Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (119.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 24/11/2015
தங்கப்பத்திரங்கள் 2015-16

நவம்பர் 24, 2015

தங்கப்பத்திரங்கள் 2015-16

இந்திய ரிசர்வ் வங்கி,இந்தியஅரசுடன்கலந்தாலோசித்துதங்கப்பத்திரங்கள் 2015-16 வெளியீடு குறித்த விவரங்களை IDMD. CDD. No. 939/14.04.050/2015-16, அக்டோபர் 30, 2015 தேதியிட்ட மற்றும் IDMD. CDD. No. 968/14.04.050/2015-16, நவம்பர் 04, 2015 தேதியிட்ட சுற்றறிக்கைகளின் மூலம் அறிவித்தது. இந்த வெளியீட்டின் முதல் தொகுதி, நவம்பர் 5 முதல் நவம்பர் 20, 2015 வரை முதலீட்டிற்காக திறந்திருக்கும். இந்த முதலீட்டுப் பத்திரங்கள் நவம்பர் 26, 2015 அன்று அளிக்கப்படும்.

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக ஏராளமான முதலீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை இந்திய ரிசர்வ் வங்கியின் e-குபேர் கணினி முறைமையில் தளமேற்றம் செய்யவும், குறிப்பாக அஞ்சலகங்கள் சரிவர இவற்றை செயல்படுத்தவும், தங்கப் பத்திரங்கள் வழங்கப்படும் தேதி நவம்பர் 26, 2015-லிருந்து நவம்பர் 30, 2015-க்கு மாற்றப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையிலுள்ள இதர கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றமின்றி தொடரும்.

(அனிருதா D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2015-2016/1236

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்