Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (144.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/09/2015
தேசிய நிதியியல் அறிவு மதிப்பீடு தேர்வு 2015-2016 – நவம்பர் 28 -29 அன்று

செப்டம்பர் 15, 2015

தேசிய நிதியியல் அறிவு மதிப்பீடு தேர்வு 2015-2016 – நவம்பர் 28 -29 அன்று

2015 நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் 2015-2016-க்கான தேசிய நிதியியல் அறிவு மதிப்பீடு தேர்வினை (National Centre for Financial Education – National Financial Literacy Assessment Test - 2015-16), தேசிய நிதியியல் கல்வி மையம் (NCFE) நடத்தவுள்ளது. 8-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

நிதித்துறை நெறிமுறையாளர்களான இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் முன்னோக்கிய சந்தை ஆணைக்குழு(FMC) ஆகியவற்றின் ஆதரவுடன், தேசிய பத்திர சந்தைகள் பயிலகம்(NISM), தேசிய நிதியியல் கல்வி மையத்தை(NCFE) அமைத்துள்ளது. இது தேசிய நிதியியல் கல்வி மற்றும் இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய நிதியியலை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்டது. இது தேசிய நிதியியல் கல்வி திட்டத்தின் அமலாக்கத்திற்கு, ஒரு முக்கிய முகைமையாக கண்டறியப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிதியியல் மற்றும் நிதியியல் கல்வி ஆகியவற்றிற்கான பாதையில் ஒரு முக்கிய மைல் கல்லாக தேசிய நிதியியல் அறிவு மதிப்பீடு தேர்வு அமைந்துள்ளது. தேசிய அளவிலான தேர்வை நடத்துவதன் மூலம், தேசிய நிதியியல் கல்வி மையம் நிதியியல் பற்றி தெரிந்துகொள்ள பள்ளி மாணவர்களை (எட்டிலிருந்து பத்துவரை உள்ள வகுப்புகள்) ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர்களது நிதியியல் விழிப்புணர்வை மதிப்பிட்டு, பிற்காலத்தில் நல்ல நிதியியல் முடிவுகளை அவர்கள் எடுப்பதற்கு ஏற்ற திறனை அவர்களிடம் வளர்த்திட முடிவு செய்துள்ளது.

அட்டவணை

2015 செப்டம்பர் 1-லிருந்து NCFE – NFLAT-ற்கான பதிவு தொடங்குகிறது. இது பள்ளிகள் மூலமாகவே ஏற்றுக்கொள்ளப்படும். http://www.ncfeindia.org/nflat என்ற இணையதளத்தின் மூலம் பள்ளிகள் தங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

இதர முக்கிய தேதிகள் பின்வருமாறு:

விபரங்கள் தேதி
பதிவு திறக்கப்படுதல் செப்டம்பர் 1, 2015
பதிவு மூடுதல் அக்டோபர் 17, 2015
தேர்வு நவம்பர் 28 மற்றும் 29, 2015
முடிவுகள் வெளியாதல் டிசம்பர் 16, 2015

தேர்வுக்கான நேர அவகாசம் 60 நிமிடங்கள். இதில் மாணவர்கள் 75 கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டும். இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். நிதி தொடர்பான அடிப்படை கருத்துகள் இடம்பெறும். என்னென்ன தலைப்புகள் பாடத் திட்டத்தில் உள்ளது என்பது http://www.ncfeindia.org/nflat என்ற இணையதளத்தில் உள்ளது.

தேர்விற்கு கட்டணம் எதுவும் இல்லை. மற்றும் பதிவிற்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை.

பள்ளிகளுக்கு:

முதல் 30 பள்ளிகளுக்கு ரூ.25,000/- பணப்பரிசும், கோப்பை / கேடயமும் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு:

NCFE–NFLAT தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, மடிக்கணினிகள், குறுங்கணினிகள், பதக்கங்கள், பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு NCFE இணையதளம் - http://www.ncfeindia.org/nflat

கூடுதல் விசாரணை / தகவலுக்கு தயவு செய்து அணுகவும்:

National Institute of Securities Markets, NISM Bhavan, Plot No. 82, Sector-17, Vashi, Navi Mumbai - 400703, Phone 022-66735100-05 / Fax: 022-66735100-05 / email, website: www.ncfeindia.org., www.nism.ac.in

அல்பனா கில்லாவாலா
முதன்மை தலைமை பொதுமேலாளர்

PRESS RELEASE: 2015-2016 / 677

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்