டிசம்பர் 14, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, சன்மித்ரா சஹகாரி வங்கி மரியாதித், மும்பை, மஹாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, ஜுன் 14, 2016 தேதியிட்ட உத்தரவின்படி சன்மித்ரா சஹகாரி வங்கியை (மரியாதித், மும்பை, மஹாராஷ்டிரா), ஜுன் 14, 2016 முதல் (வேலைநேர முடிவிலிருந்து) 6 மாதங்களுக்கு கட்டுப்பாட்டுகளின் கீழ் வைக்கிறது. மறு ஆய்வுக்கு உட்பட்டு மேற்படி உத்தரவு திருத்தப்பட்டு, டிசம்பர் 07, 2016 தேதியிட்ட உத்தரவின்படி மேலும் 6 மாதங்களுக்கு டிசம்பர் 15, 2016 முதல் ஜுன் 14, 2017 வரை நீட்டிக்கப்பட்டு அமலாக்கம் செய்யப்படுகிறது. இந்த உத்தரவில் உள்ள இதர கட்டளைகள், நிபந்தனைகளில் மாற்றமில்லை. இந்த உத்தரவின் நகல், விருப்பமுள்ள பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வங்கிக் கட்டிடத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவுகள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்த வங்கியின் நிதிநிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதென்று, இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1523 |