ஆகஸ்டு 26, 2016
இந்திய ரிசர்வ் வங்கியின் விவசாய வங்கியியல் கல்லூரி-
நிகழ்வு எழுதும்போட்டி- 2016-ன் முடிவுகளை வெளியிடுகிறது
2016 - கதை / நிகழ்வு எழுதும்போட்டி.ன் முடிவுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் விவசாய வங்கியியல் கல்லூரி வெளியிடுகிறது.
பரிசுக்குரிய நிலை |
பங்கேற்பாளரின் பெயர் |
பதவி |
வங்கி |
முதல் |
Ms. மௌலி சஞ்சய் போடிவாலா |
மேலாளர் |
கலுப்பூர் வர்த்தக கூட்டுறவு வங்கி |
இரண்டாம் |
Mr. விநீத் குமார் ஜெயின் |
முதுநிலை மேலாளர் |
பாங்க் ஆஃப் பரோடா |
முன்றாம் |
Ms. சுப்ரியா சஹா |
உதவி மேலாளர் |
பாங்கியா கிராமின் விகாஸ் வங்கி |
“MSME (சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்) க்குப் புதுவித வழிகளில் கடன் கொடுப்பது“ என்பது குறித்து ஒரு நிகழ்வு எழுதும் போட்டியை பிப்ரவரி 2016-ல் வங்கியியல் கல்லூரி அறிவித்திருந்தது. பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதிநிறுவனங்கள். வங்கியியல், கல்வித்துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய நடுவர் குழு பங்கேற்பாளர்கள் எழுதிய கட்டுரைகளைப் பின்வரும் மூன்று விஷயங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்தது. (a) எழுதப்பட்ட நிகழ்வு / கதை மற்ற வங்கிகளுக்கும் உணர்வூட்டக் கூடியது (மதிப்பீடு 50%), (b) கற்பனை வளத்துடன் சொந்தமாகத் தீர்வுகள் அளிக்கப்படுதல் (மதிப்பீடு 25%) மற்றும் (c) எழுதப்பட்டவிதம், மொழி நடை, தெளிவு (மதிப்பீடு 25%).
வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ. 20,000/-, இரண்டாம் பரிசாக ரூ. 15,000/-, முன்றாம் பரிசாக ரூ. 10,000/- ரொக்கமாக வழங்கப்படும்.
அல்பனா கில்லவாலா
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/516 |