அக்டோபர் 20, 2016
இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் அக்ரிகோல் கார்பரேட் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் வங்கி (இந்தியா) மீது அபராதம் விதிக்கிறது
வங்கிகள் ஒழுங்கு முறைச் சட்டத்தின் பிரிவு எண் 6-ல் உள்ள கருத்துக்களை மீறி நடந்ததற்காக அதே சட்டத்தின் பிரிவு எண் 47 (A) (1) (c) மற்றும் 46 (4) (i)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் அக்ரிகோல் கார்பரேட் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் வங்கி (இந்தியா) மீது ரூ. 10 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
கிரெடிட் அக்ரிகோல் சிஐபி சர்வீஸஸ் (பி) லிட். என்ற வெளியார் கம்பெனிக்கு சில பல சேவைகள் புரிந்து அதன்மூலம் கட்டணம் வசூலித்து மேற்குறிப்பிட்ட வங்கி வரவு ஈட்டியுள்ளது. இந்த செயல்பாடுகள் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (பிரிவு எண் 6 (1))-ன் மூலம் தடைசெய்யப்பட்டவை. இதற்கு விளக்கமளிக்கக் கோரி இந்த வங்கிக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.
வங்கி அளித்த பதில், நேரிடையாக அளித்த விளக்கங்கள், பதிவேட்டிலுள்ள ஆவணங்கள் இவற்றை ஆய்ந்து பார்த்ததில், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவினை மீறியது உறுதிபடுத்தப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
(அஜித் பிரசாத்) உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/979
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்