ஏப்ரல் 20, 2016
இந்திய ரிசர்வ் வங்கி உட்பொதிந்த “L” என்ற எழுத்துடன்
₹ 100 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை வெளியிடுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை 2005 ஆம் ஆண்டு வங்கி நோட்டுகளை கூடுதல் / திருத்தப்பட்ட மாற்றங்களுடன், ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் வரிசை எண்களுக்கான இரு பகுதிகளிலும் “L” என்ற உட்பொதிந்த எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2015“ என்று அச்சிடப்பட்ட நோட்டுகளை ₹ 100 மதிப்பிலக்கத்தில் விரைவில் வெளியிடுகிறது.
இப்பொழுது வெளியிடப்படும் வங்கி நோட்டுகளின் வடிவம் மற்றும் அனைத்து அம்சங்களும் முன்னர் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை 2005, ₹ 100 வங்கி நோட்டுகளை ஒத்தவையாக இருக்கும். எனினும், இந்த நோட்டுகள் முன்பக்கத்தில் வரிசை எண்கள் பகுதியில் ஏறுமுக அளவுகொண்ட எண்களையும், சாய்ந்த வரிக்கோடுகளையும் மற்றும் பெரிதாக்கப்பட்ட அடையாளக் குறியீட்டையும் கொண்டிருக்கும். இத்தகைய ₹ 100 வங்கி நோட்டுகள், மேலே குறிப்பிட்ட மூன்று அம்சங்களுடன் (எனினும், வேறு உட்பொதிந்த எழுத்துடன்) ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 100 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை, எண்கள் பகுதியில், ஏறுமுக அளவு எண்களோடு, ஆனால் சாய்ந்த வரிக்கோடுகள் மற்றும் பெரிதாக்கப்பட்ட அடையாளக் குறியீடு ஆகியவை இன்றி வெளியிட்டது. இந்த வங்கி நோட்டுகள், இப்பொழுது வெளியிடப்படும் வங்கி நோட்டுகளுடன் இணைந்து புழக்கத்தில் இருக்கும்.
இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 100 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2015-2016/2454 |