இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 500 கரன்சி நோட்டுகளை உட்பொதிந்த “R” எழுத்துடன் வெளியிட உள்ளது |
டிசம்பர் 19, 2016
இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 500 கரன்சி நோட்டுகளை
உட்பொதிந்த “R” எழுத்துடன் வெளியிட உள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி (புதிய) வரிசை வங்கி நோட்டுகளில் ஆளுநர் Dr. உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், ஒரு புதிய தொகுதி நோட்டுகளை, நோட்டின் எண்களுக்கான இரு பகுதிகளிலும் உட்பொதிந்த “R” எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சிடும் ஆண்டு “2016“ என்பது அச்சடிக்கப்பட்ட ₹ 500 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.
டிசம்பர் 08, 2016 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டு எண் 2016-2017/1461 - ல் குறிப்பிடப்பட்டிருந்தது போலவே, எல்லா வகையிலும் இந்த ரூ. 500 நோட்டுகளின் வடிவமைப்பு அமைந்திருக்கும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரகை வெளியீடு 2016-2017/1576 |
|