ஆகஸ்டு 25, 2016
பாரத ஸ்டேட் (SBI) வங்கி மற்றும் ஐசிஐசிஐ (ICICI) வங்கிகயை 2016-ல்
உள்நாட்டில் முறைமையில் முக்கிய வங்கிகளாக (Domestic-Systemically
Important Banks-DSIBs) இந்திய ரிசர்வ் வங்கி அடையாளப்படுத்துகிறது
இந்திய ரிசர்வ் வங்கி 2016-ம் ஆண்டிற்காக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியை உள்நாட்டில் முறைமையில் முக்கிய வங்கிகளாக (D-SIBs) அறிவிக்கிறது. சென்ற ஆண்டில் இருந்ததைப் போன்றே அவை தங்களின் சொத்து/ கடன் பொறுப்பு கால அளவு நிலைப்பாடுகளைப் பராமரிக்கலாம். அவைகளுக்குத் தேவையான கூடுதல் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஏப்ரல் 01, 2016 முதல் சீராக அமலாக்கப்பட்டு, ஏப்ரல் 01, 2019-ல் செயலாக்கம் பெறும். பொதுமூலதன முதல் அடுக்கில் (Common Equity Tier-1 – CET-1) கூடுதல் தேவைகளோடு, மூலதனப் பாதுகாப்பிற்காகவும் இவ்வங்கிகள் கூடுதல் மூலதனம் வைத்திருப்பது அவசியமாகும்.
2016-ம் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல்
பக்கெட் |
வங்கிகள் |
பொது மூலதன அடுக்கு-1 (CET-1) ல் தேவைப்படும் கூடுதல் மூலதனம்- இடர்வரவிற்கான மதிப்பூட்டப்பட்ட சொத்துக்கள் (Risk Weighted Assets-RWAs) சதவிகிதமாக |
5 |
- |
1.0% |
4 |
- |
0.8% |
3 |
பாரத ஸ்டேட் வங்கி (SBI) |
0.6% |
2 |
- |
0.4% |
1 |
ஐசிஐசிஐ (ICICI) வங்கி |
0.2% |
பின்புலம்
உள்நாட்டில் முறைமையில் முக்கிய வங்கிகளை அறிவிப்பதற்கான வரையுரு ஒன்றை ஜூலை 22, 2014 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டில் முறைமையில் முக்கிய வங்கிகளைக் கண்டறிந்து வெளியிடவேண்டும். 2015-லிருந்து இது தொடங்கியது. அந்தந்த வங்கிகள் பெற்றுள்ள மதிப்பீடுகளைப் பொறுத்து அவை நான்கு பக்கெட்டுகளாக (பொறுப்பு / சொத்து கால அளவை-) வகைப்படுத்தப்படும். அவை எந்தெந்த பக்கெட்டுகளில் இடம்பெறுகின்றதோ அதற்கேற்ப அவைகளின் முதல் அடுக்கு மூலதனம் அதிகரிக்கப்படவேண்டும். மேலும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அந்நிய நாட்டு வங்கி இந்தியாவில் இடம் பெறுமானால், அதன் இலக்கணப்படி, தேவையான அளவிற்கு அதன் காலஅளவு கோட்பாட்டிற்கேற்ப, கூடுதல் மூலதனத் தேவையை இந்தியாவிலுள்ள அதன் சொத்து பொறுப்புகளின் கூட்டப்பட்ட இடர்வரவு மதிப்பீடுகளுக்கேற்ப அதிகரித்து, பூர்த்தி செய்திடவேண்டும்.
முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான (D-SIB) வரையுருவில் காட்டப்பட்டுள்ள செயல்பாட்டின் அடிப்படையிலும் மார்ச் 31, 2015 அன்றுவரை வங்கிகளிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையிலும், இந்திய ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) வங்கியை ஆகஸ்ட் 31, 2015 அன்று முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக (D-SIBs) அறிவித்தது.
இவ்வாண்டும் வரையுருவின் அடிப்படையிலும் மார்ச் 31, 2016-வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் இந்த மேற்குறிப்பிட்ட இரு வங்கிகளும் உள்நாட்டில் முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக (D-SIBs) மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அல்பனா கில்லவாலா
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/495 |