நவம்பர் 07, 2016
இந்திய ரிசர்வ் வங்கியின் திரு. M. ராஜேஷ்வர் ராவ் அவர்களைப் புதிய
நிர்வாக இயக்குநராக நியமிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து திரு. G. மகாலிங்கம் அவர்கள் விருப்ப ஓய்வில் சென்றதையொட்டி, திரு. M. ராஜேஷ் ராவ் அவர்களை புதிய நிர்வாக இயக்குநராக இந்திய ரிசர்வ் வங்கி நியமிக்கிறது. திரு. M. ராஜேஷ் ராவ் அவர்கள் புள்ளி விவரம் மற்றும் தகவல் மேலாண்மைத்துறை, நிதியியல் சந்தை செயல்பாட்டுத்துறை, சர்வதேசத்துறை ஆகியவற்றின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வார். நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்பதற்கு முன் திரு. M. ராஜேஷ் ராவ் அவர்கள் நிதியியல் சந்தை செயல்பாட்டுத்துறையின் தலைமைப் பொதுமேலாளராகப் பணியாற்றினார்.
திரு. M. ராஜேஷ் ராவ் அவர்கள் பொருளாதாதரத்தில் இளங்கலைப் பட்டமும், கொச்சி பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கர்ஸின் சர்டிபைடு அஸோஸியேட் மெம்பரும் ஆவார்.
திரு. M. ராஜேஷ் ராவ் அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் 1984-ல் பணியில் சேர்ந்தார். மைய வங்கிப் பணிகளில் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர். இடர்வரவு கண்காணிப்புத்துறையின் பொறுப்பாளராகவும் இருந்தார். வங்கிக் குறைதீர்ப்பாளராக புதுதில்லியில் பணியாற்றியுள்ளார். மேலும் அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, புதுதில்லி போன்ற மண்டல அலுவலகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1127 |