மாவட்ட, மத்தி கூட்டுறவு வங்கிகள் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களை ரூ. 24,000 வரை அவரவர் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி |
நவம்பர் 14, 2016
மாவட்ட, மத்தி கூட்டுறவு வங்கிகள் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களை
ரூ. 24,000 வரை அவரவர் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கலாம் –
இந்திய ரிசர்வ் வங்கி
நவம்பர் 24, 2016 வரை நடப்பிலுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து வாரம் ஒன்றிற்கு ரூ. 24,000/- பணம் எடுத்திட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனுமதிக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆயினும், அவை குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை (ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள்) மாற்றித்தரவோ, டெபாசிட்டில் ஏற்றுக் கொள்ளவோ கூடாது. ஆகவே, அனைத்து வங்கிகளும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தத்தம் கணக்கிலிருந்து தேவைக்கேற்ப பணம் எடுக்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிற வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு, இந்த வரம்பான ஒரு வாரத்திற்கு ரூ. 24,000 என்பது பொருந்தாது.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016-17/1198 |
|