அக்டோபர் 01, 2016
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A)-ன்கீழ் அஜின்க்யாத்ரா சஹகாரி வங்கி லிமிடெட், சதாரா, மஹாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் நீட்டிப்பு
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A) (1)-ன்கீழ் அஜின்க்யாத்ரா சஹகாரி வங்கி லிமிடெட், சதாரா, மஹாராஷ்டிராவிற்கு செப்டம்பர் 28, 2015 தேதியிட்ட (உத்தரவு எண் DCBS Co.
BSD-1 No. D-1912.22.328/2015-16) உத்தரவின்படி செப்டம்பர் 30, 2015 (வேலைநேரம் முடிந்தபின்) முதல் 6 மாதங்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த வழிகாட்டியின் செயல்பாட்டுக் காலம் மார்ச் 29, 2016 தேதியிட்ட உத்தரவின் மூலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பொதுமக்களுக்காக, இப்போது தெரிவிப்பது என்னவென்றால் செப்டம்பர், 28, 2015 அன்று அஜின்க்யாத்ரா சஹகாரி வங்கி லிமிடெட் வங்கிக்கு வழங்கப்பட்ட உத்தவை, மார்ச் 29, 2016 தேதியிட்ட உத்தரவுடன் சேர்த்துப்படித்து, அவ்வழிகாட்டுதல்களின் அமலாக்கக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு மார்ச் 30, 2017 வரை நீட்டிக்கப்படுகிறது என்பதை அறியவும். இதற்கான உத்தரவு எண் DCBR CO. AID/D-08/12.22.328/2015-16, செப்டம்பர் 28, 2016 (மறு ஆய்வுக்குட்பட்டது)-ஐப் பார்க்கவும். இந்த உத்தரவில் உள்ள இதர கட்டளைகள் நிபந்தனைகளில் மாற்றமில்லை. செப்டம்பர் 28, 2016 தேதியிட்ட உத்தரவின் நகல் பொதுமக்கள் பார்வைக்கு வங்கியின் கட்டிடத்தில் வைக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இந்தத் திருத்தம் செய்யப்பட்டதையொட்டி, இந்த வங்கியின் நிதிநிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி திருப்தியடைந்துவிட்டதென்று கருதக்கூடாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/829 |