மே 09, 2016
இந்திய ரிசர்வ் வங்கி உட்பொதிந்த “R” என்ற எழுத்துடன்
₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை வெளியிடுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, ₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை மகாத்மா காந்தி வரிசை 2005ல் இரண்டு பக்க எண்கள் பகுதிகளிலும், “R” என்ற உட்பொதிந்த எழுத்துடன் விரைவில் வெளியிடுகிறது. இந்த வங்கி நோட்டுகள் முன்பக்கத்தில் மற்ற பாதுகாப்பு அம்சங்களான ஏறுமுக அளவிலான எண்கள், சாய்ந்த வரிக்கோடுகள், பெரிதாக்கப்பட்ட அடையாளக் குறியீடு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்களின் கையெழுத்து ஆகியவைகளுடன் இருக்கும். இந்த வங்கி நோட்டுகளின் பின்புறம் “2016“ என்று ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும்.
தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு எல்லாவிதத்திலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, ₹ 1000 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும்.
இதற்கு முன் ரிசர்வ் வங்கியால் வெளியிட்ட அனைத்து ₹ 1000 மதிப்பிலக்கத்திலான வரிசை எண்கள் பகுதியில் ஏறுமுக அளவில் எண்களைக் கொண்ட, ஆனால் சாய்ந்த வரிக்கோடுகள் மற்றும் பெரிதாக்கப்பட்ட அடையாளக் குறியீடு இல்லாத அனைத்து வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2015-2016/2611 |