ஜூலை 01, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, கம்போடிய தேசிய வங்கியுடன் “மேற்பார்வை
கூட்டுறவு மற்றும் மேற்பார்வை தகவல் பரிமாற்றம்“ தொடர்பாக
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, கம்போடிய தேசிய வங்கியுடன் “மேற்பார்வை கூட்டுறவு மற்றும் மேற்பார்வை தகவல் பரிமாற்றம்“ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கம்போடியாவின் தேசிய வங்கி சார்பில், வங்கி மேற்பார்வைத் துறையின் தலைமை இயக்குனர், H.E. கிம் வடா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அதன் செயல் இயக்குனர் திருமதி மீனா ஹேமசந்திரா ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நாடுகள் இடையே அதிக அளவிலான கூட்டுறவு மற்றும் மேற்பார்வை தொடர்பான தகவல் பகிர்வு ஆகியவற்றின் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி, சில நாடுகளின் மேற்பார்வையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மேற்பார்வை கூட்டுறவுக்கான கடிதம் மற்றும் மேற்பார்வையாளர்கள் உடனான ஒத்துழைப்பு அறிக்கை ஆகியவைகளில் ஈடுபடுகிறது.. இவ்வாறாக, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் மேற்பார்வை கூட்டுறவுக்கான ஒரு கடிதத்திலும் மற்றும் கூட்டுறவுக்கான ஒரு அறிக்கையிலும் கையெழுத்திட்டுள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு:2016–17/15 |