதியிட்ட ஆணையுடன், பிப்ரவரி 04, 2015 தேதியிட்ட ஆணையையும் சேர்த்துப்படிக்கவும். இந்த வங்கியின் மீதான கட்டுப்பாட்டு காலம் பரிசீலனைக்கு உட்பட்டு, ஆகஸ்டு 18, 2015 லிருந்து நவம்பர் 17, 2015 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, ஜூலை 21, 2015 தேதியிட்ட DCBR.CO.AID.NO.D-04/12.22.504/2015-16 ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதர கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றமின்றி அனுசரிக்கப்படும். ஜூலை 21, 2015 தேதியிட்ட, மேற்குறிப்பிட்ட திருத்தத்தை காட்டும் உத்தரவின் நகல், பொதுமக்கள் பார்வைக்கு அந்த வங்கியின் கட்டிடத்தில் வைக்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட திருத்தத்தை செய்துள்ளது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் நிதிநிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதென, இந்திய ரிசர்வ் வங்கி திருப்தியடைந்துவிட்டதாகக் கருத முடியாது.
அனிருத்தா D. ஜாதவ்
உதவி மேலாளர்
PRESS RELEASE: 2015-2016 / 394 |