அக்டோபர் 12, 2015
லக்ஷ்மி விஷ்ணு ஸஹகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரன்ஜி,
கோலாப்பூர், மஹாராஷ்ட்ராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி
பிறப்பித்த வழிகாட்டு உத்தரவுகளைத் திரும்பப் பெறுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, லக்ஷ்மி விஷ்ணு ஸஹகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரன்ஜி, கொல்ஹாபூர் மஹாராஷ்ட்ராவிற்கு மார்ச் 28, 2006 அன்று அளித்த அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டு உத்தரவுகளை அக்டோபர் 12, 2015 அன்று அலுவல் நேர முடிவிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்கிறது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) 1949ன் பிரிவு 35 A-யின் உப பிரிவு (2)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், வழிகாட்டு உத்தரவுகள் திரும்பப்பெறப்படுகின்றன. பொதுமக்களில், விருப்பமுள்ளவர்கள் பார்ப்பதற்கு வசதியாக, வங்கியின் வளாகத்தில், ஆணையின் நகல் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வங்கி, இதன்பிறகு தனது வங்கி அலுவலை வழக்கம்போல் தொடர்ந்திடும்.
சங்கீதா தாஸ்
இயக்குனர்
பத்திரிக்கை வெளியீடு: 2015-2016/886 |