இந்திய ரிசர்வ் வங்கி, ₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை உட்பொதிந்த எழுத்து L உடன் வெளியிடுகிறது |
நவம்பர் 16, 2015
இந்திய ரிசர்வ் வங்கி, ₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை உட்பொதிந்த எழுத்து L உடன் வெளியிடுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை – 2005-இல் ₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை, இருபுறமும் உள்ள வரிசை எண்களில் உட்பொதிந்த எழுத்து L உடன், விரைவில் வெளியிடுகிறது. இந்த நோட்டுகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்களின் கையெழுத்து இருக்கும். மேலும், அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2015“ என்று பின்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, ₹ 1000 வங்கி நோட்டுகளைப் போலவே, கூடுதல் அம்சங்களான - நோட்டில் இருபுற வரிசை எண்களும் வடிவத்தில் ஏறுமுகமாக அமைக்கப்படிருத்தல், சாய்ந்த கோணத்தில் வரிக்கோடுகள், முன்புறத்தில் பெரிதாக்கப்பட்ட அடையாளக் குறியீடு உட்பட - எல்லாவிதத்திலும் ஒத்ததாக அமைந்திருக்கும். இந்த அம்சங்களுடன் கூடிய நோட்டுகள் முதன் முறையாக செப்டம்பர் 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டன.
இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே .
அல்பனா கில்லவாலா
முதன்மை தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2015-2016/1158 |
|