நவம்பர் 20, 2016
இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு உத்தரவுகள் –
லோக் சேவா சஹகாரி பேங்க் லிட்., புனே, மஹாராஷ்ட்ரா
லோக் சேவா சஹகாரி பேங்க் லிட்., புனே, மஹாராஷ்ட்ரா, மே 20, 2014 அலுவல் நேர முடிவிலிருந்து 6 மாத காலம் வரை கட்டுப்பாட்டு உத்தரவு தேதி மே 19, 2014-ன்படி நடக்க ஆணையிடப்பட்டது. அந்த ஆணையின் காலம் 4 முறைகள், 6 மாதங்களுக்கு முறையே நவம்பர் 12, 2014, மே 06, 2015, நவம்பர் 04, 2015 மற்றும் மே 13, 2016 தேதியிட்ட ஆணைகள் மூலம் நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், மே 19, 2014 தேதியிட்ட ஆணையுடன், நவம்பர் 12, 2014, மே 06, 2015, நவம்பர் 04, 2015 மற்றும் மே 13, 2016 தேதியிட்ட ஆணையையும் சேர்த்துப்படிக்கவும். இந்த வங்கியின் மீதான கட்டுப்பாட்டு காலம் மறுஆய்வுக்கு உட்பட்டு, நவம்பர் 20, 2016 முதல் மே 19, 2017 வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, நவம்பர் 11, 2016 தேதியிட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதர கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றமின்றி அனுசரிக்கப்படும். நவம்பர் 11, 2016 தேதியிட்ட, மேற்குறிப்பிட்ட திருத்தத்தை காட்டும் உத்தரவின் நகல், பொதுமக்கள் பார்வைக்கு அந்த வங்கியின் கட்டிடத்தில் வைக்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட திருத்தத்தை செய்துள்ளது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் நிதிநிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதென, இந்திய ரிசர்வ் வங்கி திருப்தியடைந்துவிட்டதாகக் கருத முடியாது.
(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர் பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/1256 |