மார்ச் 29, 2016
இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 1 கரன்சி நோட்டுகளை ரூபாய் (₹) குறியீடு
மற்றும் உட்பொதிந்த “L” எழுத்துடன் விரைவில் வெளியிட உள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் விட உள்ளது. அந்த நோட்டுகள் இந்திய அரசாங்கத்தால் அச்சிடப்பட்டுள்ளன.
நாணயச் சட்டம் 2011–ன்படி இந்த கரன்சி நோட்டுகள் சட்டபடி செல்லுபடியாகும். இந்த மதிப்பிலக்கத்தில், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்.
நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையால் வெளியிடப்பட்ட பிப்ரவரி 22, 2016 தேதியிட்ட அறிவிக்கை எண் G.S.R. 192 (E)-ல் இந்திய அரசிதழ் அசாதாரண பகுதி II, பிரிவு 3, உபபிரிவு (i) எண் 124, பிப்ரவரி 24, 2016-ல் பிரசுரிக்கப்பட்டதில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு ரூபாய் நோட்டின் வடிவம் மற்றும் பரிமாணங்கள் பின்வருமாறு அமைந்திருக்கும்.
ஒரு ரூபாய் நோட்டின் அமைப்பும் உள்ளடக்கமும் –
நோட்டின் மதிப்பிலக்கம் |
வடிவமும் அளவும் |
தாள் உள்ளடக்கம் |
ஒரு ரூபாய் கரன்சி நோட்டு |
செவ்வகம்
9.7 X 6.3 cm. |
100 சதவீதம் (பருத்தி) கூழால் ஆனது |
|
தாளின் எடை |
90 GSM (Grams per Square Meter) ஒரு சதுர மீட்டருக்கான கிராம்கள் +/- 3 GSM உறுதித் தன்மை |
|
தாளின் தடிமன் |
110 மைக்ரான்கள் |
|
பல்திசை நீர்க்குறியீடுகள் |
i) सत्यमेव जयते என்ற வார்த்தைகள் இன்றி சாளரத்தில் அசோகா தூண்
ii) மையத்தில் மறைந்திருக்கும் எண் “1“
iii) வலது பக்கத்தில் நெடுக்காக மறைந்திருக்கும் “भारत“ என்ற வார்த்தை |
ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகளின் வடிவமைப்பு கீழ்க்கண்டவாறு –
(1) முன்புறம் – “भारत सर्कार” என்ற வார்த்தைகள் “Government of India” என்ற வார்த்தைகளுக்கு மேல் இருக்கும். இதோடு நிதித்துறை செயலர் ஸ்ரீ. ரதன் P.வடால் அவர்களின் கையெழுத்து இரண்டு மொழிகளிலும் இடம் பெற்றிருக்கும். மேலும், 2016-ம் ஆண்டின் புதிய ஒரு ரூபாய் நாணயத்தின் அச்சு அசல் வடிவமும் ₹ சின்னம் மற்றும் “सत्यमेव जयते” – ம் வரிசை எண்கள் பகுதியில் பெரிய எழுத்தில் “L” என்ற ஆங்கில எழுத்தும் இருக்கும். நோட்டின் வலது கீழ்புறம் எண்கள் கருப்பு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
(2) பின்புறம் - “भारत सर्कार” என்ற வார்த்தைகள் “Government of India” என்ற வார்த்தைகளுக்கு மேல் இருக்கும். ரூபாய் நாணயத்தின் வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் ₹ குறியீட்டுடன் பூக்களுடன் கூடிய வடிவமைப்பு இருக்கும். அதைச் சுற்றி எண்ணெய்த் துரப்பண ஆராய்ச்சி மேடை வடிவமான “சாகர் ஸாம்ராட்”டின் படமும் இருக்கும். இவற்றோடு ரூபாயின் மதிப்பானது உறுதியாக, பதினைந்து இந்திய மொழிகளில், மொழிகளுக்கான முகப்பில் காட்டப்பட்டிருக்கும். மையப் பகுதியின் கீழ்ப்புறம் சர்வதேச எண்ணில், ஆண்டு 2016 என்று அச்சிடப்பட்டிருக்கும்..
(3) ஒட்டுமொத்த நிறத்தொகுப்பு – ஒரு ரூபாய் கரன்சி நோட்டின் நிறம் முன்புறம் பெருவாரியாக ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும், பின்புறம் மற்ற நிறக் கலவையிலும் இருக்கும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரகை வெளியீடு 2015-2016/2282 |