செப்டம்பர் 16, 2016
இந்திய ரிசர்வ் வங்கியிடம் மூன்று வங்கிசாரா நிதிநிறுவனங்கள்
தாங்களாகவே முன்வந்து தங்கள் பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்துள்ளன
இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை, பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், தாமாகவே முன்வந்து, திருப்பியளித்துள்ளன.,. ஆகவே இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ன் சட்டப்பிரிவு 45-IA (6) -ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி பின்வரும் நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துவிட்டது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ஸ்ரிங்கரிகா பைனான்ஸ் & லீஸிங் பிரைவேட் லிமிடெட் |
C-8, கிழக்குக் கைலாஷ், புதுதில்லி-110065 |
B-14.02754 |
நவம்பர் 29, 2002 |
ஜூலை 28, 2016 |
2. |
M/s. அரசி பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
99, ராஜாஜி வீதி கரூர் 639001 |
B-07.00471 |
அக்டோபர் 17, 2000 |
ஆகஸ்டு 29, 2016 |
3. |
M/s. சூரியசக்தி கம்மாடிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் |
ஜாஸ்மின் டவர், மூன்றாவது தளம்,
31, ஷேக்ஸபியர் சாரணி, கொல்கத்தா-700017 |
B-05.06133 |
பிப்ரவரி 10, 2004 |
ஆகஸ்டு 25, 2016 |
எனவே, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I (a)-ல் குறிப்பிட்டபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/690
|