செப்டம்பர் 10, 2015
இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியன் மெர்க்கன்டைல் கூட்டுறவு
வங்கி லிமிடெட், லக்னோ, உத்திரப்பிரதேசம் வங்கிக்கு
வழங்கிய கட்டுப்பாட்டு உத்தரவுகளை நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியன் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், லக்னோ, உத்திரப்பிரதேசம் வங்கிக்கு வழங்கிய கட்டுப்பாட்டு உத்தரவுகளை செப்டம்பர் 12, 2015 முதல் டிசம்பர் 11, 2015 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு மறு பரிசீலனைக்கு உட்பட்டு நீட்டித்துள்ளது. இந்த வங்கி, ஜூன் 12, 2014 முதல் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ளது.
இந்த உத்தரவுகளின்படி, இந்தியன் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், லக்னோ, இந்திய ரிசர்வ் வங்கியின், எழுத்துப் பூர்வமான முன் அனுமதியின்றி, கடன் மற்றும் முன் தொகைகளை அளிப்பதோ, புதுப்பிப்பதோ, ஏதேனும் முதலீடு செய்வதோ, கடனாக பணத்தைப் பெறுவது மற்றும் புது டெபாசிட்டுகளை ஏற்றுக்கொள்வது, ஏதேனும் பணம் பட்டுவாடா செய்வது, அல்லது பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்வது, வேறு பொறுப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்காக அல்லது வேறு எதற்காகவோ பணம் செலுத்துதல், நிதிசார் ஒப்பந்தங்கள் / ஏற்பாடுகள் செய்துகொள்ளுதல், வங்கியின் சொத்துக்களில் எதையேனும் விற்றல், மாற்றல் அல்லது அவை சார்ந்த விவகாரங்களளில் ஈடுபடுதல் கூடாது. குறிப்பாக மொத்த நிலுவையில் ஒரு முறைக்கு ரூ.1,00,000/-க்கும் மிகாத தொகையை (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்), இது எந்தக் கணக்கில் இருந்தாலும், அதாவது சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது எந்தப் பெயரில் அழைக்கப்படும் எந்த ஒரு டெபாசிட்டாக இருந்தாலும் கட்டுப்பாட்டு காலம் ( ஜூன் 12, 2014 முதல் டிசம்பர் 11, 2015 வரை) அமலில் உள்ளவரை டெபாசிட் வைத்திருப்பவர் திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படலாம்.
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–இன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)-ன் கீழ் மற்றும் வங்கிகள் ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாட்டு உத்தரவுகளை பிரப்பித்துள்ளது. உத்தரவுகளின் ஒருபிரதி பொதுமக்களில் விருப்பமுள்ளவர்கள் பார்வைக்காக வங்கி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மேலே குறிப்பிட்ட உத்தரவுகளை வெளியிட்டதைக் கருத்தில் கொண்டு, வங்கி நடத்துவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து விட்டதாகக் கருதக் கூடாது. இந்திய ரிசர்வ் வங்கி, சூழ்நிலைக்கேற்றவாறு வழிகாட்டு உத்தரவுகளில் திருத்தங்கள் செய்ய முனையும்.
அஜித் பிரசாத்
உதவி மேலாளர்
PRESS RELEASE : 2015-2016 / 642 |