செப்டம்பர் 9, 2015
இந்திய ரிசர்வ் வங்கி, வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கி, புதுடெல்லி-க்கு
வழிகாட்டு உத்தரவுகளை வெளியிடுகிறது
பொதுகமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புதுடெல்லி வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கிக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை பிறப்பித்தல் அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி உறுதியாக நம்புகிறது,.எனவே, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் கீழ் மற்றும் வங்கிகள்ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீழ், கிடைக்கும் அதிகாரத்தைப் பிரயோகித்து, இந்திய ரிசர்வ் வங்கி புதுடெல்லி வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கிக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை பிறப்பித்தது. இதன்படி, மேலே குறிப்பிட்ட வங்கி, செப்டம்பர் 8, 2015 அலுவல் நேர முடிவிலிருந்து, இந்திய ரிசர்வ் வங்கியின் எழுத்துப் பூர்வமான முன் அனுமதியின்றி, கடன் மற்றும் முன் தொகைகளை அளிப்பதோ, புதுப்பிப்பதோ, ஏதேனும் முதலீடு செய்வதோ, கடனாக பணத்தைப் பெறுவது மற்றும் புது டெபாசிட்டுகளை ஏற்றுக்கொள்வது, ஏதேனும் பணம் பட்டுவாடா செய்வது, அல்லது பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்வது, வேறு பொறுப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்காக அல்லது வேறு எதற்காகவோ பணம் செலுத்துதல், நிதிசார் ஒப்பந்தங்கள் / ஏற்பாடுகள் செய்துகொள்ளுதல், வங்கியின் சொத்துக்களில் எதையேனும் விற்றல், மாற்றல் அல்லது அவை சார்ந்த விவகாரங்களளில், கீழே குறிப்பிட்டுள்ள வகையிலும் அளவிலும் அன்றி, ஈடுபடுதல் கூடாது
- மொத்த நிலுவையில் ரூ. 1,000/-க்கும் மிகாத தொகையை (ரூபாய் ஆயிரம் மட்டும்), இது எந்தக் கணக்கில் இருந்தாலும், அதாவது சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது டெப்பாசிட் கணக்கு எந்தப் பெயரில் அழைக்கப்படும் எந்த ஒரு டெபாசிட்டாக இருந்தாலும் அதிலிருந்து எடுக்க அனுமதிக்கப்படலாம்.டெப்பாசிட் வைத்திருப்பவர் எங்கெல்லாம் வங்கிக்குத் தரவேண்டிய பொறுப்பில் உள்ளாரோ, அதாவது கடனாளியாகவோ அல்லது பிணையதாரராகவோ இருந்தால், அந்தத் தொகை முதலில் சம்பந்தப்பட்ட கடன் கணக்குகளுக்குத் தீர்வு செய்யப்படும்.
- ஏற்கனவே உள்ள குறித்த கால டெபாசிட்டுகளை முதிர்வடையும்போது அதே பெயரில் மற்றும் அதே நிலையில் புதுப்பித்துக்கொள்வது.
- மேற்கண்ட வழிகாட்டு உத்தரவில் அனுமதிக்கப்பட்டவாறு உள்ள செலவுகள்.
இந்திய ரிசர்வ் வங்கி எழுத்துபூர்வமாக குறிப்பாக ஒப்புதல் அளிக்காதவரையில், இந்த வங்கி எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவோ அல்லது எந்தவொரு பொறுப்பையும் முடிக்கவோ கூடாது
விருப்பமுள்ளவர்கள் பார்வையிட வசதியாக, வங்கியின் கட்டிடத்தில் விரிவான உத்தரவுகளின் பிரதி வைக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, சூழ்நிலைக்கேற்றவாறு வழிகாட்டு உத்தரவுகளில் திருத்தங்கள் செய்ய முனையும். இந்திய ரிசர்வ் வங்கி மேலே குறிப்பிட்ட உத்தரவுகளை வெளியிட்டதைக் கருத்தில் கொண்டு, வங்கி நடத்துவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து விட்டதாகக் கருதக் கூடாது. தனது நிதிநிலை மேம்படும்வரை , சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கி தனது வர்த்தகத்தைத் தொடரலாம்.
மறு அறிவிப்பு வெளியிடப்படும்வரை, இந்த அறிவுறுத்தல்கள் நடைமுறையில் இருக்கும்,
அஜித் பிரசாத்
உதவி மேலாளர்
PRESS RELEASE: 2015-2016 / 626 |