டிசம்பர் 04, 2016
உட்பொதிந்த “L” எழுத்துடன், நோட்டின் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக,
தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாமல் ₹ 20 மதிப்பிலக்க வங்கி
நோட்டுகள் வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை வங்கி நோட்டுகளில், ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் இரு பக்க வரிசை எண்களிலும் உட்பொதிந்த “L” எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சிடும் ஆண்டு “2016“ என்பது அச்சடிக்கப்பட்ட ₹ 20 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.
இந்த நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், பத்திரிக்கை வெளியீட்டு எண் 2016-2017/1004 ன் மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005 ஐ சார்ந்த, இருபக்கமும் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக உள்ள, தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாமல் வெளியிடப்பட்ட ₹ 20 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும்.
இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/1402 |